இறந்த குட்டியை தூக்கி சுமந்த தாய் திமிங்கலம்.. உருக வைக்கும் பாச போராட்டம்
இறந்த குட்டியை 17 நாள் சுமந்து கடலிலேயே திமிங்கலம் சுற்றி சுற்றி வந்தது.
Recommended Video

ஹவாய்: உலகம் பூராவும் மாறாததும், மறையாததும், மங்காததும் = தாய்மை ஒன்றுதான். அது மனிதர்கள் முதல் அனைத்து ஜீவராசிகளுக்கும் பிறவியிலேயே கிடைத்த அருட்கொடை.
தான் சுமந்து பெற்றதை பாதுகாக்கும் போதாகட்டும் அல்லது பெற்றதை இழந்த போதாகட்டும், தாய்மையின் வலியை சொல்ல முடியாது. உணர மட்டுமே முடியும். அப்படி ஒரு ஜீவனின் பாசப்போராட்டம் இது.

அமெரிக்காவில் உள்ள மாகாணம் ஹவாய். இங்கு ஒரு திமிங்கலம் ஒரு குட்டியை ஈன்றது. அந்த குட்டி பிறந்ததிலிருந்தே அதனுடன் தாய் திமிங்கலம் துள்ளி குதித்து விளையாடியது. சிறிது நாளிலேயே அந்த குட்டி திமிங்கலம் திடீரென இறந்துவிட்டது. ஏன் இறந்துவிட்டது என்றே தெரியவில்லை. ஆனால், இதனை அந்த தாய் திமிங்கலத்தால் தாங்கி கொள்ளவே முடியவில்லை. சோகம் நிறைந்து வழிந்தது. கூடவே இருந்த தன் குட்டி இறந்துவிடவும் அதை விட்டு செல்லவும் முடியவில்லை.
அதனால் குட்டியை தன் மேலேயே போட்டு சுமந்தது. சுமந்து கொண்டு எங்கு செல்வது என்றும் தெரியவில்லை. தீராத துன்பத்துடன் கடலையே சுற்றி சுற்றி வந்தது. எவ்வளவு நேரம் தன் குட்டியை சுமந்து திரிந்தது தெரியுமா? ஒன்றல்ல, இரண்டல்ல, 17 நாட்கள் இப்படியே சுற்றி வந்தது. அதாவது 1,600 கிலோ மீட்டருக்கு மேல் குட்டியை சுமந்தபடி நீந்தி வந்துள்ளதாக கடல்வாழ் உயிரின ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
பொதுவாக திமிங்கலம் இரண்டு வாரம் தான் குட்டியுடன் திரியுமாம். ஆனால் தவித்தபடி கடலையே சுற்றி சுற்றி வந்ததன் மூலம் இந்த திமிங்கலம் புதிய சாதனை படைத்துள்ளதாகவும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். என்னதான் சாதனை படைத்தாலும் 17 நாள் பாசப்போராட்டத்துக்கு ஈடாகுமா அதெல்லாம்? தாய்மையின் முன் எது நின்றாலும் அது தூள் தூளாக காணாமல்தான் போகும்
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications