கைமாறிய ஜியோ ஹாட்ஸ்டார்.. புது ஓனர் யார் தெரியுமா! இது பெரிய ட்விஸ்ட்! ரிலையன்ஸ் என்ன செய்ய போகிறது?
அமீரகம்: கடந்த சில ஜியோஹாட்ஸ்டார் விவகாரம் பெரிதாக வெடித்து இருந்தது. இந்த டொமைனை வாங்கிய இளைஞர் தன்னை ரிலையன்ஸ் நிறுவனம் மிரட்டுவதாகப் பரபர புகாரை முன்வைத்து இருந்தார். இதற்கிடையே இப்போது ஜியோஹாட்ஸ்டார் டொமைன் கைமாறி இருப்பதாகத் தெரிகிறது. ஆனால், அதை ரிலையன்ஸ் வாங்கவில்லை.. இரண்டு குழந்தைகள் வாங்கியுள்ளனர்.
இந்தியாவில் இப்போது உள்ள பிரபல ஸ்டிரீமிங் நிறுவனங்கள் என்றால் அது ஜியோ மற்றும் ஹாட்ஸ்டார் ஆகியவை தான். இந்த இரு நிறுவனங்களும் ஒன்றாக இணையலாம் என்று கடந்தாண்டே பேச்சு எழுந்தது.

ஜியோஹாட்ஸ்டார்: எப்படியும் இரு நிறுவனங்களும் ஒன்றாக இணையும் என்பதை எதிர்பார்த்த டெல்லியைச் சேர்ந்த இளைஞர் கடந்தாண்டே ஒருவர் ஜியோஹாட்ஸ்டார் டாட் காம் என்ற டொமைனை வாங்கினார். இதற்கிடையே இப்போது அந்த ஜியோஹாட்ஸ்டார் டொமைனை விற்கத் தயாராக உள்ளதாக அறிவித்த அந்த இளைஞர், அதற்குப் பதிலாக வெளிநாட்டில் படிக்கக் கல்லூரி கட்டணமான ஒரு கோடி ரூபாயை ரிலையன்ஸ் தனக்கு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார்.
ஆனாலும், ஜியோ அதை ஏற்க மறுப்பதாகவும் தன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போவதாக மிரட்டுவதாகவும் அந்த இளைஞர் கூறியிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில் இப்போது ஜியோஹாட்ஸ்டார் டொமைன் கைமாறியுள்ளதாகத் தெரிகிறது. ஜியோஹாட்ஸ்டார் டாட் காம் என்ற தளத்திற்குச் சென்றால் இப்போது ஐக்கிய அமீரகத்தைச் சேர்ந்த இரு சிறுவர்களின் தகவல்களே வருகிறது.
யார் இவர்கள்: இவர்கள் அமீரகத்தைச் சேர்ந்த ஜெய்னம் மற்றும் ஜிவிகா ஜெயின். சிறு வயதிலேயே சாப்ட்வேர் டெவலப் செய்து புகழ்பெற்றவர்கள் இவர்கள். அந்த இணையத்திற்கு நாம் சென்றால்.. டெல்லியைச் சேர்ந்த ஒரு இளம் டெவலப்பரை ஆதரிக்கவே இந்த டொமைனை வாங்கியதாகக் கூறப்பட்டுள்ளது.

அதில் மேலும், "நாங்கள் குழந்தைகளாக இருந்தாலும், பாசிட்டிவ் எண்ணங்களைப் பரப்புவதில் வயது என்பது ஒரு எண் மட்டுமே என்று நாங்கள் நம்புகிறோம். கடந்த கோடை விடுமுறையில் தான் எங்கள் பயணம் தொடங்கியது. இந்தியாவில் 50 மறக்க முடியாத நாட்களைச் செலவிட்டோம். பல்வேறு பின்னணியில் இருந்து வந்த குழந்தைகளுடன் எங்கள் அன்பைப் பகிர்ந்து கொண்டோம்.
என்ன காரணம்: எங்கள் பயணத்தைப் பகிர்வதன் மூலம், மற்றவர்களை ஊக்குவிக்க முடியும் என்று நம்புகிறோம். இந்த பாசிட்டிவ் பயணத்தைத் தொடரவே நாங்கள் விரும்புகிறோம். அதற்காக இதனால் வரும் காலத்தில் இந்த டொமைனை விற்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம்" என்று கூறுகிறார்கள் இந்த குழந்தைகள்.
இதன் மூலம் ஜியோஹாட்ஸ்டார் டாட் காம் என்ற தளம் கைமாறி இருப்பது உறுதியாகியுள்ளது. டெல்லியை சேர்ந்த அந்த இளைஞர் தான் ரிலையன்ஸ் உடன் சட்ட ரீதியான போராட்டத்திற்குத் தயாராக இல்லை என்பதைத் தெளிவாகவே கூறியிருந்தார். இதன் காரணமாகவே அவர் ஐக்கிய அமீரகத்தைச் சேர்ந்த இந்த இளைஞர்களுக்கு இந்த டொமைனை விற்று இருக்கலாம் எனத் தெரிகிறது.
ரிலைன்ஸ் அடுத்து என்ன செய்யும்: ஜியோ மற்றும் ஹாட்ஸ்டார் ஓடிடி தளங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒன்றாக இணைந்தன. ஜியோஹாட்ஸ்டார் டாட் இன் என்ற டொமைனை அந்த நிறுவனம் கடந்த மார்ச் மாதம் வாங்கி இருந்தது. இப்போது ஜியோஹாட்ஸ்டார் டாட் காம் என்ற தளத்தை இந்த சிறுவர்களிடம் இருந்து வாங்குமா என்பதை நாம் பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications