For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இனி உங்க “பெட் அனிமல்” கூட விமானத்தில் ஜாலியாக பயணிக்கலாம்!

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவில் முதன்முறையாக விலங்குகளுக்கான விமான முனையம் அமைய உள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ளது ஜான் எப்.கென்னடி விமான நிலையம். இங்கு விலங்குகளுக்கான உலகின் முதலாவது விமான முனையம், உலக தரத்தில் உதயமாக இருக்கிறது.

இந்த முனையம் 14.4 ஏக்கர் நிலத்தில், 48 மில்லியன் டாலரில், அதாவது ரூபாய் 288 கோடி மதிப்பில் 1 லட்சத்து 78 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டப்படுகிறது.

JFK to open luxury animal terminal next year

இந்த விமான முனையத்தை "ரேஸ்ப்ரூக் கேபிட்டல்" என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் அங்கமான ஆர்க் டெவலப்மென்ட் நிறுவனம் அமைக்கிறது.

இந்த விமான முனையம் செயல்பாட்டுக்கு வந்த பின்னர், ஆண்டுக்கு 70 ஆயிரம் குதிரைகள், செல்லப்பிராணிகள், பறவைகள், கால்நடைகள் ஏற்றுமதி, இறக்குமதியில் முக்கிய அங்கம் வகிக்கும்.

2016 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்த விமான முனையம் திறக்கப்பட்டு விடும்.

English summary
Animals of all types will get a chance to enjoy luxury treatment at the world’s first animal-only terminal, including a dog and cat resort and a 24/7 veterinarian hospital, to open at John Kennedy Airport next year
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X