ஜப்பானை அச்சுறுத்தும் 'பிடோவ்' புயல்: விமானங்கள் ரத்து
டோக்கியோ: ஜப்பானின் தென்புறத் தீவுப் பகுதிகளான ஒகினாவில் இன்று சக்தி வாய்ந்த சூறாவளிப் புயலான 'பிடோவ்' தாக்கக்கூடும் என்று அந்நாட்டின் வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனையடுத்து அங்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஜப்பான், சீனா, தைவான் ஆகிய மூன்று நாடுகளும் இந்த சூறாவளிக் காற்றின் தாக்கத்திற்கு ஆளாகக்கூடும் நிலையில் உள்ளன.
காற்றும், கன மழையும் இருக்கக்கூடும் என்று எச்சரித்துள்ள வானிலை மையம் சில நேரங்களில் புயல் காற்றும் தாக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
காலை 10 மணி அளவில் ஒகினாவின் தலைநகர் நஹாவிலிருந்து 200 கி.மீ தொலைவில் மையம் கொண்டிருந்த இந்தப் புயல் வடமேற்குத் திசையில் நகர்ந்து கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் ஏர்லைன்ஸ், நிப்பான் ஏர்வேஸ் மற்றும் அதன் குறைந்த கட்டண போக்குவரத்தான பீச் ஏவியேஷன் ஆகிய மூன்று நிறுவனங்களும் தங்கள் விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளன. ஹாங்காங்கிலிருந்து செயல்படும் டிராகன்ஏர் விமான நிறுவனமும் தங்களுடைய விமான சேவைகளை ரத்து செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்தப்புயல் நாளை தைவானை நோக்கி நகரக்கூடும் என்பதால் அங்கும் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்னர்தான் 'உசாகி' புயலின் விளைவை ஒகினா அனுபவித்தது. தற்போது 'பிடோவ்' சூறாவளி தாக்கக் கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications