எகிப்து மன்னரின் 1000 ஆண்டு சாபம்! பிரமீடு உள்ளே கால் வைத்தவுடன் அடுத்தடுத்து நடந்த அமானுஷ்யங்கள்
கொய்ரே: உலகமே வியந்து பார்க்கும் பிரமிடுகள் எகிப்து நாட்டில் அமைந்துள்ளது. அந்தப் பிரமிடுகளில் இருக்கும் செல்வமும் புதையலும் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது. இருப்பினும், அப்படிப்பட்ட பிரமிடுகளைச் சுற்றி 1000 ஆண்டு சாபம் இருக்கிறது என்றும் சொல்கிறார்கள். இதனால் அந்த பிரமிடுகளில் ஒன்றில் நுழைந்த பிறகு மரணங்களும் நகரெங்கும் அமானுஷ்யங்களும் கூட ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஆப்பிரிக்க நாடான எகிப்து தனது பிரம்மாண்டப் பிரமிடுகளுக்கு பெயர் போனவை. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கட்டப்பட்ட பிரமிடுகள் இன்னுமே கூட ஆச்சரியத்தின் உச்சமாகவே இருக்கிறது. அங்கிருந்து கண்டெடுக்கப்பட்ட மம்மிக்கள், குவியல் குவியலாகக் கொட்டிக் கிடக்கும் புதையல்கள் ஒட்டுமொத்த உலகிற்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது.

அருங்காட்சியகம்
அதை எல்லாம் காட்சிப்படுத்தும் வகையில் ஒரு அருங்காட்சியகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இருப்பினும், அதில் பல்வேறு சிக்கல்கள் வந்தது. எல்லாவற்றையும் சரி செய்து சுமார் 20 ஆண்டு தீவிர முயற்சி + ஒரு பில்லியன் டாலர் செலவில் கிராண்ட எகிப்தியன் அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. கடந்த நவம்பர் 1ம் தேதி இந்த அருங்காட்சியகம் எகிப்து தலைநகர் கெய்ரோவில் திறக்கப்பட்டுள்ளது.
அங்கு மன்னர் துட்டன்காமுனின் கல்லறையில் கண்டெடுக்கப்பட்ட 5,000க்கும் மேற்பட்ட அரிய பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் எகிப்து மன்னர் கல்லறைகளைத் தொட்டாலே அழிந்து போவார்கள் என ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு விடுக்கப்பட்ட "பார்வோனின் சாபம்' குறித்த பேச்சுகளும் அதிகரித்துள்ளது. இதுகுறித்து நாம் விரிவாக பார்க்கலாம்.
துட்டன்காமுன் கல்லறை
20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் எகிப்து குறித்து தீவிர ஆய்வுகளை ஜார்ஜ் ஹெர்பர்ட் செய்து வந்தார். எகிப்தில் அகழாய்வு செய்வதிலும் அவர் பெரும் தொகையை முதலீடு செய்து வந்தார். சுமார் 20 ஆண்டுகளாகத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஹோவர்ட் கார்ட்டருடன் இணைந்து அவர் ஆய்வுகளைச் செய்தார். அப்போது 1922இல் எகிப்தின் மன்னர்களின் பள்ளத்தாக்கில் உள்ள துட்டன்காமுனின் கல்லறையைத் திறந்தனர்.
இது வரலாற்றின் மிகச் சிறந்த தொல்பொருள் கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது. அதில் தங்கம், நகைகள், தேர்கள் மற்றும் துட்டன்காமுனின் புகழ்பெற்ற தங்க மரண மாஸ்க் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன. அதன் பிறகே ஐரோப்பா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த மற்ற தொல்பொருள் ஆய்வாளர்களும் எகிப்து மீது ஆர்வம் காட்ட ஆரம்பித்தனர்.
கொசு கடியால் மரணம்
இருப்பினும், இந்த சில மாதங்களிலேயே துயரம் நிகழ்ந்தது. 1923 மார்ச் மாதம் ஜார்ஜ் ஹெர்பர்ட் கன்னத்தில் சாதாரண ஒரு கொசு கடித்தது. கொசு தானே என அவர் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. சில நாட்களுக்குப் பிறகு, முகத்தை ஷேவ் செய்யும்போது, ஜார்ஜ் தெரியாமல் அந்தக் காயத்தை வெட்டிவிட்டார். ஷேவ் செய்யும்போது இதுபோல வெட்டு ஏற்படுத்தும் அசாதாரணமானது இல்லை. இருப்பினும், அந்த ஒரு வெட்டால் அவருக்கு நோய்ப் பாதிப்பு ஏற்பட்டு, அவரது ரத்தம் விஷமாக மாறியது.
அமானுஷ்யங்கள்
இதனால் 1923 ஏப்ரல் 5ம் தேதி அவர் காலமானார். துட்டன்காமுனின் கல்லறை திறக்கப்பட்டு சில மாதங்களில் இது நடந்துள்ளது. மேலும், அப்போது கெய்ரோ முழுவதும் ஒரு மிகப் பெரிய மின்தடையும் ஏற்பட்டது. அப்போது ஜார்ஜ் வளர்த்து வந்த அவரது செல்லப் பிராணியும் உயிரிழந்தது. இப்படி ஒரே நேரத்தில் அடுத்தடுத்து பகீர் சம்பவங்கள் நடந்தன. கல்லறையைத் திறந்ததாலேயே இந்தச் சம்பவங்கள் நடந்ததாக அப்போது பரவலாகப் பேச்சுகள் எழுந்தன.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications