Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் சகோதரி திடீர் மாயம்!!

Subscribe to Oneindia Tamil

பயோங்யாங்: வடகொரியா சர்வதிகாரி கிம் ஜாங் உன் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக சில செய்திகள் கூறுகின்றன. சில செய்திகள் மரணம் அடைந்துவிட்டார் என்றும் கூறுகின்றன. இந்த நிலையில், ஆட்சி பொறுப்புக்கு வந்து இருப்பதாக கூறப்பட்ட அவரது சகோதரி கடந்த ஜூலை மாதத்தில் இருந்து மாயமாகி இருப்பதாக கூறப்படுகிறது.

Recommended Video

    வடகொரியா சர்வதிகாரி கிம் ஜாங் உன் சகோதரி கிம் யோ ஜாங் திடீர் மாயம்

    வடகொரியா சர்வதிகாரி கிம் ஜாங் உன் கடந்த சில மாதங்களாக மக்கள் மத்தியில் தோன்றவில்லை. இவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பின்னர் கோமா நிலைக்கு சென்றதாக செய்தி வெளியானது. இல்லை அவர் கொரோனா காரணமாக தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் என்று கூறப்பட்டது. ஆனால், இடையில் திடீரென ஒரு நாள் தோன்றினார். அந்த நாட்டின் உரதொழிற்சாலையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். ரிப்பன் வெட்டியது உண்மையான கிம் ஜாங் உன் கிடையாது. அவரைப் போன்ற மற்றொருவர் என்று கூறப்பட்டது.

    Kim Yo Jong sister Kim Yo Jong disappeared from public view create suspect

    இதற்குப் பின்னர் இன்று வரை அவர் மக்கள் முன்பு தோன்றவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட்டத்தில் கலந்து கொண்ட புகைப்படம் வெளியாகி இருந்தது. இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதால், இவருக்கு பதிலாக நாட்டின் இரண்டாவது முக்கிய நபராக அவரது சகோதரி கிம் யோ ஜாங் உருவெடுத்து இருப்பதாக செய்தி வெளியாகி இருந்தது.

    வடகொரியாவின் இரண்டாவது முக்கிய நபர் கிம் யோ ஜாங் என்று கூறப்பட்டது. ஆனால், ஆட்சி அதிகாரம் மொத்தமும் அவரிடம் வழங்கப்படவில்லை.அடுத்த வாரிசாகவும் அவர் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் இவர் கடந்த ஜூலை 27ஆம் தேதி முதல் மாயமாகி இருப்பதாக கூறப்படுகிறது.

    இறுதியாக இவர் கொரியப் போரின் 67 வது ஆண்டு நினைவு நாளில் ராணுவத் தலைவர்களுக்கு நினைவு துப்பாக்கிகள் வழங்கினார். அதற்குப் பின்னர் இவர் எந்த பொது இடத்திலும் காணப்படவில்லை. கடந்த செவ்வாய் கிழமை கிம் ஜாங் உன் கலந்து கொண்ட கூட்டத்தின் புகைப்படம் வெளியாகி இருந்தது. இந்தப் புகைப்படத்திலும் அவரது சகோதரி இல்லை.

    கிம் ஜாங் உன்னிடம் இருந்து அதிகாரம் கை மாறியது என்பது வெளியுலகிற்கு தெரிந்து விடக் கூடாது என்பதற்காக அவர் பொது மக்கள் முன்பு தோன்றாமல் இருக்கிறார் என்ற செய்தியும் வெளியாகி வருகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+