இவரு பெரும் கோடீஸ்வரராச்சே.. காஷ்மீர் பிரிவினைவாதியை சந்தித்த முகமது யூனுஸ்.. இந்தியாவுக்கு சிக்கல்

Subscribe to Oneindia Tamil

டாக்கா: காஷ்மீர் பிரிவினைவாதியாகவும், அமெரிக்காவின் பெரும் கோடீஸ்வரராகவும் அறியப்படும் ஜார்ஜ் சோரஜின் மகன் அலெக்ஸ் சோரஸ் வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸை சந்தித்து பேசியுள்ள நிலையில் அது நம் நாட்டுக்கான வார்னிங்காக பார்க்கப்படுகிறது.

வங்கதேசத்தில் இடைக்கால அரசு நடந்து வருகிறது. இந்த அரசின் தலைமை ஆலோசகராக இருப்பவர் முகமது யூனுஸ். இப்போது வங்கதேசத்தின் நிலைமை மோசமாகி உள்ளது. வங்கதேசத்தில் வேலைவாய்ப்பு குறைந்துள்ளது. அதேபோல் பொருளாதார நெருக்கடி உள்ளது.

bangladesh muhammad yunus

இதனால் வங்கதேசம் பிற நாடுகளை சார்ந்து இருக்க வேண்டிய சூழல் உள்ளது. சீனாவிடம் கூட வாங்கிய கடனை திரும்ப செலுத்த கூடுதல் காலஅவகாசத்தையும், அந்த கூடுதல் காலஅவகாசத்துக்கு வட்டி வசூலிக்க கூடாது என்றும் வங்கதேசம் கெஞ்சியுள்ளது. பிற உலக நாடுகளிடம் வங்கதேசம் உதவி கோரியும் வருகிறது.

இதற்கிடையே தான் வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் முக்கிய நபரை சந்தித்துள்ளார். இது இந்தியாவுக்கு வார்னிங்காகவும் பார்க்கப்படுகிறது. அப்படி முகமது யூனுஸ் சந்தித்த நபர் யாரென்றால் அலெக்ஸ் சோரஸ். இவர் அமெரிக்காவை சேர்ந்த பெரும்பணக்காரர். அதோடு அலெக்ஸ் சோரஸ் ‛ஓபன் சொசைட்டி பவுண்டேஷன்' தலைவராக உள்ளார்.

இப்படியான நிலையில் தன் அலெக்ஸ் சோரஸ், முகமது யூனுசை சந்தித்து பேசியுள்ளார். இது தொடர்பாக வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகரின் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‛‛ தி ஓபன் சொசைட்டி பவுண்டேஷன் தலைவர் வங்கதேச தலைமை ஆலோசகரை சந்தித்து பேசினார். வங்கதேசத்தின் கட்டமைப்பை வலுப்படுத்துவது, பொருளாதாரத்தை மீட்டெடுப்பது, பொருளாதார சீர்த்திருத்தம் மேற்கொள்வது பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது'' என்று கூறப்படுகிறது.

இந்த சந்திப்பு என்பது அமெரிக்கா சார்பில் வங்கதேசத்துக்கு வழங்கப்பட்ட வெளிநாடு நிதி உதவி ரத்து செய்யப்பட்ட மறுநாள் நடந்து உள்ளது. அதோடு முகமது யூனுஸ் மற்றும் அலெக்ஸ் சோரஸ் இடையே மீட்டிங் நடப்பது இது முதல் முறையல்ல. வங்கதேசத்தில் ஹசீனாவின் ஆட்சி கலைந்த பிறகு இடைக்கால அரசு அமைந்ததவுடன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் முறையாக இருவரும் சந்தித்து கொண்டனர். இப்போது 2வது முறையாக சந்திப்பு என்பது ஏற்பட்டுள்ளது.

மேலும் இவர்கள் 2 பேருக்கும் இடையே நல்ல உறவு என்பது உள்ளது. அதாவது முகமது யூனுஸ் வங்கதேசத்தில் கிராம வங்கியை தொடங்கி ஏழை எளிய மக்களுக்கு கடன் உ.தவி வழங்கி தான் பெயர் பெற்றார். அப்போது முகமது யூனுஸ் கிராம வங்கிக்கு அலெக்ஸ் சோரஸின் தந்தையும், பெரும் பணக்காரருமான ஜார்ஜ் சோரஸ் தான் கடனுதவி செய்தார். 1999ல் ஓபன் சொசைட்டி பவுண்டேஷனில் இருந்து முகமது யூனுஸ் 11 மில்லியன் அமெரிக்க டாலரை கடனாக பெற்றார். கிராமீன் டெலிகாம் நிறுவனத்துக்கு இந்த கடன் தொகை பயன்படுத்தப்பட்டது. அதன்பிறகு தான் வங்கதேசத்தில் டெலிகாம் துறை வளர்ச்சி பெற தொடங்கியது.

இப்போது உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம். இவர்கள் 2 பேரின் சந்திப்பில் இந்தியாவுக்கு என்ன பாதிப்பு வரும்? என்று நீங்கள் கேட்கலாம். அதற்கு நாம் முந்தைய கால வரலாற்றை பார்க்க வேண்டும். அதாவது முகமது யூனுஸை சந்தித்த அலெக்ஸ் சோரஸின் தந்தை பெயர் ஜார்ஜ் சோரஸ். பெரும் பணக்காரரான இவரும் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார். அதுமட்டுமின்றி தந்தை பாணியில் அலெக்ஸ் சோரஸ் மற்றும் அவரது ‛ஓபன் சொசைட்டி பவுண்டேஷன்' அமைப்பு நம் நாட்டுக்கு சொந்தமான காஷ்மீரை சுதந்திர நாடாக அறிவிக்க வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகிறது.

இதனை நம் நாடு மதிக்காத நிலையில் அலெக்ஸ் சோரஸ் மற்றும் அவரின் ‛ஓபன் சொசைட்டி பவுண்டேஷன்' என்பது காஷ்மீர் பிரிவினைவாதம் செய்வதாக முத்திரை குத்தப்பட்டுள்ளது. மேலும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூட அலெக்ஸ் சோரஸை விமர்சனம் செய்து இருந்தார். அவர் ஒரு பழமைவாதி. பணக்காரர். ஆபத்தானவர் என்று 3 வார்த்தைகளில் விமர்சனம் செய்து இருந்தார். இதனால் வங்கதேச இடைக்கால ஆலோசகர் முகமது யூனுஸ் உடனான இந்த சந்திப்பு என்பது நம் நாட்டுக்கு எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் வங்கதேசம் ஏற்கனவே நம்மை சீண்டி வருகிறது. வடகிழக்கு மாநிலங்களில் பிரச்சனைகளை ஏற்படுத்த உல்பா அமைப்புடன் வங்கதேசம் கைகோர்க்கலாம் என்று கூறப்படுகிறது. அதேபோல் பாகிஸ்தானுடன் இப்போது வங்கதேசம் இணக்கம் காட்ட தொடங்கி உள்ளது. இப்படியான நிலையில் காஷ்மீரை சுதந்திர நாடாக அறிவிக்க வேண்டும் என்று கூறி வரும் பெரும் பணக்காரர் ஜார்ஜ் சோரஸ் அவரது மகன் அலெக்ஸ் சோரசுடன் வங்கதேசத்தின் முகமது யூனுஸ் சந்தித்து இருப்பது நம் நாட்டுக்கு அச்சுறுத்தலாகவே பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இந்த ஓபன் சொசைட்டி பவுண்டேஷன் தற்போது 100 நாடுகளுக்கு உதவி செய்து வருகிறது. அதோடு தற்போதைய மோதலுக்கு நடுவே வங்கதேசத்துக்கு உதவி செய்யும் பட்சத்தில் அது நம் நாட்டுக்கு சிக்கலை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+