"மச்சக்காரர்".. ஒரே வீட்டில் 4 பொண்ணு.. மாறி மாறி கர்ப்பம்.. ஹைலைட் "அந்த" குறிக்கோள்தான்.. இப்படியா?
100 கல்யாணம் செய்து, 100 மனைவிகளையுமே விவாகரத்து செய்ய ஆசைப்படுகிறார் 60 வயது தாத்தா
இஸ்லாமாபாத்: 100 பெண்களையாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும், அதுவே தன் வாழ்நாளின் லட்சியம் என்று பூரித்து சொல்கிறார் பாகிஸ்தான் தாத்தா ஒருவர்.
2 மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஒருவர் பரபரப்பாக மீடியாவில் பேசப்பட்டார்.. இவர் பலுசிஸ்தான் மாகாணத்தை சேர்ந்தவர்.. பெயர் சர்தார் ஜன் முகமது கான் கில்ஜி...
கில்ஜி-க்கு மொத்தம் 3 மனைவிகள்.. சமீபத்தில் அவருக்கு 60வது குழந்தை பிறந்தது.. இவர்களில் ஏதாவது ஒரு மனைவி, கர்ப்பம் ஆகி கொண்டே இருப்பாராம்..

ஹைலைட் சமாச்சாரம்
மனைவிகள் அடுத்தடுத்து கர்ப்பமாகி, குழந்தைகளும் ஒவ்வொன்றாக பிறந்து கொண்டே இருக்கும்.. இப்படி குழந்தை பெறுவதையே இந்த குடும்பம் முழு நேர தொழிலாக வைத்திருக்கிறார்கள் என்பது ஹைலைட்டான சமாச்சாரம்.. இத்தனைக்கும் கில்ஜி ஒரு டாக்டராம்.. 50 வயதாகிறது.. எல்லாருமே ஒற்றுமையாகவும், சந்தோஷமாகவும் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், இன்னும் நிறைய குழந்தைகளை பெற்றுக் கொள்ள போவதாகவும், அதுக்காக 4 ஆவதாக ஒரு பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள போவதாகவும், அந்த பெண் மூலம் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள பிளான்கள் நிறைய வைத்திருப்பதாகவும் சொல்கிறார் கில்ஜி.

மச்சக்காரர்
இந்த 60 குழந்தைகளில் சில மகன்கள், மகள்களுக்கு 20 வயதுக்கு மேல் ஆகிவிட்டது.. அவர்கள் எல்லாம் படித்து கொண்டிருக்கிறார்கள்.. ஆனால், அதற்குள் தனக்கு வயசாகிவிடுவதால், உடனே 4வது கல்யாணத்துக்கு பெண் தேடி சொல்லி வருகிறார்.. அதைவிட இன்னொரு முக்கியமான விஷயம், 4வது திருமணத்துக்கு கில்ஜி ரெடியானாலும், மற்ற 3 மனைவிகளும் இன்னும் நிறைய குழந்தைகளை பெற்றுக் கொள்ள தயாராக இருப்பதாக சொல்கிறார்கள்.. அதுவும் பெண் குழந்தைகள்தான் பெற்று கொள்ள வேண்டுமாம்.. கில்ஜி பற்றின செய்திகளை கேள்விப்பட்டு மக்கள் ஆச்சரியத்தில் மூழ்கிவிட்டனர். இப்போது அதேபோல இன்னொரு செய்தி வெளியாகி உள்ளது..

100 விவாகரத்து
இவரும் பாகிஸ்தானை சேர்ந்தவர்தான்.. எப்படியாவது 100 கல்யாணம் வரை செய்துவிட வேண்டும் என்பதுதான் இவரது வாழ்நாள் லட்சியம் என்று சொல்கிறார்.. இப்போதைக்கு இவருக்கு 26 முறை கல்யாணம் நடந்துள்ளது.. ஆனால், 22 மனைவிகளை டைவர்ஸ் செய்துவிட்டார்.. அவரது மனைவிகளில் அவரது பேத்தியின் வயதுடைய பெண்களும் இருந்ததாக தகவல்கள் கூறுகின்றன.. ஒவ்வொரு மனைவியிடமிருந்தும் அவர் குழந்தைகளை விரும்புகிறார்.. குழந்தைகள் பிறந்ததுமே, அந்த மனைவியை விவாகரத்து செய்துவிடுவாராம்.. இப்போதைக்கு மொத்தம் 4 மனைவிகள் இருக்கிறார்கள்.. அவர்களில் வயது 19-20 வயதுக்கு மேல் ஒருத்தரும் இல்லை.

100 கல்யாணம்
22 குழந்தைகள் இருக்கிறார்கள்.. இவர்கள் எல்லாருமே அவரவர் அம்மாவுடன் வசித்து வருகிறார்கள். 100 கல்யாணமும் செய்துவிட்டு, அந்த 100 மனைவிகளையும் டைவர்ஸ் செய்வது மட்டுமே இப்போதைக்கு தன்னுடைய ஒரே குறிக்கோள் என்கிறார்.. இந்த பெரியவரின் வீடியோ ஒன்று இப்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ஜியோத் ஜீத் என்பவர் தன்னுடைய ட்விட்டரில் ஷேர் செய்துள்ளார்.. அந்த வீடியோவில், முதியவரை, இளைஞர் ஒருவர் பேட்டி எடுக்கிறார்.. அவருடைய இளம் வயது மனைவிகள் அவரை சுற்றிலும் உட்கார்ந்துள்ளது வீடியோவில் பதிவாகி உள்ளது..

ஹாபியே இதுதான்
அந்த பேட்டியில், தன்னுடைய 100 கல்யாண ஆசையை பற்றி சிலாகித்து பேசுகிறார் பெரியவர்.. ஆனால், மனைவியை விவாகரத்து செய்தாலும், அவர்கள் வாழ்வதற்கு வீடுகள் மற்றும் செலவுகளை கணிசமாக வழங்கிவிடுவாராம். அதாவது, 22 மனைவிகளுக்கும் 22 குழந்தைகள் இருப்பதாகவும், அவர்கள் அம்மாக்களுடன் வசித்து வருவதாகவும் தெரிவித்துள்ள முதியவர், அவர்களுக்கு விவகாரத்து கொடுப்பதற்கு முன்பாக குழந்தைகளுக்கு சொத்தை பிரித்து கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற தன்னுடைய ஹாபிக்காக மட்டுமே இதையெல்லாம் செய்வதாக என்கிறார்.. இந்த வீடியோவை பார்த்துதான் பலரும் ஆச்சரியப்பட்டு போயுள்ளனர்.












Click it and Unblock the Notifications