கிளிண்டன் முதல் டிரம்ப் வரை.. ஜெஃப்ரி எடுத்த அந்தரங்க வீடியோக்கள்.. பிரிட்டன் இளவரசரையும் விடவில்லை
வாஷிங்டன்: பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் வழக்கு தொடர்பான சீக்ரெட் ஆவணங்கள் வெளியாகியுள்ள நிலையில், அதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பகீர் கிளப்புவதாக உள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கோடீஸ்வரர் ஜெஃப்ரி எப்ஸ்டீன்... இவர் சிறுமிகள், பெண்கள் எனப் பலரையும் கடத்தி பலாத்காரம் செய்ததாகப் புகார்கள் எழுந்தன.

இந்த விவகாரத்தில் அவர் கடந்த 2005இல் முதலில் கைதாகி இருந்தார். 14 வயது சிறுமியுடன் பாலியல் உறவு கொண்டதாக எழுந்த புகாரில் கைதானார். இருப்பினும், அப்போது அவர் 13 மாதங்களில் ரிலீஸ் ஆனார்.
எப்ஸ்டீன்: இதற்கிடையே கடந்த 2019இல் மைனர் சிறுமிகளைக் கடத்தி பாலியல் உறவு கொண்ட குற்றச்சாட்டில் எப்ஸ்டீன் மீண்டும் கைதானார். போலீஸ் விசாரணை நடக்கும் போதே ஜெஃப்ரி திடீரென சிறையிலேயே மர்மமான முறையில் உயிரிழந்தார். ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பாக வெளியான ரகசிய ஆவணங்களில் முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் மற்றும் மனைவி ஹிலாரி ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றன. இதற்கிடையே ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஆவணங்கள் தொடர்பாக சில பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அந்த ரகசிய ஆவணங்களில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரது வாக்குமூலம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அதாவது அந்த பெண் கூறுகையில், "அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், இளவரசர் ஆண்ட்ரூ மற்றும் இங்கிலாந்து வணிக அதிபர் ரிச்சர்ட் பிரான்சன் உள்ளிட்ட பிரபலங்களின் செக்ஸ் டேப் வீடியோக்களை ஜெஃப்ரி வைத்திருந்தார்" என்று கூறியுள்ளார்.
வாக்குமூலம்: பிரிட்டிஷ்-தென் ஆப்பிரிக்கப் பெண் சாரா ரான்சம் என்பவர் தான் இந்த வாக்குமூலம் அளித்தார். கடந்த 2006இல் 22 வயதில் இருந்த போது சாரா ரான்சம் ஜெஃப்ரியை பார்த்துள்ளார். பல பெண்களையும் சிறுமிகளையும் ஏமாற்றியது போலவே தனக்கு மசாஜ் செய்தால் அதற்குப் பதிலாகப் பணம் கொடுப்பதாகக் கூறி சாரா என்ற இந்தப் பெண்ணையும் ஏமாற்றியுள்ளார்.
பிரபலங்கள்: அந்தப் பெண் மேலும் கூறுகையில், "எனது தோழி ஒருவரையும் இதேபோல ஜெஃப்ரி அழைத்துச் சென்றார். அப்போது எனது தோழி கிளிண்டன், இளவரசர் ஆண்ட்ரூ மற்றும் ரிச்சர்ட் பிரான்சன் ஆகியோருடன் உடலுறவு கொண்டுள்ளார். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எப்ஸ்டீன் இந்த சம்பவத்தைப் படம்பிடித்துள்ளார்.
கிளிண்டன், இளவரசர் ஆண்ட்ரூ மற்றும் ப்ரான்சன் ஆகியோரை அந்த வீடியோவில் நாம் தெளிவாக பார்க்கலாம். இந்த செக்ஸ் டேப்கள் எனது தோழி கைகளுக்கும் வந்துள்ளது. இதில் ஜெஃப்ரி மிகத் தெளிவாக ஒன்றைச் செய்துள்ளார். அதாவது இதில் எந்தவொரு வீடியோவிலும் ஜெஃப்ரி இருக்க மாட்டார். அந்த பிரபலங்களும் பாதிக்கப்பட்ட பெண் மட்டுமே இருப்பார்கள். அந்தளவுக்குப் புத்திசாலித்தனமான வேலையைச் செய்துள்ளார்.
டிரம்ப்: அதேபோல டொனால்ட் டிரம்ப் கூட தனது நண்பர் ஒருவருடன் அவ்வப்போது உடலுறவைக் கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.. அந்த பெண் அவராகவே இது குறித்து என்னிடம் கூறினார்" என்று கூறியிருந்தார். பாதிக்கப்பட்ட அந்த பெண் சாரா, டொனால்ட் டிரம்ப் மற்றும் ஹிலாரி கிளிண்டன் என இருவரையும் சாடியுள்ளார். இருவரில் யார் அதிபரானாலும் பெரிதாக எந்தவொரு மாற்றமும் ஏற்பட்டுவிடாது என்று கூறியுள்ளார்.
அதேநேரம் சாரா ரான்சம் தன்னிடம் இருப்பதாகக் கூறும் வீடியோக்களை பகிர்ந்து கொள்ளவில்லை. எப்ஸ்டீன் தன்னை துன்புறுத்த முயன்றால் அந்த வீடியோவை வெளியிடுவேன் என்பது போல சாரா ரான்சம் தெரிவித்து இருந்தார்.
இந்த வழக்கு ஆரம்பித்த போது ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கு எதிராகச் சாரா ரான்சம் துணிச்சலாகப் புகார் அளித்திருந்தார். இருப்பினும், கொஞ்சக் காலத்தில் அவர் புகாரைத் திரும்பப் பெற்றுவிட்டார். இந்த பிரச்சினைகளில் இருந்து சாரா ரான்சம் விலகிச் செல்வதாகச் சொன்னார். மேலும், வெளிப்படையாகத் தான் ஏதாவது சொன்னால் அது மோசமான பாதிப்புகளையே தனக்கு ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
-
ஈரானுக்கு மேலும் 10 நாட்கள் அவகாசம்.. வழிக்கு வந்த டிரம்ப்! போருக்கு குட்டி பிரேக்! -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
ஈரானின் உச்ச தலைவராக.. என்னை பொறுப்பேற்க சொன்னார்கள்! நான்தான் வேண்டாம் என சொல்லிட்டேன் - டிரம்ப் -
அமெரிக்காவின் அஸ்திவாரமே ஆடிடுமே.. "போரை முடிவுக்கு கொண்டு வர ரெடி.." ஈரான் போட்ட 7 கண்டிஷன்கள் -
எங்க நிபந்தனையை ஏற்றால்தான் போர் நிறுத்தம்.. அமெரிக்கா திட்டத்தை நிராகரித்த ஈரான்! தீவிரமாகும் போர் -
வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம்.. டிரம்ப்பால் போரை வைத்து பணம் பார்க்கும் மர்ம டிரேடர்! -
"நீங்க சொல்வதை எல்லாம் கேட்க முடியாது.." கண்டிஷன் போட்ட அமெரிக்கா.. திட்டவட்டமாக நிராகரித்த ஈரான்! -
லாட் டவுன் வந்துருச்சு..கொஞ்சம் கொஞ்சமாய் முடங்கும் உலக நாடுகள்! பெட்ரோல், டீசலால் ஒர்க் ஃப்ரம் ஹோம் -
ட்ரம்ப் மூக்கை உடைத்த ஈரான்.. 15 கண்டிஷன்களை தூக்கி எரிந்த அலியாபாடி! வெறி கொண்டு அடிக்கும் இஸ்ரேல்! -
Iran: அமெரிக்காவின் F18 போர் விமானத்தை குருவியை சுடுவது போல சுட்டு வீழ்த்திய ஈரான் ராணுவம்.. வீடியோ! -
Donald Trump: டிரம்ப் மிகப்பெரிய தாக்குதலை நடத்த தயாராகி வருகிறார்.. ஈரானை மீண்டும் மிரட்டும் அமெரிக்கா -
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது?












Click it and Unblock the Notifications