நேபாளத்தின் புதிய பிரதமராக பதவியேற்றார் சர்மா ஒலி.. 3வது முறையாக பிரதமர்.. யார் இவர்?
காத்மண்டு: நேபாள நாட்டின் புதிய பிரதமராக கே.பி.சர்மா ஒலி இன்று பதவியேற்றுள்ளார். பிரதமர் சர்மா ஒலியுடன் புதிய அமைச்சர்களும் பதவியேற்றுள்ளனர்.
நேபாளத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பரில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை பலம் கிடைக்காமல் போனது. இதனால் சி.பி.என். மாவோயிஸ்டு கட்சியின் தலைவர் புஷ்ப கமல் தாஹல் பிரசந்தா, முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலியின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட 4 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, மூன்றாவது முறையாக பிரதமராக, 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 25ல் பதவியேற்றார்.

நேபாள அரசு: அதன்பிறகு கூட்டணி அரசுக்கான ஆதரவை நேபாள கம்யூனிஸ்ட் கட்சி திரும்பப் பெற்றதையடுத்து, நேபாள காங்கிரசுடன் கூட்டணி அமைத்து பிரதமர் பதவியில் நீடித்தார் பிரசந்தா. இந்தக் கூட்டணி அரசு மீது கடந்த மார்ச் 15 ஆம் தேதி நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் பிரதமர் பிரசந்தா தலைமையிலான அரசு வெற்றி பெற்றது. அதன் பிறகு மேலும் 3 முறை நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரசந்தா வென்று பதவியில் நீடித்தார்.
இந்நிலையில் மீண்டும் பாராளுமன்றத்தில் 5வது முறையாக நம்பிக்கை ஓட்டெடுப்பு கடந்த ஜூலை 12 ஆம் தேதி நடைபெற்றது. இதில் மொத்தம் 275 உறுப்பினர்களில் பிரசந்தாவுக்கு ஆதரவாக 63 ஓட்டுகளும், எதிராக 194 ஓட்டுகளும் பதிவாகின. இதையடுத்து நம்பிக்கை ஓட்டெடுப்பில் பிரசந்தா தலைமையிலான அரசு தோல்வி அடைந்ததால் பிரதமர் பதவியிலிருந்து புஷ்ப கமல் பிரசந்தா விலகினார்.
சர்மா ஒலி பதவியேற்பு: இதையடுத்து நேபாளத்தில் மீண்டும் கூட்டணி மாற்றம் ஏற்பட்டு நேபாள கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கே.பி. சர்மா ஒலி பிரதமராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். நேபாள நாட்டின் பிரதமராக கே.பி சர்மா ஒலி இன்று பதவியேற்று உள்ளார்.
அவருக்கு நேபாள குடியரசுத் தலைவர் ராம் சந்திரா இன்று காலை 11 மணிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார். பிரதமர் சர்மா ஒலியுடன் புதிய அமைச்சர்களும் பதவியேற்றுள்ளனர்.
புதிய கூட்டணி அரசை அமைப்பதற்கான ஏழு அம்ச ஒப்பந்தத்தில் இரு கட்சி தலைவர்களும் கையெழுத்திட்டு உள்ளனர். நாடாளுமன்றத்தில் எஞ்சியிருக்கும் பதவி காலம் இரு கட்சிகளுக்கும் இடையே பகிர்ந்து கொள்ளப்படும் என்று ஒப்பந்தம் குறிப்பிடுகிறது. அதன்படி அடுத்த 18 மாதங்களுக்கு சர்மா ஒலி நேபாள அரசாங்கத்தை வழிநடத்துவார்.
72 வயதான சர்மா ஒலி ஏற்கனவே 2015 அக்டோபர் முதல் 2016 ஆகஸ்ட் வரையிலும் அதன்பிறகு, 2018 பிப்ரவரி முதல் 2021 ஜூலை வரையிலும் நேபாளத்தின் பிரதமராக இருந்தார். சொந்த கட்சியில் ஏற்பட்ட மோதலால் அவர் ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது. தற்போது 3வது முறையாக நேபாளத்தின் பிரதமராக கே.பி. சர்மா ஒலி பதவியேற்றுள்ளார்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications