செயற்கை ரத்தம் உருவாக்கி ஜப்பான் விஞ்ஞானிகள் சாதனை! மருத்துவ உலகில் புதிய மைல் கல்!

Subscribe to Oneindia Tamil

டோக்கியோ: ஜப்பானில் செயற்கை ரத்தத்தை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். ஜப்பானின் செயற்கை ரத்தம் உலகளாவிய பயன்பாட்டிற்கும், சேமித்து வைப்பதற்கும் ஏற்றதாக உள்ளது என்றும், இது 2030 ஆம் ஆண்டு வாக்கில், அவசர மருத்துவ சேவையில் ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அவசர மருத்துவத் தேவைகளுக்காக மருத்துவமனைக்குச் செல்லும்போது, ரத்தம் கிடைக்காமல் பலரும் சிரமப்படுவதை நாம் பார்த்திருப்போம். சமூக ஊடகங்களிலும் கூட இரத்த தானம் செய்யக் கேட்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில், ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் மருத்துவ உலகில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையிலான ஒரு முக்கியமான கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளனர்.

japanese-scientists-made-artificial-blood-a-breakthrough-for-emergency-medicine-by-2030

மருத்துவ உலகில் ஒரு புரட்சி

அனைத்து இரத்த வகைகளுக்கும் பொருந்தக்கூடிய செயற்கை ரத்தத்தை அவர்கள் உருவாக்கியுள்ளனர். தற்போது, ​​அதன் மருத்துவ பரிசோதனைகள் தொடங்கப்பட்டுள்ளன. ஜப்பானின் செயற்கை ரத்தம் உலகளாவிய பயன்பாட்டிற்கும், சேமித்து வைப்பதற்கும் ஏற்றதாக உள்ளது என்றும், இது 2030 ஆம் ஆண்டு வாக்கில், அவசர மருத்துவ சேவையில் ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2 ஆண்டுகள் கெட்டுப்போகாது

பேராசிரியர் ஹிரோமி சாகாயின் தலைமையிலான குழு, இந்த செயற்கை ரத்தத்தை உருவாக்கியுள்ளது. இந்த ரத்தத்தை இரண்டு வருடங்கள் வரை கெட்டுப்போகாமல் சேமிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. காலாவதியான இரத்தத்திலிருந்து ஹீமோகுளோபினைப் பிரித்தெடுத்து இந்த செயற்கை ரத்தம் தயாரிக்கப்படுகிறது.

பொதுவாக, இரத்த வங்கிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் இரத்தத்திற்கு 42 நாட்கள் மட்டுமே ஆயுட்காலம் உண்டு. அதுமட்டுமின்றி, ரத்தம் பெறுபவரின் இரத்த வகையுடன் பொருந்துமா என்பதைப் பரிசோதிக்க வேண்டும். ஆனால், இந்த செயற்கை இரத்தத்திற்கு அந்தப் பிரச்சினைகள் எதுவும் இல்லை.

2030-க்குள் பயன்பாட்டுக்கு வரும்?

தற்போது, தன்னார்வலர்களிடம் இந்த செயற்கை ரத்தம் பரிசோதிக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த முயற்சி வெற்றி பெற்றால், 2030-க்குள் இந்த தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வரும் என்றும், அவசர மருத்துவ உதவிகளில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் கண்டுபிடிப்பு நோபல் பரிசுக்கு தகுதியானது என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அமெரிக்காவிலும் இதே போன்ற ஆராய்ச்சிகள் நடந்து கொண்டு வருகின்றன. ஜப்பானிய ஆராய்ச்சியாளர்களின் இந்த கண்டுபிடிப்பு மருத்துவத் துறையில் ஒரு திருப்புமுனையாக அமையும். இதன் மூலம், அவசர காலங்களில் ரத்தம் கிடைக்காமல் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க முடியும்.

ரத்த வங்கிகளிலும் கட்டுப்பாடு

விபத்து, அறுவை சிகிச்சை போன்ற அவசர காலங்களில் ரத்தத்தின் பயன்பாடு அதிகமாக உள்ளது. அந்த நேரத்தில் நோயாளிகளுக்கு குறிப்பிட்ட வகை ரத்தம் தேவைப்பட்டால், ரத்தம் கிடைக்க நோயாளிகளின் உறவினர்கள் கடும்பாடு பட வேண்டியிருக்கும். சில அரிய வகை ரத்தங்கள், ரத்த வங்கிகளிலும் தட்டுப்பாடு நிலவும் என்பதால் இது பெரும் சிரமத்தை ஏற்படுத்தும்.

எனவே, இதுபோன்ற தருணங்களில் நோயாளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு தீர்வாக இந்த செயற்கை ரத்தம் இருக்கும் என்று மருத்துவ உலகில் கருதப்படுகிறது. வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் செயற்கையாக உருவக்கப்படும் ரத்தம் பயன்பாட்டுக்கு வரும் என்று கூறியிருப்பதால், இன்னும் சில ஆண்டுகளில் மருத்துவ உலகில் மிகப்பெரிய மைல் கல் எட்டப்பபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+