Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

8 மணி கெடு! ஈரான் கையில் தான் எல்லாமே.. கடைசி நேரத்தில் கைவிரித்த ஜேடி வேன்ஸ்.. டிரம்ப் ஆட்டம்!

Subscribe to Oneindia Tamil

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும் முன்வைத்த போர் நிறுத்தம் தொடர்பான திட்டத்தை இரு நாடுகளும் நிராகரித்துள்ள நிலையில், தற்போது டிரம்ப் மிகவும் கடுமையாக சொற்களால் ஈரானுக்கு கடைசி எச்சரிக்கை பதிவை தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டு உள்ளார். இது உலக நாடுகள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் வேளையில் பலரின் நம்பிக்கையாக இருந்த ஜேடி வேன்ஸ்-ம் கைவிரித்தார்.

அமெரிக்க துணை அதிபர் ஜேடி வேன்ஸ், ஈரானில் அமெரிக்கா தனது ராணுவ இலக்குகளை பெரும்பாலும் நிறைவேற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார். ஹங்கேரியின் தலைநகரான புடாபெஸ்ட் நகரில், அந்நாட்டு பிரதமர் Viktor Orbán உடன் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், ஜே.டி. வேன்ஸ் இந்த கருத்தை வெளியிட்டார்.

JD Vance Iran trump JD Vance Iran Deadline Trump Warns Iran Civilization Strait of Hormuz 8 PM Deadline US Iran Ceasefire Proposal JD Vance Ball in Iran Court 8 JD Vance 8 PM deadline Iran JD Vance ball in Iran court Trump warns whole civilization will die tonight Trump Truth Social Iran post US military objectives achieved Iran Strait of Hormuz Trump deadline Iran ceasefire response tonight Trump regime change Iran Iran open Strait of Hormuz JD Vance Budapest press meet Trump 47 years of extortion Iran oil and gas flow freely Trump Vance hopes Iran makes right decision US Iran tensions April 2026 Trump revolutionary wonderful Iran 8 47 2026

ஜேடி வேன்ஸ் கூறுகையில், போர் தொடங்குவதற்கு முன்பே ஈரான் பேச்சுவார்த்தைகளில் மிகவும் மெதுவாக செயல்பட்டது. போர் துவங்கி 5 வாரங்கள் கடந்த பின்பு தற்போதும் அந்த நிலை நீடிக்கிறது. ஆயினும் இன்று இரவு நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு முன் ஈரானிடம் இருந்து பதில் வரும் என்ற நம்பிக்கை அமெரிக்காவுக்கு உள்ளதாக தெரிவித்தார்.

'இப்போது பந்து ஈரானின் பக்கம் உள்ளது' என்று அவர் குறிப்பிட்டார். அதாவது, அடுத்த கட்ட நடவடிக்கையை தீர்மானிக்க வேண்டியது ஈரான் தான் என்ற தெளிவான சிக்னலை ஜேடி வேன்ஸ் மூலம் அமெரிக்கா அளித்துள்ளது.

எரிசக்தி சந்தை முக்கியம்

அமெரிக்காவின் முக்கிய நோக்கம் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தை நிலைப்படுத்துவதே. கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு சுதந்திரமாக சர்வதேச சந்தைக்குள் ஓட வேண்டும், மக்கள் தங்களின் அன்றாட தேவைகளை எளிதாக பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நிலையை உருவாக்க விரும்புகிறோம் என்று ஜேடி வேன்ஸ் கூறினார்.

ஹார்முஸ் நீரிணை திறப்பு தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாட்டை ஜேடி வேன்ஸ் தெரிவித்தார்.

டிரம்பின் கடும் எச்சரிக்கை

ஜேடி வேன்ஸ் புடாபெஸ்ட்-ல் பேசிக்கொண்டு இருக்கும் போதே, டிரம்ப் ட்ரூத் சோஷியல் பதிவு மூலம் கடுமையான எச்சரிக்கை ஈரானுக்கு விடுத்துள்ளார். தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், 'இன்றிரவு ஒரு முழு நாகரிகமே அழிந்து போகும் அபாயம் உள்ளது' என்று அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்ய நான் ஒருபோதும் விரும்பவில்லை. ஆனால் அது நடக்கும்.

இப்போது எங்களிடம் முழுமையான மற்றும் முழுமையான ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் மாறுபட்ட அதேநேரத்தில் புத்திசாலித்தனமான பயங்கரவாதத்துக்கு அப்பாற்பட்ட சிந்தனையாளர்கள் உள்ளதால் ஏதாவது சிறப்பான மாற்றம் நடக்கலாம். யாருக்கு தெரியும்? உலகின் நீண்ட நெடிய வரலாற்றில் மிக முக்கியமான தருணங்களில் ஒன்றாக இன்றைய இரவு இருக்கலாம்.

ஈரானின் 47 ஆண்டு கால அராஜகம், ஊழல், மரணங்கள் முடிவுக்கு வரும். ஈரான் மக்களுக்கு கடவுள் அருள் கொடுக்கட்டும் என்று கடுமைான வார்த்தைகளுடன் பதிவிட்டுள்ளார் டிரம்ப்.

கடைசி நேர பேச்சுவார்த்தை

அமெரிக்க நேரப்படி இன்றிரவு 8 மணிக்குள் ஈரானின் பதில் வரும் என அமெரிக்கா எதிர்பார்க்கிறது. இந்த நேரக்கெடு, உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் மிக முக்கியமான தருணமாக பார்க்கப்படுகிறது.

இந்த பதில் நேர்மறையாக இருந்தால், போர் முடிவுக்கு செல்லும் வாய்ப்பு உள்ளது. இல்லையெனில், மேலும் தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்ற அச்சமும் நிலவுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+