கிம் நிர்வாணமாக நீச்சலடித்தபோது ஹெலிகாப்டரில் வந்து போட்டோ எடுத்த வில்லங்க கேமராமேன்!
லாஸ் ஏஞ்சலெஸ்: தான் நீச்சல் குளத்தில் ரிலாக்ஸ்டாக இருந்தபோது ரகசியமாக தனது நிர்வாண கோலத்தைப் படம் பிடித்த ஒரு "பாப்பராஸி" புகைப்பட நிறுவனத்திற்கு தனது வக்கீல் மூலம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார் கிம் கர்தஷியான்.
பிரபலங்களைப் பின் தொடருவதற்காகவே மேலை நாடுகளில் ஒரு குரூப் கேமராவும், கையுமாக திரிவது சகஜம். எந்தப் பிரபலமாக இருந்தாலும் சரி விடாமல் பின் தொடருவார்கள். புகைப்படம் எடுப்பார்கள். அதை நல்ல காசுக்கு விற்பார்கள்.
அதிலும் மிகவும் வித்தியாசமான, வில்லங்கமான படம் கிடைத்தால் அதற்கு பெரிய ரேட் கிடைக்கும் என்பதால் அது மாதிரியான புகைப்படங்களுக்காக அவர்கள் மெனக்கெடுவார்கள். இப்படிப்பட்ட பாப்பராஸிகளின் தொல்லையிலிருந்து தப்பிப்பது பிரபலங்களின் இன்னொரு முக்கிய வேலையாக மாறிப் போயிருக்கிறது.

கிம்மைத் துரத்திய கேமராமேன்
இந்த நிலையில் 34 வயதான அமெரிக்க ரியாலிட்டி ஸ்டார் கிம் கர்தஷியானுக்கு ஒரு சிக்கல் வந்துள்ளது. எக்ஸ் 17 என்ற பாப்பராஸி புகைப்பட நிறுவனத்திற்கு கிம் கர்தஷியான் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் அவரது வக்கீல் மார்டி சிங்கர் கூறியிருப்பதாவது:

நீச்சல் அடித்தபோது
எனது கட்சிக்காரர் தனது வீட்டின் நீச்சல்குளத்தில் ஓய்வாக நீச்சலில் ஈடுபட்டிருந்தபோதும், மற்ற தருணத்திலும், ஹெலிகாப்டர் மூலம் தாழ்வாக பறந்து வந்து புகைப்படம் எடுத்துள்ளீர்கள். எனது கட்சிக்காரர் நிர்வாணமாக இருந்ததையும் ரகசியமாக படம் பிடித்துள்ளீர்கள்.

ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது
இவை அனைத்தும் சட்டவிரோதமான செயலாகும். மிகவும் தவறான செயலாகும். இதுதொடர்பாக உங்கள் மீது ஏன் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று அதில் கேட்கப்பட்டுள்ளது.

இணையதளத்தில் ரிலீஸ்
சம்பந்தப்பட்ட நிறுவனம் கிம்மின் நிர்வாணப் படங்களை தனது இணையதளத்தில் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் தற்போது கிம் அனுப்பிய வக்கீல் நோட்டீஸைத் தொடர்ந்து அந்தப் படங்களை அந்த நிறுவனம் நீக்கி விட்டது. மேலும் யாருக்கும் இந்தப் படங்களை விற்க மாட்டோம் என்றும் அது கூறியுள்ளது.

திடீரென வந்த ஹெலிகாப்டர்
சம்பவத்தன்று கிம் தனது பண்ணை இல்லத்தில் ஓய்வாக நீச்சல் அடித்துக் கொண்டிருந்தார். உடம்பில் துணி ஏதும் இல்லை. அப்போது திடீரென ஒரு ஹெலிகாப்டர் மேலே வந்து வட்டமடித்துள்ளது. இதைப் பார்த்த கிம் உடனடியாக பெரிய டவலை எடுத்து தனது உடலில் சுற்றிக் கொண்டு விட்டார். ஆனால் அதற்குள் கிம்மை ஹெலிகாப்டரில் இருந்த புகைப்படக்காரர் படம் எடுத்து விட்டதாக தெரிகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications