ஜெட்ப்ளூ விமானத்தில் சக பயணிகள் மீது சிறுநீர் கழித்த வாலிபர்
போர்ட்லேண்ட்: அமெரிக்காவில் பயணி ஒருவர் விமானத்தில் சக பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகள் மீது சிறுநீர் கழித்துள்ளார்.
அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலம் ஆன்கரேஜில் இருந்து ஜெட்ப்ளூ விமானம் ஒன்று ஆரிகன் மாநிலத்தில் உள்ள போர்ட்லேண்டிற்கு கிளம்பியது. விமானத்தில் ஏறியதும் போர்லேண்டைச் சேர்ந்த ஜெப். டி. ரூபின்(27) என்பவர் தூங்கிவிட்டார். விமானம் தரையிறங்க 30 நிமிடங்கள் இருக்கையில் அவர் கண்விழித்தார்.

தனது இடத்தில் இருந்து எழுந்த அவர் இருக்கைகளின் இடைவெளி மூலமாக தனக்கு முன் வரிசையில் அமர்ந்திருந்தவர்கள் மீது சிறுநீர் கழித்தார். அப்பொழுது அவர் நிலை தடுமாறி கீழே விழ அவர் அருகே அமர்ந்திருந்தவர்கள் மற்றும் அவர்களின் உடைமைகள் மீதும் சிறுநீர் பட்டது.
அதன் பிறகு ரூபின் மீண்டும் தனது இருக்கையில் அமர்ந்து தூங்கிவிட்டார். இதற்கிடையே விமான சிப்பந்திகள் இது குறித்து போர்ட்லேண்ட் போலீசாருக்கு தகவல் அளித்தனர். விமானம் போர்ட்லேண்டில் தரையிறங்கியதும் போலீசார் வந்து ரூபினை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
5 மணிநேரம் சிறையில் இருந்த ரூபின் பின்னர் ஜாமீனில் வெளியே சென்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications