திருச்சி கிழக்கில் ஸ்டாலின் போட்டியா? நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்! திமுகவினர் உற்சாகம்
சென்னை: நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் பெரம்பூர் உள்பட 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜய் திருச்சி கிழக்கில் ராஜினாமா செய்தார். விஜய்யின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் மு.க ஸ்டாலினை போட்டியிட செய்வது என திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின், தவெக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் வி.எஸ். பாபுவிடம் 8 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.

மு.க ஸ்டாலின் தோல்வி
நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. திமுக மற்றும் அதிமுக பெரும் தோல்வியை சந்தித்தன. இதில் தவெக சார்பில் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார். எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்பதற்கு முன்பு அவர் அந்த 2 தொகுதிகளில் ஒன்றை ராஜினாமா செய்ய வேண்டும்.
அதன்படி திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் ராஜினாமா செய்தார். விஜய்யின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து விஜய் வெற்றி பெற்றிருந்த திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க தமிழக முன்னாள் முதல்வர் மு.க ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வியடைந்தார். எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளர் வி எஸ் பாபுவிடம் 8 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தார் ஸ்டாலின்.
திருச்சி கிழக்கில் மு.க ஸ்டாலின் போட்டி
இதனால் எதிர்க்கட்சி தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதேபோல் திமுகவின் திருச்சி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார்.
மாவட்டச் செயலாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலை வகித்திருந்தார். உதயநிதி ஸ்டாலினை சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக நியமித்ததற்காக மு.க. ஸ்டாலினுக்கு இந்த கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் திருச்சி கிழக்கு தொகுதியில் ஸ்டாலின் மீண்டும் போட்டியிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இடைத்தேர்தல் எப்போது?
மேலும் திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், மணப்பாறை ஆகிய மூன்று தொகுதிகளிலும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் வாக்களித்த மக்களுக்கு நன்றி கூறப்பட்டது. தமிழ்நாடு சட்டசபையின் முதன்மைச் செயலாளர் சீனிவாசன் இத்தொகுதியை காலியானதாக அறிவித்தார். அடுத்த ஆறு மாதங்களுக்குள் தேர்தல் ஆணையம் இந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தலை நடத்தும். ஆகஸ்ட் மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
மகாராஷ்டிராவை பாருங்க.. தமிழ்நாட்டிலும் இதேமாதிரி செய்யனும்! விஜய்க்கு ஐடியா கொடுத்த அன்புமணி ராமதாஸ் -
”ஆபரேசன் அக்னி கலசம்” வன்னியர் ஓட்டுகளை அள்ளுவது எப்படி? விஜய் அமைத்த வியூகம்! பரபரப்பான ’நார்த்’ -
வாத்தி கம்மிங்.. மீண்டும் டெல்லிக்கு பறக்கும் விஜய்! ’மேலிட’ தலைவர்களை சந்திக்க வாய்ப்பு! பரபர களம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
பெண்களின் பாதுகாப்பிற்கு புதிய அரண்.. ஜூன் 9ல் சிங்கப்பெண் அதிரடி படையை களமிறக்கும் முதல்வர் விஜய்! -
விஜய் தவெகவின் ‘வெற்றி டிவி’? டெல்லியில் டிரேடுமார்க் விண்ணப்பம்! களமிறக்கப்படும் பிரம்மாண்ட திட்டம் -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
இந்தியா கூட்டணியில் மிஸ்ஸான விஜய் கட்சி.. காங்கிரஸ் ஒன்னு சொல்ல.. திருமா வேற சொல்ல..! பெரிய குழப்பம் -
“வல்லாரை கீரை சாப்பிடுங்க விஜய்”.. முதல்வருக்கு தபாலில் அனுப்ப வந்த 3 பேர் கைது! -
"சுடுகாடு பக்கத்துல டாஸ்மாக் வையுங்க CM சார்!" – விஜய்யிடம் பார்த்திபனின் 'சைக்கலாஜிக்கல்' அஸ்திரம் -
திருச்சி கிழக்கு விஜய் வென்ற தொகுதி.. அங்கு காங்கிரஸ் போட்டியிடாது.. ராஜேஷ் குமார் திட்டவட்டம்! -
இதெல்லாம் நம்ப மாட்டேன்.. ஸ்டாலின் 'டபுள் செக்' அதிரடி! திமுகவில் நடுங்கும் தலைகள்.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications