பெண்கள் குழந்தைகள் பலாத்காரம்! நேரலையில் கண்ணீர் விட்ட பெண் செய்தி வாசிப்பாளர்! தீயாய் பரவும் வீடியோ
டோக்கியோ : உக்ரைன் நாட்டில் நடந்து வரும் போரிம் போது புச்சா நகரில் மக்களின் கைகளை கட்டி கொடூரமாக கொலை செய்த வீரர்களை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பாராட்டிய செய்தியை வாசித்த பெண் செய்தி வாசிப்பாளர், சோகத்தால் உடைந்து கண்ணீர் விட்ட காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறிய, பச்சிளம் குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்காணோர் போரில் உயிரிழந்ததாகவும் பரபரப்பு குற்றச்சாட்டினை அந்நாட்டி அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி முன் வைத்து வருகிறார்.
ரஷ்யா மனிதாபிமானமற்ற முறையில் குடியிருப்பு வாசிகளை நோக்கி தாக்குதல் நடத்துவதாக புகார் கூறப்படும் நிலையில், நாட்டில் பல நகரங்கள் அடையாளம் தெரியாமல் தகர்க்கப்பட்டுள்ளதாக உக்ரைன் வெளியுறுவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

பகீர் புகார்
மேலும் ரஷ்யாவின் ராணுவ வீரர்கள் உக்ரைன் நாட்டில் இருக்கும் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து உடல்களில் முத்திரை குத்துவதாகபும் மேலும் ஒரு பகீர் புகர் எழுந்தது. ரஷ்ய ராணுவ வீரர்களை கொலைகாரர்கள், கொடூரர்கள், பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்கள் எனவும், இவர்களுக்கு மரணம் மட்டுமே கிடைக்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மிகக் கடுமையாக விமர்சித்தார்.

இனப்படுகொலை
இதற்கிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சனிக்கிழமை உக்ரைனின் புச்சா நகரத்தில் வசித்த மக்களை அந்த நகரத்தை முன்னர் ஆக்கிரமித்திருந்த ரஷ்ய ராணுவத்தினர் கைகளை கட்டி தலையின் பின்னால் சுட்டுக் கொலை செய்ததாக அதிர்ச்சி தரும் புகைப்படங்கள் வெளியாகின. இதற்கு உலக அளவில் கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், இதனை இனப்படுகொலை எனவும், போர்க் குற்றம் என உக்ரைன் குற்றம் சாட்டியது.

வீரர்களுக்கு பாராட்டு
புச்சா நகரில் தாக்குதல் நடத்திய வீரர்களை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பாராட்டினார். அவர்கள் நாட்டிற்கே முன் மாதிரியானவர்கள் என புகழாரம் சூட்டினார். கோர சம்பவத்தில் ஈடுபட்ட 64வது மோட்டார் ரைபிள் பட்டாலியன் வீரர்களுக்கு "பாதுகாவலர்கள்" என்ற கெளரவப் பட்டத்தையும் அவர் வழங்கி, " வீரம் மற்றும் தைரியத்துடன்" அந்த பிரிவு செயல்பட்டதாகக் கூறினார். இந்நிலையில் இதுகுறித்த செய்தியை வாசித்த போது துக்கம் தாளாமல் ஜப்பான் நாட்டின் தொலைக்காட்சியில் நேரலையிலேயே பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவர் கண்ணீர் விட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

நேரலையில் கண்ணீர்
அந்த பெண் செய்தி வாசிப்பாளரின் பெயர் யுமிகோ மாட்சுவோ என்றும், அந்த நிறுவனத்தின் அவர் நீண்ட நாட்களாக பணியாற்றி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. யுமிகோ மாட்சுவோ, புச்சா படுகொலை தாக்குதலை கண்காணித்த ரஷ்ய வீரர்களை கவுரவித்து, சிறப்பு ராணுவ நடவடிக்கையின் மூலமாக புதின் நாட்டிற்கே ஒரு முன்மாதிரியாக திகழ்கிறார்'' என்ற வரியை வாசிக்கும் போது உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு அழுதார். "இன்னும் ஏராளமான பொதுமக்கள் பதுங்கு குழிக்குள் சிக்கியுள்ளனர். என்னை மன்னிக்கவும், மன்னிக்கவும்..." என்று கூறி சிறிது நேரம் அமைதியாக இருந்தார்.

வெகுவாக பாராட்டு
உக்ரைன் கோர கட்சிகளை கண்டு நேரலையில் கண்ணீர் விட்ட பெண் செய்தி வாசிப்பாளரை சமூக வலைதளங்களில் பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர் ரெடிட் வெளியிட்டுள்ள இந்த வீடியோவை பார்த்த அதன் பயனர்கள் செய்திவாசிப்பாளரின் துணிச்சலைப் பாராட்டி வருகின்றனர். ''இவை அனைத்தும் ஆன்மாவின் அடியாழத்தில் இருந்து எதிரொலிப்பதை உணர்த்துகிறது. நாம் அனைவரும் நியாயமான கோபத்தை வெளிப்படுத்துகிறோம். ஒருவரையொருவார் பாதுகாக்க விரும்புகிறோம்'' என்று பயனர்கள் தெரிவித்துள்ளார். சிலரோ செய்திவாசிப்பாளரைப் போல தாங்களும் துக்கத்தில் அழுததாக கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications