ஜப்பானுக்கு சொந்தமான ராணுவ ஹெலிகாப்டர் மாயம்! தேடுதல் வேட்டை தீவிரம்! பயணிகளின் கதி என்ன!
டோக்கியோ: ஜப்பான் நாட்டிற்குச் சொந்தமான ராணுவ ஹெலிகாப்டர் மாயமாகியுள்ளது. ஒகினாவாவின் தெற்கு மாகாணத்தில் உள்ள ஒரு தீவு அருகே சென்ற போது மாயமானதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள குட்டி தீவு நாடு ஜப்பான். அதிநவீன தொழில்நுட்பங்களுக்குச் சொந்தமான ஜப்பானுக்கு வலிமையான ராணுவமும் இருக்கிறது.
இந்தியாவைப் போலவே ஜப்பானுக்குச் சொந்தமான சில தீவுகளிலும் சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதனால் அங்குப் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இதனிடையே ஜப்பான் நாட்டிற்குச் சொந்தமான ராணுவ ஹெலிகாப்டர் மாயமாகியுள்ளது. ஒகினாவாவின் தெற்கு மாகாணத்தில் உள்ள ஒரு தீவு அருகே சென்ற போது மாயமானதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மாயமான இந்த ஹெலிகாப்டரில் 10 பேர் பயணித்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.. விமானம் மாலை 4:30 மணியளவில் காணாமல் போனதாகவும் அதன் பின்னர் ரேடரில் அது தென்படவில்லை என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அந்த ஹெலிகாப்டர் இப்போது எங்கே இருக்கிறது.. அதன் நிலை என்ன என்பதைக் கண்டறியும் முயற்சியில் அந்நாட்டு பாதுகாப்புப் படை ஈடுபட்டுள்ளது.
மாயமான ஹெலிகாப்டர் தெற்கு குமாமோட்டோ பிராந்தியத்தில் உள்ள ராணுவப் படைக்குச் சொந்தமானதாகும். ஒகினாவாவின் மியாகோ தீவில் இருந்து மாலை 4:00 மணிக்குப் புறப்பட்ட அந்த ஹெலிகாப்டர் ஒரு மணி நேரத்தில் திரும்ப இருந்தது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதில் பயணித்தோரைக் காப்பாற்றும் முயற்சியில் ஜப்பான் படைகள் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
-
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications