டேன்ஜர் ஜோன்.. ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. குலுங்கிய பூமியால் மக்கள் பீதி.. சுனாமி இல்லை
டோக்கியோ: ஜப்பானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.3 என பதிவான நிலநடுக்கத்தால் பூமி குலுங்கியது. இதனால் பொதுமக்கள் அலறியடித்து வெளியே ஓட்டம் பிடித்ததோடு பீதி அடைந்துள்ளனர்.
இந்தியா உள்பட பல்வேறு உலக நாடுகளில் சமீபகாலமாக தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் இன்று ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அதாவது ஜப்பானின் மத்திய இஷிகாவா பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நாட்டின் நேரப்படி மதியம் 2.42 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. மத்திய இஷிகாவாவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை பொதுமக்கள் உணர்ந்துள்ளனர். இதனால் அவர்கள் வீடு, அலுவலகங்களை விட்டு அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். மேலும் பொதுவெளியில் தஞ்சமடைந்தனர்.

இந்நிலையில் தான் நிலநடுக்கம் ஏற்பட்டத்தை ஜப்பான் வானிலை ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது. இதுபற்றி அந்த மையம் சார்பில் , ‛‛ஜப்பானில் 6.3 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அதிர்ஷ்டவசமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை'' என கூறியுள்ளது.
இருப்பினும் இஷிகாவாவின் சுசுநகரில் ரிக்டர் அளவுகோலில் 7 வரை பதிவாகி இருக்கலாம் என கூறப்படுகிறது. ஏனென்றால் இங்கு தான் அதிகளவில் நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக ஜப்பானில் ரயில் சேவைகள் முடங்கி உள்ளது. அதாவது பிரபலமான சுற்றுலா தளமான நாகானோ மற்றும் கனாசாவா இடையேயான ஷிங்கன்சென் புல்லட் ரயில்கள் நிறுத்தப்பட்டன.
ஜப்பானை பொறுத்தமட்டில் நிலநடுக்கங்கள் என்பது மிகவும் சாதாரணமான ஒன்றாக உள்ளது. அதாவது ஜப்பான், பசிபிக் "ரிங் ஆஃப் ஃபயர்" பகுதியில் அமைந்துள்ளது. பூகோளத்தில் இது தீவிரமான நில அதிர்வுக்கான இடமாக உள்ளது. இந்நிலையில் தான் தற்போது ஜப்பானில் 6.3 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications