வயசு வெறும் 31 தான்.. சுற்றி நிற்கும் எதிரிகள்.. அண்ணனைப் போல அசகாயம் காட்டுவாரா கிம் தங்கை!
பியாங்கியாங்: வடகொரியாவில் கிம் ஜங் உன்னிற்கு அடுத்த பதவிக்கு வர போகும் அவரது தங்கை 31 வயதாகும் கிம் யோ ஜங், சுற்றியிருக்கும் எதிரிகளை வென்று உன்னை போல் எதிரிகளின் கண்களில் விரலை விட்டு ஆட்டுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Recommended Video
வடகொரிய அதிபராக இருக்கும் கிம் ஜங் உன் (36). தனது அணு ஆயுத சோதனைகளால் கொரிய தீபகற்பத்தில் எப்போதும் பதற்றமான சூழலையே உருவாக்கி வைத்திருந்தார் உன். அணு ஆயுத சோதனை செய்ய அனுமதி இல்லாத நாடான வடகொரியா செய்து வந்த இந்த ஆபத்தான செயலை அமெரிக்கா கண்டித்தது.
அந்த நாட்டின் மீது பொருளாதார தடை விதித்தது. எனினும் உன் எதற்கும் அசரவில்லை. அமெரிக்க அதிபர் டிரம்பை வயது வித்தியாசமின்றி கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். ஒரு கட்டத்தில் இரு நாடுகளும் சமாதானம் அடைந்து உன்னும் அணு ஆயுத சோதனையை நிறுத்துவதாக அறிவித்திருந்தார்.

பொருளாதார தடை
ஆனால் தங்கள் நாட்டின் மீதான சர்வதேச தடைகளை அமெரிக்கா நீக்க வேண்டும் என உன் வலியுறுத்தினார். அப்போது அணு ஆயுதங்களை முழுமையாக தங்களிடம் ஒப்படைத்தால்தான் அது குறித்து பரிசீலனை செய்யப்படும் என டிரம்ப் தெரிவித்துவிட்டதால் மீண்டும் அணு ஆயுத சோதனை தொடரப்படும் என உன் அறிவித்தார். வடகொரியாவில் தயாரிக்கவுள்ள அணு ஆயுதங்களை உலக நாடுகள் இனி காணும் என உன் அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தில்லாக சமாளித்த கிம்
இத்தனை நெருக்கடிகளையும் தில்லாக சமாளித்தார் 36 வயதே ஆன உன். தற்போது அவரது உடல்நிலை மோசமாக உள்ளது. நாட்டின் அடுத்த தலைவராக அவரது தங்கை கிம் யோ ஜங் இருப்பார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் குறித்த தகவல்களை பார்ப்போம். 31 வயது ஆன கிம் யோ, அதாவது 1988 ஆம் ஆண்டு பிறந்தார். இருவரும் ஸ்விட்சர்லாந்தில் படித்தனர்.

தொழிலாளர் கட்சி
இருவரையும் அவரது தந்தை கிம் ஜங் 2 தனது செல்வாக்கில் அவர்கள் வளர்க்க விரும்பினார். இதனால் இருவரும் தனியாக தங்கி படித்ததால் இருவருக்குள்ளும் நெருக்கம் அதிகம். கிம் யோ ஜங் முதன்முதலில் செப்டம்பர் 2010-ஆம் ஆண்டு தொழிலாளர்கள் கட்சியின் 3ஆவது மாநாட்டில் கலந்து கொண்டோருக்கான புகைப்பட செசஷனில் முதல் முறையாக வெளியே வந்தார். பின்னர் இவர்களது தந்தை கிம் ஜங் 2 கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உயிரிழந்தார்.

சுற்றுலா மேலாளர் பதவி
அவருக்கு நடத்தப்பட்ட இறுதி சடங்கில் கிம் யோவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அவரது அண்ணனுடன் தோன்றுவது, இறுதிச் சடங்கிற்கு ஏற்பாடு செய்த அதிகாரிகளை வழி நடத்துவது ஆகிய விவகாரங்களை நடத்தும் கமிட்டியில் இவரது பெயர் இல்லாத போதிலும் இவருக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது. கடந்த 2012-ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு ஆணையத்தில் கிம் ஜங் உன்னின் சுற்றுலா மேலாளர் பதவி கிம் யோவிற்கு வழங்கப்பட்டது.

மருத்துவ சிகிச்சை
பின்னர் பிரசாரத்திற்காக கிம் உன்னுடன் யோ ஈடுபடுவார் என முதல் முறையாக 2014-ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தொழிலாளர் கட்சியின் மத்திய குழுவில் கிம் யோ மூத்த அதிகாரியாக அடையாளம் காணப்பட்டார். கடந்த 2014-ஆம் ஆண்டு அதிபர் கிம் உன் மருத்துவ சிகிச்சை மேற்கொண்ட போது கிம் யோதான் நிர்வாகத்தை நடத்தினார். அவரிடம் முழு பொறுப்பு வழங்கப்பட்டது.

இரண்டாம் பெண்
கள வழிகாட்டும் பயணங்களின் போது கிம் உன்னுடன் கிம் யோவும் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். கிம் உன் மக்கள் தலைவர் என்ற பிம்பத்தை ஏற்படுத்த கிம் யோ உருதுணையாக இருந்தார். கடந்த 2017-ஆம் ஆண்டு பொலிட் பீரோவின் மாற்று உறுப்பினராக கிம் யோ நியமிக்கப்பட்டார். இந்த கொள்கை முடிவுகளை எடுக்கும் குழுவில் நியமிக்கப்பட்ட இரண்டாம் பெண் கிம் யோ ஆவார்.

ஆலோசனை
தென் கொரியாவில் பியோங்சாங்கில் நடந்த 2018-ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவில் யோ ஜங் கலந்து கொண்டார். இதன் மூலம் கிம் பரம்பரையில் கொரிய போருக்கு பிறகு, கிம் வம்சத்தில் தென் கொரிய சென்ற முதல் நபர் கிம் யோ என்ற பெருமையை பெற்றார். தென் கொரிய அதிபர் மூன் ஜோவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

நாடாளுமன்றத் தேர்தல்
தென் கொரியா அதிபர் மூனிடம் கிம் எழுதிய கடிதத்தை தனிப்பட்ட முறையில் கொடுப்பதற்காக கிம் ஜங்கின் சிறப்பு தூதுவராக கிம் யோ அனுப்பப்பட்டார்.இரு நாடுகளின் நல்லுறவில் கிம் யோ முக்கிய பங்காற்றினார். கடந்த 2019இல் கொரிய நாடாளுமன்ற தேர்தலில் எம்பியாக கிம் யோ தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அதே ஆண்டு பொலிட் பீரோவிலிருந்து நீக்கப்பட்டார். பின்னர் ஏப்ரல் 2020-இல் இணைக்கப்பட்டார்.

நிச்சயம்
இவருக்கு தென் கொரிய நாட்டின் அதிகாரி சோ ரியாங் ஹேவின் இரண்டாவது மகன் சோ சாங்குடன் 2015இல் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது. எனினும் இதை தென் கொரிய அரசு மறுத்துள்ளது. மிகவும் புத்திசாலியான கிம் யோ, ஒரு வேளை உடல்நிலை பாதிப்பால் கிம் உன்னால் அதிபராக தொடர முடியாவிட்டால் அமெரிக்கா உள்ளிட்ட எதிரி நாடுகளை திறம்பட சமாளித்து அண்ணன் போல் கெத்து காண்பிப்பாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிம் உன் எடுத்த அதிரடி முடிவுகளில் பெரும்பாலானவை கிம் யோ கொடுத்ததுதான் என்பதால் அவர் நிச்சயம் திறமையாக செயல்படுகிறார் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications