ரியாலிட்டி ஷோவில் நடிக்க கவர்ச்சி புயல் கர்தாஷியன்களுக்கு ரூ.618 கோடி சம்பளம்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: கீப்பிங் அப் வித் தி கர்தாஷியன்ஸ் என்ற அமெரிக்க தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சியின் அடுத்த சீசனுக்காக கிம் உள்ளிட்ட கர்தாஷியன்கள் ரூ. 618 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்களாம்.
அமெரிக்க தொலைக்காட்சி நடிகையும், மாடலுமான கிம் கர்தாஷியன், அவரது சகோதரிகள் க்ளோ கர்தாஷியன், கோர்ட்னி கர்தாஷியன், கென்டால் ஜென்னர் மற்றும் கைலி ஜென்னர் ஆகியோர் கீப்பிங் அப் வித் த கர்தாஷியன்ஸ் என்ற டிவி ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகின்றனர். இந்த நிகழ்ச்சி மூலம் கர்தாஷியன்கள் கண்டமேனிக்கு புகழ் பெற்றுள்ளனர்.
இ தொலைக்காட்சி சேனலில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

ஒப்பந்தம்
கீப்பிங் அப் வித் தி கர்தாஷியன்ஸ் நிகழ்ச்சியின் அடுத்த 4 சீசன்களுக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

ரூ.618 கோடி
ரியாலிட்டி நிகழ்ச்சியின் அடுத்த நான்கு சீசன்களில் கலந்து கொள்ள கர்தாஷியன் சகோதரிகள் ரூ.618 கோடி சம்பளம் பெறுகின்றனர்.

அதிக சம்பளம்
தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிக்கு அதிக சம்பளம் வாங்குவோரில் கர்தாஷியன் சகோதரிகளும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

கர்தாஷியன்கள்
கர்தாஷியன்களுக்கு ரூ.618 கோடி சம்பளம் எல்லாம் அளிக்கவில்லை என்று இ தொலைக்காட்சி சேனலின் செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டல் வீலர் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த தொகை குறித்து அனைவருக்கும் தெரிய வந்தால் பிற நடிகர், நடிகைகளும் தங்களுக்கும் அதிக சம்பளம் கேட்பார்கள் என்பதால் கர்தாஷியன்களுக்கு அளித்துள்ள சம்பளம் பற்றிய உண்மையை மறைக்க இ சேனல் முயற்சி செய்கிறது என்று கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications