காஷ்மீர் பிரச்சனையில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை! திடீரென இறங்கி வரும் பாக் ராணுவ தளபதி! என்னாச்சு?
இஸ்லாமாபாத்: இந்தியா உடனான காஷ்மீர் உள்பட அனைத்து பிரச்சனைகளையும் அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து கொள்ள வேண்டும். மேலும் இந்தியா, சீனா, அமெரிக்காவுடன் நல்லுறவு பேண பாகிஸ்தான் விரும்புகிறது'' என அந்த நாட்டின் ராணுவ தலைமை ஜெனரல் கமர் பஜ்வா கூறினார்.
'இஸ்லாமாபாத் பாதுகாப்பு உரையாடல்' என்ற பெயரில் இருநாள் மாநாடு நடைபெற்றது. விரிவான பாதுகாப்புக்கான சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பை மறுவடிவம் செய்தல் என்ற தலைப்பின் கீழ் சர்வதேச பாதுகாப்பில் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த மாநாட்டில் நேற்று பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமை ஜெனரல் கமர் பஜ்வா பங்கேற்றார். இதில் அவர் பேசியதாவது:

இந்தியாவுடன் பேச்சு
நம்நாட்டில் பிரச்சினைகளை விலக்கி வைப்பது முக்கியமானதாகும். பிற நாடுகளுடன் நடத்தும் பேச்சுவார்த்தையில் நம்பிக்கை உள்ளது. காஷ்மீர் பிரச்சனை உட்பட நிலுவையில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கலாம் என்பதில் பாகிஸ்தான் தொடர்ந்து நம்பிக்கை வைத்துள்ளது. இதற்கு இந்தியா ஒப்புக்கொண்டால் அதற்கான முன்னெடுப்புகளுக்கு தயாராக இருக்கிறோம்.

ஏவுகணை விஷயத்தில் கவலை
காஷ்மீர் பிரச்சினையை தவிர, இந்தியா-சீனா எல்லை பிரச்சினை கவலையளிக்கிறது. இதுவும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும். ஏனென்றால் இந்த பிராந்தியத்தின் கிட்டத்தட்ட மூன்று பில்லியன் மக்களுக்கு அமைதியை கொண்டு வர வேண்டிய நேரம் இது என நம்புகிறேன்.
பாகிஸ்தானில் ஏவுகணை விழுந்த விவகாரம் விபத்து என இந்தியா கூறியது. இது கவலையளிக்கும் வகையில் உள்ளது. மேலும் நாட்டில் உள்ள ஆயுதங்கள் அனைத்தும் உரிய பாதுகாப்புடன் தான் உள்ளது என இந்தியா, பாகிஸ்தான் உள்பட பிற நாடுகளுக்கு ஆதாரங்களுடன் உறுதி அளிக்கும் என எதிர்பார்க்கிறேன். ஏனென்றால் ஆயுத படைகளை தாண்டி ஒரு நாட்டில் இருந்து சூப்பர்சோனிக் ஏவுகணை வேறு நாட்டில் பாய்வது இதுதான் முதல் முறை என நான் நினைக்கிறேன். இதனால் அதிக கவனம் தேவை .

ஒற்றுமை, நல்லிணக்கம்
தெற்காசியா மேற்குலக நாடுகளில் அமைதி நிலவ வேண்டும் என்பதே எங்களின் எண்ணமாக உள்ளது. பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்புக் கொள்கையானது தேசிய பாதுகாப்பில் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. இதை முன்னெடுக்க அண்டை நாடுகளுக்கும் எங்கள் கதவுகள் திறந்தே இருக்கும். தற்போது ஓராண்டாக எல்லை கட்டுப்பாட்டு கோட்டையொட்டிய பகுதிகளில் அமைதி நிலவுகிறது. இது திருப்தி அளிக்கிறது.

அமெரிக்காவுடன் சுமூக உறவு
மேலும் சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் நல்லுறவு உள்ளது. இந்த நாடுகள் உள்பட இந்தியாவுடன் சுமூக உறவு வைத்து கொள்வதை தான் பாகிஸ்தான் விரும்புகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கையை கைவிட பாகிஸ்தான் கூறியது. மேலும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என பாகிஸ்தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்றார்.
Recommended Video

நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ஓட்டு
முன்னதாக பாகிஸ்தானில் கடந்த சில வாரமாக பிரதமர் இம்ரான் கான் ஆட்சிக்கு எதிரான நிலைப்பாடு உள்ளது. இதற்கு அங்குள்ள ராணுவம் தான் காரணம் என கூறப்படுகிறது. இன்று மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது ஓட்டெடுப்பு நடைபெற உள்ளது. இதனால் 2 நாட்களுக்கு முன் பேசி இம்ரான் கான் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக அமெரிக்கா சதி செயலில் ஈடுபட்டுள்ளதாக கூறினார். இந்நிலையில் தான் அமெரிக்காவுடன் சுமூக உறவை வைத்து கொள்ள பாகிஸ்தான் விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
-
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
அசிங்கப்பட்ட பாகிஸ்தான்! முகத்திலேயே விழுந்த அடி.. கப்பலை கூட அனுமதிக்காத ஈரான்! இதெல்லாம் தேவை தானா -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்!












Click it and Unblock the Notifications