தேதி குறிச்சாச்சு! வெள்ளை மாளிகைக்கு கிளம்பும் டிரம்ப்.. ஜோ பைடனுடன் சந்திப்பு! ஆனா 2020ல் நடக்கலயே!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, வெள்ளை மாளிகையில் சந்திக்க வருமாறு ஜோ பைடன் அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில், வரும் புதன்கிழமையன்று ஜோ பைடனை சந்திக்க வெள்ளை மாளிகைக்குச் செல்ல இருக்கிறார் டிரம்ப்.

அமெரிக்காவின் 47வது அதிபராக, குடியரசுக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு உலகத் தலைவர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், டிரம்ப்பை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயக கட்சியைச் சேர்ந்த வேட்பாளரும் தற்போதைய துணை அதிபருமான கமலா ஹாரிஸும் வாழ்த்து தெரிவித்தனர்.

Joe Biden to Meet President-Elect Donald Trump at White House for Orderly Transition of Power

டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் 47வது அதிபராக வரும் ஜனவரி மாதம் 20 ஆம் தேதி வாஷிங்டனில் பதவியேற்க இருக்கிறார். இந்த நிலையில், அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்ததோடு வெள்ளை மாளிகையில் வந்து சந்திக்குமாறு அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்தார். ஆனால், டிரம்ப் எப்போது வெள்ளை மாளிகைக்குச் சென்று அதிபர் ஜோ பைடனை சந்திப்பார் என்பது உறுதிப்படுத்தப்படாமல் இருந்தது.

இந்நிலையில், அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், அதிபர் ஜோ பைடனை சந்திக்க உள்ள தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பும் வரும் புதன்கிழமை (நவம்பர் 13 ஆம் தேதி) வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேச உள்ளனர். அமெரிக்க அதிபராக டிரம்ப் வெற்றி பெற்ற பிறகு இதுதான் இவர்களுக்கு இடையேயான முதல் சந்திப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பின் பேரில் பைடனும் டிரம்பும் ஓவல் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு சந்திப்பார்கள், கூடுதல் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதிபர் தேர்தலுக்குப் பிறகு, பதவியில் இருந்து விலகும் ஜனாதிபதி மற்றும் பதவிக்கு வரவிருக்கும் ஜனாதிபதிக்கு இடையேயான இத்தகைய சந்திப்பு அமெரிக்காவில் வழக்கமாக உள்ளது. இது அமெரிக்காவில் ஜனநாயகத்தின் கீழ் அமைதியான அதிகார பரிமாற்றத்தின் தொடக்கத்தைக் குறிக்கும். எனினும், கடந்த 2020ல் நடந்த அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வி அடைந்ததும், அவர் ஜோ பைடனுடன் வெள்ளை மாளிகையில் சந்திப்பை நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+