100 அடி சுனாமி! மெகா பூகம்பம் ஏற்பட்ட 5வது நிமிடத்தில் ஜப்பானை தாக்க போகும் பேரழிவு! புது எச்சரிக்கை
டோக்கியோ: ஜப்பான் நாட்டில் கடந்த திங்கள்கிழமை முதலில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், சிறிய சுனாமியும் தாக்கியது. இதையடுத்து ஒரே வாரத்தில் ஒரு மாபெரும் நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என ஜப்பான் வானிலை மையம் எச்சரித்திருந்தது. இதற்கிடையே இந்த எச்சரிக்கை தொடர்பாகச் சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது ஜப்பான் கடலில் ஏற்படும் சுனாமி 100 அடி உயரத்திற்கு எழும் என்றும் இதனால் பேரழிவு ஏற்படக்கூடும் என்றும் எச்சரித்துள்ளனர்.
ஜப்பான் நாட்டில் எப்போதும் நிலநடுக்கம் அடிக்கடி ஏற்படும். அப்படித் தான் கடந்த டிசம்பர் 8 அன்று, ஆமோரி மாகாணத்தின் கிழக்கில் 7.6 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதற்கு மறுநாளே ஹோக்காய்டோ முதல் சன்ரிக் வரையிலான கடல் பகுதியில் அடுத்த வாரத்திற்குள் 8 முதல் 9 ரிக்டர் அளவுள்ள மாபெரும் நிலநடுக்கம் ஏற்படலாம் என ஜப்பான் வானிலை மையம் எச்சரித்திருந்தது.

எச்சரிக்கை
ஹோக்காய்டோ- சன்ரிக் கடற்கரைக்கு இதுபோல நிலநடுக்க எச்சரிக்கை வருவது முதலே முதல்முறையாகும். இந்த எச்சரிக்கை வந்து சில மணி நேரம் கூடா ஆகாத நிலையில், ஜப்பானில் மற்றொரு மாபெரும் நிலநடுக்கம் தாக்கியது. அங்குப் புதன்கிழமை ஹொக்கைடோவை 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் இப்படி அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்படுவதால் பொதுமக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள்.
பொதுவாகக் கடலுக்குள் நிலநடுக்கம் ஏற்படும்போது கடல் நீர் மிக பெரிய அளவில் இடம் மாறுகிறது. இதன் காரணமாகவே அங்குச் சுனாமி ஏற்படுகிறது. அப்போது மிக பெரிய எனர்ஜி ரிலீஸ் ஆகும். இதுவே சுனாமி அலைகளின் உயரம் எந்தளவுக்கு இருக்கும் என்பதைத் தீர்மானிக்கிறது. ஜப்பான் மத்தியப் பேரிடர் மேலாண்மைக் குழுவின் 2021 ஆய்வுகள், ஹோக்காய்டோ- சன்ரிக் பகுதிகளில் பெரும் அபாயம் இருப்பதைச் சுட்டிக்காட்டுகின்றன.
கிட்டத்தட்ட 100 அடி சுனாமி
அங்கு ஏற்படும் சுனாமி அலைகள் கிழக்கு ஹோக்காய்டோ மற்றும் நீண்ட சன்ரிக் ரியா கடற்கரையில் 30 மீட்டர், அதாவது 98.4 அடி வரை கூட இருக்கும் என எச்சரித்துள்ளனர். அங்குள்ள குறுகிய விரிகுடாக்களும் புவியியல் அமைப்பும் சுனாமி அலைகளை மேலும் தீவிரப்படுத்தும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் தாழ்வான பகுதிகளில், கடல் நீர் 10 முதல் 20 கிலோமீட்டர் வரை கூட நிலத்திற்குள் ஊடுருவக்கூடும்.
இதில் பிரச்சனை என்னவென்றால் நிலநடுக்கம் ஏற்பட்டு அடுத்து 5 முதல் 10 நிமிடங்களுக்குள்ளேயே முதல் அலை தாக்க ஆரம்பிக்குமாம்.. இதுபோல நடந்தால் 2 லட்சம் பேர் உயிரிழக்கக்கூடும்.. ஜப்பானில் கடலோரம் வசிக்கும் மக்கள் பலரும் மூழ்கி இறக்க நேரிடும் என ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
2011 சுனாமி
பொதுவாகச் சுனாமியை உருவாக்கும் நிலநடுக்கத்தை 'மொமண்ட் மேக்னிட்டூட்' (Mw) என்று அளவிடுவார்கள். 2011இல் ஏற்பட்ட 9.0 Mw டோஹோகு நிலநடுக்கம் காரணமாகச் சில இடங்களில் 40.5 மீட்டர் (133 அடி) உயரத்திற்குச் சுனாமி ஏற்பட்டது. இதுவே வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட மிக உயரமான சுனாமி அலையாகும். 2011ல் சுனாமி ஏற்பட்ட இடத்திற்கு வடக்குப் பகுதியில் இப்போது புதிதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காரணம்
ஜப்பான் ரிங் ஆஃப் பையர் என்ற பகுதியில் அமைந்துள்ளது. இதனால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம், சுனாமி போன்ற நிகழ்வுகள் அடிக்கடி ஏற்படும். இதற்கு முன்பு அங்குக் கடந்த 2011இல் தோஹோகு என்ற இடத்தில் ஏற்பட்ட வலிமையான நிலநடுக்கம் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications