ஓ மை காட்... ‘கபாலி’யில் நடித்த 2 மலேசிய நடிகர்கள் திருட்டு வழக்கில் கைது!
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த வெற்றிப்படமான கபாலியில் நடித்த மலேசிய துணை நடிகர்கள் இருவர் திருட்டு வழக்கில் அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோலாலம்பூர்: ரஜினி நடித்த கபாலி படத்தில் துணை நடிகர்களாக நடித்த நடிகர்கள் இருவரை திருட்டு வழக்கில் மலேசிய போலீசார் கைது செய்துள்ளனர்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த வெற்றிப்படம் கபாலி. மலேசிய டானைப் பற்றிய இந்தக் கதையில் பெரும்பாலான காட்சிகள் மலேசியாவில் படமாக்கப்பட்டது. எனவே முக்கிய நடிகர்கள் போக மீதமுள்ள துணை நடிகர்கள் கதாபாத்திரத்தில் அங்குள்ள நடிகர்கள் நடிக்க வைக்கப்பட்டனர்.

அப்படியாக கபாலி படத்தில் துணை நடிகர்களாக நடித்த இரண்டு பேரை மலேசிய போலீசார் ஷா ஆலம் பகுதியில் கைது செய்துள்ளனர். திருட்டு வழக்கில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாகத் தெரிகிறது.
புச்சோங் மற்றும் சன்வே பகுதிகளில் பூட்டப்பட்ட வீடுகளில் புகுந்து விலை உயர்ந்த பொருட்களை திருடி அதனை அடகு வைத்து வந்துள்ளனர் கைது செய்யப்பட்ட இருவரும். திருடப்பட்ட சில பொருட்களின் அடகு ரசீதுகளைப் போலீசார் அவர்களிடம் இருந்து மீட்டுள்ளனர்.
போலீசாரின் சோதனையில் கைது செய்யப்பட்ட துணை நடிகர்கள் இருவரும் போதை மருந்து உட்கொண்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications