அசால்ட்டா ஆபீசர்களை "தொங்கவிட்ட" அதிபர்.. ஆயிரக்கணக்கானோரை விழுங்கிய வெள்ளம்.. வட கொரியாவில் பரபரப்பு
பியாங்யாங்: வடகொரியாவை வெள்ளம் சூழ்ந்து, ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், அதிபர் கிம் ஜாங் உன் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறார்.. இதனால், வடகொரியாவே அதிர்ந்து போய் கிடக்கிறது. என்ன நடக்கிறது வடகொரியாவில்?
வடகொரியா மாகாணம் ஒன்றில் மொத்தமாக புரட்டிப் போட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 4,000 பேர்கள் வரையில் பலியான சம்பவத்தில் ஜனாதிபதி கிம் ஜோங் உன் கடும் நடவடிக்கை முன்னெடுத்துள்ளார்.

வட கொரியாவில் மலைகளில் உள்ள காடுகள் அழிக்கப்படுவதால், வெள்ளம் ஏற்படும் ஆபத்து அதிகம் என்றும் அதன் கட்டமைப்பும் இயற்கை சீற்றங்களை அவ்வளவாக தாங்கக்கூடியதாக இல்லை என்றும் ஏற்கனவே ஆய்வாளர்கள் எச்சரித்திருந்தனர்.
வடகொரியா: அதற்கேற்றவாறு, சமீபகாலமாகவே வடகொரியாவை கனமழையும், வெள்ளமும் புரட்டி போட்டு வருகிறது.. அதிலும் கடந்த ஜூலை மாதம் எதிர்பார்க்காத அளவுக்கு, பேய்மழை பெய்தது.. இதனால், வட கொரியாவின் சினுய்ஜு நகரத்திலும், சீனாவின் எல்லைக்கு அருகிலுள்ள பியாங்யான் மாகாணத்தின் உய்ஜு பகுதியிலும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கிவிட்டன.
இதனால், வடகொரிய அதிபர் கிம் ஜான் உன், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்கு ரப்பர் படகில் நேரில் சென்று பார்வையிட்டிருந்தார்.. கிட்டத்தட்ட 7 ஆயிரத்து 400 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியதை கண்டும், ஏராளமான வீடுகள், கட்டடங்கள், சாலைகள் அனைத்தையும் வெள்ள நீர் சூழ்ந்திருந்ததை கண்டும் வேதனையுற்றார். வெள்ள நீரில் வடகொரியா தத்தளிக்கும் வீடியோ காட்சிகள் எல்லாம் இணையத்தில் வெளியாகி, காண்போரை கலங்கடித்திருந்தது.
வெள்ள சேதம்: இதற்கு நடுவில், வடகொரியாவின் Chagang மாகாணத்தில், பெய்த கன மழை காரணமாக பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டதால், 4,000 பேர்கள் வரையில் இறந்திருக்கலாம் என்கிறார்கள்.. வெள்ளத்தில் பலர் உயிரிழந்த நிலையில், ஆயிரக்கணக்கானோர் குடியிருப்புகளை இழந்துள்ளனர்.. நூற்றுக்கணக்கானோர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதையடுத்து, ஏற்றுக்கொள்ள முடியாத உயிரிழப்புகளை ஏற்படுத்தியவர்கள், கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று வடகொரியாவின் உயர்மட்ட அதிகாரிகள் தரப்பு எச்சரிக்கையும் விடுத்திருந்தது. இப்படிப்பட்ட சூழலில், 20 முதல் 30 அதிகாரிகள் வரையில் மரண தண்டனை விதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
சிறைபிடிப்பு: அதுமட்டுமல்லாமல், ஷகாங் மாகாணத்தின் கட்சி செயலாளர் கங்-போங்-ஹூன் (Kang Bong-hoon) சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
சிறைபிடிக்கப்பட்டுள்ள கங்-போங்-ஹூன், கிம்முடன் எந்நேரமும் ஒன்றாக செயல்பட்டு வருபவர்.. கிம் மேற்கொள்ளும் அனைத்து ஆய்வு நடவடிக்கைகளின்போதும், பலமுறை பங்கேற்றவர்.. வடகொரியாவின் வெடிமருந்து தொழில் துறையின் முன்னாள் துணை இயக்குனராகவும் இவர் பணிபுரிந்துள்ளார்.
உயிரிழப்புகள்: இவ்வளவு அனுபவம் இருந்தும், வெள்ள நடவடிக்கையையும், உயிரிழப்புகளையும் தடுக்காமல் கங்-போங்-ஹூன் தவறிவிட்டதாக அதிபர் கிம் நினைக்கிறார்.. அதனால்தான், கங்-போங்-ஹூன் சிறைபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மழை மற்றும் பெருவெள்ளம் ஏற்பட்ட போது நடவடிக்கை முன்னெடுக்க தவறிய அதிகாரிகள் கண்டறியப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்றே அப்போது கிம் ஜோங் உன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தார். அத்துடன், உயிரிழப்புகள் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
இவ்வளவு எச்சரித்தும்கூட, ஆயிரக்கணக்கான உயிர்கள் வெள்ளத்தில் பறிபோய்விட்டதே என்ற கொதிப்பில் உள்ளாராம் அதிபர் கிம்.. இதையடுத்தே மரண தண்டனைகளும், சிறைப்பிடித்தலும் என அடுத்தடுத்த ஆவேச நடவடிக்கையில் இறங்கியிருக்கிறாராம்...!!!
இதுதொடர்பாக தென்கொரியாவின் சோசன் டிவி உள்ளிட்ட ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வரும் நிலையில் வட கொரியா தரப்பிலிருந்து இன்னும் எதுவுமே சொல்லவில்லை..
கிம் மறுப்பு: முன்னதாக வட கொரிய வெள்ளத்தில் அதிக மக்கள் உயிரிழந்துள்ளதை மறுத்த அதிபர் கிம், வடகொரியாவின் கடுமையான வெள்ள சேதம் குறித்த தென் கொரிய ஊடகங்களின் அறிக்கைகள் அனைத்தும் கட்டமைக்கப்பட்டவை என்றும், அரசியல் நோக்கத்துடன் தவறான பிரச்சாரம் என்றும் கண்டித்திருந்தார்..
இந்த வெள்ள பாதிப்பை பார்த்து, சீனா, ரஷ்யா, தென் கொரியாவில் இருந்தும் வடகொரியாவுக்கு உதவி அளிக்கப்பட்ட போதிலும், கிம் அந்த உதவிகளை மறுத்துவிட்டார். மழை சேத மீட்புக்கு உதவி வழங்கிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு நன்றி தெரிவித்த கிம், தேவைப்படும்போது உதவியை வாங்கி கொள்கிறேன் என்றும் கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.












Click it and Unblock the Notifications