சாம்ராஜ்யத்தை துறந்த ஜப்பான் இளவரசி.. அரச குடும்ப முறைப்படி இன்று கடைசி பிறந்தநாள் கொண்டாட்டம்
இளவரசியாக இன்று தன்னுடைய கடைசி பிறந்தநாளை கொண்டாடுகிறார் மகோ
டோக்கியோ: தன்னுடைய தூய்மையான காதலுக்காக அரச குடும்ப தகுதியையே விட்டுக்கொடுக்கும் ஜப்பான் இளவரசி மகோ இன்று தன்னுடைய 30வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.. அதாவது இளவரசியாக இவருடைய கடைசி பிறந்தநாள் இதுவாகும்.
யார் இந்த மகோ? கடந்த சில நாட்களாகவே மக்களின் கவனத்தை ஈர்த்து வர என்ன காரணம்?
ஜப்பானின் 125-வது பேரரசர் அகிஹிட்டோவின் பேத்திதான் மகோ.. செல்வ செழிப்புடன் வலம் வரும் இளவரசி.. 2012-ல் தன்னுடன் காலேஜில் படித்த சக நண்பருடன் இவருக்கு காதல் மலர்ந்தது.. அவர் பெயர் கெய் கோமுரோ.. மிக மிக சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்.
ஆரம்பத்தில் சாதாரணமாகத்தான் பழகினார்கள்.. இந்த நட்பு வலுவானது.. அதுவே கொஞ்ச நாளில் காதலாக உருமாறியது.. நல்ல புரிதலுடன், அபரிமிதமான நேசத்துடன் இவர்கள் காதலும் மலர்ந்து கொண்டே வந்தது.

அரசு குடும்பம்
ஒருகட்டத்தில் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.. அதன்படி, கடந்த 2017-ல் இருவருமே தங்களது திருமண அறிவிப்பை வெளியிட்டனர்.. ஆனால், மகோ இப்படி சொன்னதுமே, அது பெரும் பூகம்பத்தை அரச குடும்பத்தில் ஏற்படுத்தியது.. நிறைய சர்ச்சைகள் கிளம்பியது.. எனவே, இந்த திருமணத்தை உடனடியாக நடத்துவதைவிட சில காலம் தள்ளி போட முடிவு செய்தனர்.. இதையும் பகிரங்கமாகவே அறிவித்தனர்.

நெகிழ்ச்சி
2020-ல் இதைபற்றி இளவரசி மகோ ஒருமுறை சொல்லும்போது, "நாங்கள் திருமணம் செய்து கொள்வதுதான் எங்களின் இதயங்கள் மதிப்புடன் வாழ்வதற்கான மிகச்சிறந்த தேர்வாக இருக்க முடியும்.. எங்களில் ஒருவர் இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது... மகிழ்ச்சியான நேரமானாலும் சரி, மகிழ்ச்சியற்ற நேரமானாலும் சரி, ஒருவருக்கொருவர் தோள் சாய்ந்து கொள்வோம்" என்று கூறியிருந்தார்.

சம்பிரதாயங்கள்
பொதுவாக, இப்படி ராஜகுடும்பத்தில் திருமண முடிவுகளை சாதாரணமாக எடுத்து கொள்ள மாட்டார்கள்.. அதிலும் ராஜ குடும்பத்தை தவிர்த்து, மற்ற சாதாரண நபர்களை திருமணம் செய்ய நேர்ந்தால், அதற்கு சில சம்பிரதாயங்கள், வழிமுறைகள் உள்ளன.. அந்த நாட்டு அரசு வழக்கப்படி, இளவரசி சாதாரண குடும்பத்தை சேர்ந்த நபரை திருமணம் செய்து கொண்டால், அவர் தன்னுடைய அரச பட்டத்தை துறந்துவிட வேண்டும்.. இதுதான் விதிமுறை.

வரிப்பணம்
இந்த முடிவையும் மனதார ஏற்றார் இளவரசி மகோ.. காதலனின் கரம் பிடிக்க, தன்னுடைய அரச பட்டத்தை துறக்க தயார் என்றார்.. அரசு நிதியுதவியும் தனக்கு தேவையில்லை என்றார்.. அதுமட்டுமல்ல, மக்கள் வரிப்பணத்தில் இருந்து வழங்கப்படுவதால் தனக்கு கொடுக்கப்படும் சுமார் 1.35 மில்லியன் அமெரிக்க டாலர் பணத்தையும் வேண்டாம் என்று நிராகரித்தார்... இதையடுத்து இவர்களின் திருமணம் விரைவில் நடக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு கிளம்பியது.

அமெரிக்கா
அதன்படியே அடுத்த வாரம் திருமணம் நடக்க உள்ளதாக தெரிகிறது.. ஜப்பானிய அரச குடும்ப விதிமுறைகளின்படி, அன்று முதலே, அவர் இளவரசி என்ற நிலையை இழப்பார்.. திருமணத்திற்கு பிறகு, தம்பதி இருவரும் அமெரிக்காவில் குடியேற போகிறார்கள்.. இப்படிப்பட்ட சூழலில்தான் இன்றைய தினம், மகோ தன்னுடைய 30வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி வருகிறார்.. அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற முறையில் அவர் கொண்டாடும் கடைசி பிறந்தநாள் இதுவாகத்தான் இருக்கும்.. மகோ, தன்னுடைய தங்கையுடன் அரச குடும்ப வளாகத்தில் நடந்துசெல்லும் போட்டோக்கள் வெளியாகி உள்ளன...

நெகிழ்ச்சி
ஆனால், மகோ, தன்னுடைய பிறந்தநாள் குறித்து எந்தவிதமான கருத்தும் சொல்லவில்லை.. தனக்கு ஏற்கனவே நடந்த திருமண நிச்சயதார்த்தத்தை மீடியாக்கள் கையாண்ட விதம் மகோவுக்கு பெருத்த வருத்தத்தையும், அதிருப்தியையும் ஏற்கனவே உண்டு பண்ணி உள்ளது.. ஒருவேளை அதனால்தான் இன்றைய தின பிறந்தநாளை பகிரங்கமாக தெரியப்படுத்தவில்லையா என்று தெரியவில்லை... எனினும் தன்னுடைய உயர்ந்த காதலுக்காக மகோ எடுத்த முடிவு இன்றளவும் நெகிழ்ச்சியை அந்நாட்டு மக்களுக்கு ஏற்படுத்தியபடியே உள்ளது..!
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications