கென்ய பல்கலைக்கழகத்தில் வெடிகுண்டு பீதி... 5 வது மாடியில் இருந்து குதித்த மாணவர் பலி- 141 பேர் காயம்
நைரோபி: கென்யா பல்கலைக்கழகத்தில் வெடிகுண்டு பீதியில் உயிர் தப்பிக்க நினைத்த மாணவர்கள் மாடியில் இருந்து குதித்ததில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இச்சம்பவத்தில் காயமடைந்த 141 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
கடந்த 2-ந்தேதி கென்யாவின் கரிஸ்ஸா பல்கலைக்கழத்தில் தீவிரவாதிகள் புகுந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினார்கள். இதில், 148 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இன்னும் இந்த அதிர்ச்சியில் இருந்து அந்நாட்டு மாணவர்கள் வெளியேறவில்லை.

இந்நிலையில், நேற்று காலை நைரோபி பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரீகல் டிரான்ஸ்பார்மர் ஒன்று திடீரென வெடித்தது. அப்போது பல்கலைக்கழகத்தில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்தனர். டிரான்ஸ்பார்மர் வெடித்த சத்தத்தை குண்டு வெடித்ததாக மாணவர்கள் தவறாக புரிந்து கொண்டனர். எனவே தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மாணவர்கள் அலறி அடித்து வெளியே ஓடி வந்தனர். பல மாணவர்கள் மாடியில் இருந்து குதித்து வெளியேற முயற்சித்தனர்.
இதனால், மாணவர்களுக்கிடையே பயங்கர தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உயிர் ஆசையில் ஒருவரை ஒருவர் முந்திச் செல்ல ஓடியதால் பல மாணவர்கள் தவறிக் கீழே விழுந்தனர். அவர்கள் மீது மற்ற மாணவர்கள் மிதித்துக் கொண்டு ஓடினர். இதில் 141 மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதேபோல், 5வது மாடியில் இருந்து குதித்த மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து நைரோபி பல்கலைக்கழக துணைவேந்தர் பீட்டர் பிதி கூறுகையில், ‘‘எலக்ட்ரீக்கல் டிரான்ஸ்பார்மர் வெடித்து தீப்பொறி கிளம்பியது. இது தவறுதலாக வெடிகுண்டு வெடித்ததாக பீதி கிளம்பியது. இதனால் மாணவர்கள் பதறி அடித்து ஓடியுள்ளனர்.
3-ம் ஆண்டு மாணவர் ஒருவர் 5-வது மாடியில் இருந்து குதித்துள்ளார். பலத்த காயம் அடைந்த அவர் மருத்துவமனயைில் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். மேலும், சிலர் 6-வது மாடியில் இருந்து குதித்துள்ளனர். அவர்கள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்'' என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications