லீமா ரோஸ் பதவியை பறிக்காதது ஏன்? அதிமுக யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது? வைரலாகும் பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: லீமா ரோஸ் அதிமுகவில் மீண்டும் கவனிக்கப்பட்டு வருகிறார்.. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையில் லீமா ரோஸ் மார்ட்டின் விவகாரம் அரசியல் வட்டாரத்தில் மறுபடியும் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. தவெக அரசுக்கு ஆதரவளித்த மற்ற நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுத்த கட்சித் தலைமை, லீமா ரோஸ் மார்ட்டின் மீது மட்டும் ஏன் மெத்தனம் காட்டுகிறது என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன..!!!

அன்று தவெக அரசுக்கு ஆதரவளித்த 144 பேரில், அதிமுகவின் சி.வி.சண்முகம் தலைமையிலான 25 சட்டமன்ற உறுப்பினர்களும் அடங்குவார்கள். இதில் லால்குடி தொகுதியில் போட்டியிட்டு 60,795 வாக்குகள் பெற்று, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தவெக வேட்பாளரான கு.ப.கிருஷ்ணனை 2,737 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்த லீமா ரோஸ் மார்ட்டினும் ஒருவர். அதாவது 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிகமாக சொத்து மதிப்பு கொண்ட வேட்பாளர் இவர்தான்.

Leema Rose

அதிமுக கொறடாவின் உத்தரவை மீறி தவெக அரசுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், ஆர்.பாஸ்கர் உள்ளிட்ட 29 பேரை அதிமுகவின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கி, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருந்தார்.

லீமா ரோஸ் மார்ட்டின்

ஆனால் இவ்வளவு பெரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டபோதும், தவெகவுக்கு ஆதரவளித்த லீமா ரோஸ் மார்ட்டின் மீது எந்த நடவடிக்கையும் அப்போது பாயவில்லை. இப்போதுவரை, அதிமுக மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் பதவியில் அவர் தொடர்ந்து நீடித்து வருவதைதான் சோஷியல் மீடியாவில் பலரும் கவனித்து கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மகளிர் அணியின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கட்சியின் உட்கட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்த இக்கூட்டத்தில் லீமா ரோஸ் மார்ட்டின் கலந்துகொண்டார்.

அதிமுக எடப்பாடி பழனிசாமி

தவெகவுக்கு எதுக்காக ஆதரவு தந்தீர்கள் என்று லீமா ரோஸிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு "தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜய் மிகவும் நன்றாக ஆட்சி நடத்தி வருகிறார். தமிழ்நாட்டில் கண்டிப்பாக மாற்றம் வரும், மகளிரும் மிகவும் சந்தோஷமாக இருக்கிறார்கள்" என்று தெரிவித்திருந்தது நினைவிருக்கலாம்.

இந்நிலையில், லீமா ரோஸ் மார்ட்டின் மீதான நடவடிக்கை குறித்து அரசியல் விமர்சகரும், மூத்த பத்திரிகையாளருமான என். பொன்குமரகுருபரன் தன்னுடைய சோஷியல் மீடியா பக்கத்தில் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.

யார் control-லில் அதிமுக?

அந்த பதிவில் உள்ளதாவது: "யார் control-லில் அதிமுக? இன்று நடைபெற்ற அதிமுக மகளிரணி கூட்டத்துக்கு, மகளிரணி இணைச் செயலாளரான, லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் வந்திருந்தார்.

வேடிக்கை என்னவென்றால், #TVK-வுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக MLA-க்களின் கட்சிப் பதவிகளை பறித்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி. வேலுமணி, தங்கமணி தொடங்கி அவர்களுடைய ஆதரவாளர்கள் பலருடைய கட்சிப் பதவிகளும் பறிக்கப்பட்டுள்ளன. இதுவரை, அவர்களுக்கு எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை.

லீமா ரோஸ் மார்ட்டின்

#TVKVijay-க்கு ஆதரவளித்த 25 MLA-க்கள் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி சபாநாயகரிடம் கடிதமும் அளித்தார் எடப்பாடி. அப்படி, அவர் நடவடிக்கைக் கோரிய அதிமுக MLA-க்களில், லீமா ரோஸ் மார்ட்டினும் ஒருவர்.

தனக்கு எதிராக போர்க்கொடி தூக்கியவர்களின் கட்சி பதவிகளை பறித்த எடப்பாடி பழனிசாமி , TVK-க்கு ஆதரவாக வாக்களித்த லீமா ரோஸின் கட்சிப் பதவியை மட்டும் இன்னும் பறிக்கவில்லை @EPSTamilNadu. அப்படியென்றால் கட்சி யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது... கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியா, இல்லை லாட்டரி அதிபர் மார்ட்டினா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்..

டபுள் கேள்வி - வைரலாகும் பதிவு

அதாவது குமரகுருபரன் என்ன சொல்ல வருகிறார் தெரியுமா? தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்த மற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுத்த எடப்பாடி பழனிசாமி, லீமா ரோஸ் மார்ட்டின் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வியை பொன்குமரகுருபரனும் இன்று எழுப்பியிருக்கிறார்..

அதேபோல கட்சிக்குள் ஒழுங்கு நடவடிக்கையில் ஒரே மாதிரியான அணுகுமுறை பின்பற்றப்படுகிறதா என்பதையும் அவர் கேள்விக்குள்ளாக்கியுள்ளார். அந்தவகையில் பொன்குமரகுருபரனின் பதிவு தவெக, அதிமுகவில் மிகுந்த கவனத்தை பெற்று வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+