ஜெருசலேம் விவகாரம்: டிரப்புக்கு பிரான்ஸ் அதிபர் எச்சரிக்கை
இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அமெரிக்கா ஒருதலைபட்சமாக அறிவிக்கக்கூடும் என்பது குறித்து தான்கவலை கொண்டுள்ளதாக, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங், அதிபர் டிரம்பிடம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து எந்த முடிவாக இருந்தாலும், இஸ்ரேல் மற்றும் பாலத்தீனத்தின் பேச்சுவார்த்தையின் வரையறைக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதற்கு முன்பாக, பல அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளும் இதே எச்சரிக்கையை அளித்துள்ளன.
இந்த வாரம், அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கலாம் என அறிக்கைகள் கூறுகின்றன.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன் ஆகிய இரு நாடுகளும், ஜெருசலத்தை தங்களின் தலைநகரம் என்று உரிமை கோருகின்றன.
அமெரிக்க தூதரகத்தை டெல் அவிவில் இருந்து ஜெருசலத்திற்கு மாற்றுவதற்கு இருந்துவரும் ஆணைக்கு தடைவிதிக்கும் வகையில், அதிபர் டிரம்ப் கையெழுத்திடும் கோப்பில், இந்தமுறை அவர் கையெழுத்திட தவறலாம் என வெள்ளை மாளிகை தெரிவித்தது.
ஆனால், வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளரான ஹோகன் கிட்லி, இந்த விவகாரத்தில் அதிபர் மிகவும் தெளிவாக உள்ளார். இது நடந்துவிட்டால் என்ற விஷயமல்ல, எப்போது நடக்கவுள்ளது என்பதே விஷயம் என கூறியுள்ளார்.
1995இல், அமெரிக்க நாடாளுமன்றம் தூதரகத்தை மாற்றியமைக்கவேண்டும் என சட்டம் கொண்டுவந்தது முதல், ஒவ்வொரு அமெரிக்க அதிபரும், அதை தள்ளுபடி செய்யும் வகையில் ஆறு மாத்த்திற்கு ஒருமுறை, தள்ளுபடி பத்திரத்தில் கையெழுத்திடுவார்கள்.
பிற செய்திகள்
- அதிபர் டிரம்ப் விதித்த பயணத்தடைக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி
- ஹர்திக் படேலுக்கு கூடும் கூட்டம் பிரதமர் மோதிக்கு ஏன் கூடுவதில்லை?
- விஷால் தேர்தலில் போட்டி: ''வெற்றிக்காகவா? ஓட்டை பிரிக்கவா?
- வீட்டிலும், மருத்துவமனையிலும் ஜெயலலிதாவுக்கு நடந்தது என்ன?
-
யுரேனியத்தை ஒப்படைத்தால் கூட.. ஈரான் தப்பிக்காது! டிரம்ப் கொடுத்த பகிரங்க வார்னிங்! -
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. ஈரானிடம் கெஞ்சும் டிரம்ப் அரசு.. இறுதிக்கட்டத்தில் போர்! -
அமெரிக்க பொருளாதாரம் அபாயத்தில் உள்ளதா? ஜகா வாங்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்.. வெளியானது முக்கிய அறிகுறி! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில்














Click it and Unblock the Notifications