சீனா சென்ற வடகொரிய அதிபர்.. கூட போனது யாருன்னு பாருங்க! முதல் முறையாக கிம் ஜாங் உன் செய்த விஷயம்
பீஜிங்: வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின் போது கிம் ஜாங் உன் முதல் முறையாக தனது மகளையும் அழைத்து சென்றுள்ளார். இதனால், வடகொரியாவில் அடுத்த தலைவராக தனது கிம் ஜாங் உன் மகள் ஜூ யே-வே வரக்கூடும் என்றும், இதற்காக தயார்படுத்தவே கிம் தனது மகளை பொதுவெளியில் அதிகம் காட்டி வருகிறார் என்றும் சொல்லப்படுகிறது.
இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் சரண் அடைந்த தினத்தை சீனா ஒவ்வொரு ஆண்டும் வெற்றி தினமாக கொண்டாடி வருகிறது. இந்த வெற்றி தின பேரணியில் சீனா தனது ஆயுத அணிவகுப்பை நடத்தும். இந்த நிகழ்ச்சியில் ரஷ்ய அதிபர் புதின், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உள்பட 26 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

மகளோடு சென்ற கிம் ஜாங் உன்
சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்ற இந்த பேரணியில் பங்கேற்பதற்காக ரயிலில் கிம் ஜாங் உன் பயணம் மேற்கொண்டார். நகரும் அரண்மனை என்று சொல்லும் அளவிற்கு அதி நவீன பாதுகாப்பு மற்றும் சொகுசு வசதிகள் இந்த ரயிலில் உள்ளன. 60 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே இந்த ரயிலில் பயணித்து கிம் ஜாங் உன் சீனாவை சென்றடைந்தார்.
சீனாவுக்கு செல்வது முதல் முறை
சீனாவிற்கு தனது மகளையும் முதல் முறையாக கிம் ஜாங் உன் அழைத்து சென்றுள்ளார். இதனால், வடகொரியாவில் அடுத்த தலைவராக தனது கிம் ஜாங் உன் மகளே வரக்கூடும் என்றும், இதற்காக தயார்படுத்தவே கிம் தனது மகளை பொதுவெளியில் அதிகம் காட்டி வருகிறார் என்றும் சொல்லப்படுகிறது.
இதற்கு முன்பாக கடந்த 2022 ஆம் ஆண்டு ஏவுகணை பரிசோதனையை நேரில் காண்பதற்கு தனது மகளை கிம் ஜாங் உன் அழைத்து சென்று இருந்தார். அதன்பிறகு அவ்வப்போது வடகொரியாவில் பொது நிகழ்ச்சிகளிலும் கிம் ஜாங் உன் மகள் தோன்றினாலும், வெளிநாட்டிற்கு அழைத்து செல்வது இதுவே முறையாகும். ஜூ யேவிற்கு 13 வயது இருக்கலாம் என்று தென்கொரிய புலனாய்வு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
வீட்டு பள்ளியில் படித்து வருகிறாரா?
வடகொரியாவில் போஸ்டல் ஸ்டாம்புகளில் அவரது புகைப்படம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஜூ யேவை அழைக்கும் வடகொரிய அதிபரின் மரியாதைக்குரிய மகள் என்றே மூத்த அதிகாரிகள் அழைப்பதாக சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன. மரியாதைக்குரிய என்ற வார்த்தையானது வடகொரியாவில் உயர் மட்ட தலைவர்களுக்கு மட்டுமே பயன்படுத்தக்கூடிய ஒரு வார்த்தையாகும்.
கிம் ஜாங் உன் மகள் பற்றி பொதுவெளியில் அதிகம் தகவல்கள் இல்லையென்றாலும் அண்டை நாடும், வடகொரியாவுடன் தீராப்பகையை கொண்டுள்ள நாடுமான தென்கொரிய உளவு அமைப்புகள் சில தகவல்களை பகிர்ந்துள்ளன. இதன்படி, கிம் ஜாங் உன் மகள் வீட்டு பள்ளியில் படித்து வருவதாகவும், நீச்சல், குதிரை பயணம் போன்றவற்றில் அதிகம் ஆர்வம் காட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிம் ஜாங் உன் ரயில் பயணம்
கிம் ஜாங் உன் தனது வெளிநாடு பயணங்களுக்கு பெரும்பாலும் ரயிலில் செல்வதையே விரும்புகிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க கிம் ஜாங் உன் சென்றார். வடகொரியாவில் அதிகாரமிக்க பொறுப்புக்கு வந்த பிறகு அவரது முதல் வெளிநாட்டு பயணம் இதுவேயாகும்.
அப்போது வடகொரியாவின் முந்தைய தலைவர் பயன்படுத்திய பச்சை நிற ரயிலில் பயணம் செய்தார். பின்னர் 2019 ஆம் ஆண்டு டிரம்ப் - கிம் ஜாங் உன் சந்திப்பு வியட்நாமில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் பங்கேற்கவும் கிம் ஜாங் உன் தனது ரயிலில்தான் பயணித்தார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications