அடிவாங்கியது போதாது போல.. பாகிஸ்தான் ராணுவ தளபதி திமிர் பேச்சு.. காஷ்மீர் பற்றி சொன்னதை பாருங்க
இஸ்லாமாபாத்: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக நம் நாடு ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள், விமானப்படை தளங்களை ஏவுகணைகள் மூலம் நம் நாடு அழித்தது. இதில் கதிகலங்கிபோன பாகிஸ்தான் நம் நாட்டிம் சரணடைந்தது. இந்நிலையில் தான் நடந்த சம்பவத்தை மறந்து பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீர் மீண்டும் காஷ்மீரை வைத்து நம் நாட்டை சீண்டும் வகையில் பேசி உள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் பஹல்காமில் நுழைந்த பயங்கரவாதிகள் 26 சுற்றுலா பயணிகளை சுட்டு கொன்றனர். இதையடுத்து மே 7 ம் தேதி ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை நம் நாடு தொடங்கியது. பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. அதேபோல் விமானப்படை தளம் உள்பட ராணுவத்துக்கு சொந்தமான 12 முக்கிய இடங்களில் துல்லியமாக நம் நாடு தாக்குதல் நடத்தியது.
நம் நாட்டின் சக்திவாய்ந்த பிரமோஸ் ஏவுகணைகள் சீறிப்பாய்ந்து அந்த நாட்டின் கட்டமைப்புகளை அழித்தது. ஆத்தி.. விட்டால் பாகிஸ்தானை மொத்தமாக அழித்து விடுவார்கள் என்று பதறிய ராணுவம், நம் நாட்டிடம் மண்டியிட்டது. எங்கள் நாடு எங்களுக்கு வேண்டும். தாக்குதலை உடனே நிறுத்துங்கள் என கெஞ்சியது. அதன்பிறகு தான் நம் நாடு தாக்குதலை நிறுத்தியது.
இதனால் தற்போது எல்லையில் அமைதி நிலவி வருகிறது. இருப்பினும் கூட ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை இன்னும் முடியவில்லை. பாகிஸ்தான் நம்மை சீண்டினால் உடனடியாக பதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் மோடி, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பாகிஸ்தான் ஒருவித கலக்கத்திலேயே இருந்து வருகிறது.
இப்படி நம்மிடம் சரணடைந்த பாகிஸ்தான் அந்த நாட்டு மக்களிடம் இந்தியாவை வீழ்த்திவிட்டோம் என்று மார்த்தட்டி வருகிறது. போதாத குறைக்கு மூக்குடைப்பட்ட பாகிஸ்தான் ராணுவத்தை வழிநடத்தும் ராணுவ தளபதி அசீம் முனீருக்கு ஃபீல்ட் மார்ஷல் பட்டம் வேற கொடுக்கப்பட்டது. இதனை பார்த்து உலகமே கைக்கொட்டி சிரிக்கிறது. இப்படி தொடர்ந்து கோமாளித்தனத்தை பாகிஸ்தான் செய்து வருகிறது. மேலும் அவ்வப்போது நம் நாட்டையும் சீண்டி வருகிறது. இந்நிலையில் தான் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீர் மீண்டும் நம் நாட்டை சீண்டும் வகையில் பேசி உள்ளார். கராச்சி பாகிஸ்தான் கடற்படை அகாடமியில் நடந்த நிகழ்ச்சியில் அசீம் முனீர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
எந்தவித தூண்டுதலும் இல்லாமல் இந்தியா 2 முறை நம் மீது தாக்குதல் நடத்தி உள்ளது. இது இருநாடுகள் இடையேயான மூலோபாய தொலைநோக்கு பார்வை இல்லாத செயலாகும். இந்த பிராந்திய பதற்றங்களுக்கு இந்தியா தான் காரணம். எதிர்காலத்தில் இந்தியா ஏதேனும் ஆக்கிரமிப்பு செய்தால் உரிய பதிலடி கொடுக்கப்படும். பாகிஸ்தான் முதிர்ச்சியுடனும், கட்டுப்பாட்டுடனும் செயல்படுகிறது.
பிராந்திய அமைதிக்கு பாகிஸ்தான் எப்போதும் உறுதுணையாக இருக்கும். பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஒழிக்கும் தருவாயில் இந்தியா வேண்டுமென்றே பிராந்தியத்தில் பதற்றத்தை உருவாக்குகிறது. காஷ்மீரில் இந்தியா சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்துள்ளது. இதற்கு காஷ்மீர் சகோதரர்கள் கொடுக்கும் தியாகங்களை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.
ஐநா தீர்மானத்தின் படியும், காஷ்மீர் மக்களின் விருப்பத்தின் படியும் காஷ்மீர் பிரச்சனைக்கு நியாயமான தீர்வு காண பாகிஸ்தான் துணை நிற்கும். மேலும்காஷ்மீர் பாகிஸ்தானின் கழுத்து எலும்பு. அதனை நாங்கள் எப்போதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்'' என்று வாய்ச்சவடால் விட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications