கண்ணா உன்னை தேடுகிறேன் வா... கல்பனா அக்காவின் காதலர் தின ‘டெரர்‘ வாழ்த்து!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  கல்பனா அக்காவின் காதலர் தின ‘டெரர்‘ வாழ்த்து!- வீடியோ

  மெல்பர்ன்: சொந்தக் குரலில் பாடல்களை பாடி முகநூல் பக்கத்தில் அப்லோட் செய்யும் கல்பனா அக்கா தனது ஸ்டைலில் காதலர் தின வாழ்த்து கூறியுள்ளார்.

  கல்பனா பேல்ஸ் என்ற பெயருடன் முகநூல் பக்கத்தில் வலம் வரும் இவர் பிறந்தது யாழ்பாணம். மேற்படிப்பை இந்தியாவில் தான் பயின்றுள்ளார் கல்பனா.

  தற்போது ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் பகுதியில் வசித்து வருகிறார். இவர் அவ்வப்போது சீஸனுக்கு ஏற்றார்போல் ஹிட் பாடல்களை பாடி தனது முகநூல் பக்கத்தில் அப்லோட் செய்து வருகின்றார்.

  அசராத கல்பனா அக்கா

  அசராத கல்பனா அக்கா

  அவரது பாடல்கள் கலாய்ப்புக்கு உட்பட்டாலும் ஏராளமானோர் அதனை லைக் செய்வதும் ஷேர் செய்வது வாடிக்கை. ஆனாலும் அசராத கல்பனா அக்கா தொடர்ந்து தனது சேவையை ஆற்றி வருகிறார்.

  காதலர் தினத்தை முன்னிட்டு

  காதலர் தினத்தை முன்னிட்டு

  இதனால் அவரை ஃபேஸ்புக் பக்கத்தில் பலர் பின்தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு கல்பனா அக்கா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பாடல் ஒன்றை பாடி காதலர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  பறக்கும் முத்தத்துடன் வாழ்த்து

  பறக்கும் முத்தத்துடன் வாழ்த்து

  கண்ணா உன்னை தேடுகிறேன் வா.. என சைக்கிளில் சுற்றி சுற்றி வந்து காதல் ததும்ப பாடும் கல்பனா அக்கா முடிவில் பறக்கும் முத்தத்துடன் தனது காதலர் தின வாழ்த்தை கூறுகிறார்.

  ஒரு லட்சம் பேர்

  அவரது இந்த வீடியோவை இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஷேர் செய்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாராட்டியுள்ளனர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Kalpama bales has released a video for valentine day. She sang a song for valentine day. This video goes viral on social media.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற