மிதக்கும் 5 மாடி கட்டிடம், 8ஆவது மாடியில் மெட்ரோ, ரூஃப் டாப் பெட்ரோல் பங்க்.. வினோத நகரம் சோங்கிங்!

Subscribe to Oneindia Tamil

சோங்கிங்: மிதக்கும் 5 மாடி உணவகம், அடுக்குமாடிக் குடியிருப்பில் மெட்ரோ ஸ்டேஷன், ரூப் டாப் பெட்ரோல் பங்க் என பல வினோதங்களைக் கொண்ட நகரம் ஒன்று சீனாவில் இருக்கிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

நமது அண்டை நாடான சீனாவில் எப்போதும் ஒற்றை கம்யூனிஸ்ட் ஆட்சியே நடந்து வருகிறது. இப்போது உலகின் மிகப் பெரிய பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகள் லிஸ்டிலும் சீனா அமெரிக்காவுக்குப் பிறகு இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

 Know the Chinese city Chongqing that has many crazy things

இந்த சீனாவில் இருக்கும் நகரங்கள் என்றாலே.. நமக்கு பெரும்பாலும் பெய்ஜிங், ஷாங்காய் ஆகிய நகரங்கள் ஆகிய நகரங்கள் தான் நினைவில் வரும். ஆனால், அங்குள்ள சோங்கிங் நகரம் குறித்து பலருக்கும் தெரியாது. இந்த சோங்கிங் நகரில் பல வினோதங்கள் நிறைந்து இருக்கிறது. இது குறித்து நாம் பார்க்கலாம்.

சீன நகர்: சீனாவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள நகரம் சோங்கிங். சீனாவின் மற்ற நகரங்களில் இருந்து இது மிகவும் தனித்துவமானது. பெய்ஜிங் தொடங்கி பெரும்பாலான சீன பெருநகரங்கள் கடற்கரைக்கு அருகிலேயே அமைந்திருக்கும். ஆனால், இந்த சோங்கிங் கடற்கரையில் இருந்து வெகு தொலைவில் அமைந்துள்ளது. சீனாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஒரே பெரிய நகரம் இந்த சோங்கிங் தான். இரண்டாம் சீன-ஜப்பானியப் போரின் போது (1937-1945) சீனாவின் போர்க்கால தலைநகராக இருந்ததும் இந்த சோங்கிங்தான்.

கம்யூனிஸ்ட் நாடான சீனா சர்வதேச நாடுகள் உடனான ஒப்பந்தத்தை ஆரம்பித்த போது முதலில் கடற்கரையை ஒட்டியுள்ள நகரங்களிலேயே சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கப்பட்டது. அதன் பிறகு சர்வதேச வர்த்தகத்தை ஆரம்பித்த முதல் நகரம் இந்த சோங்கிங் தான். சீனாவின் மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் வெகு சில நகரங்களில் இதுவும் ஒன்றாகும். பல கோடி மக்கள் வசிக்கும் இந்த நகரில் பல வினோதங்கள் நிறைந்துள்ளது.

 Know the Chinese city Chongqing that has many crazy things

மிதக்கும் 5 மாடி கட்டிடம்: இங்குள்ள யாங்சே நதியில் 5 மாடி உணவகம் ஒன்று இருந்தது. இது தொடர்பான வீடியோவை பார்த்தால் முதலில் ஏதோ வெள்ளத்தில் அடித்துச் செல்வதைப் போல நமக்குத் தெரியும். ஆனால், உண்மையில் அது யாங்சே நதியில் இருந்த மிதக்கும் உணவகம் ஆகும். இந்த படத்தை நாம் கூர்ந்து கவனித்தால் இரண்டு கப்பல்கள் அந்த நகர்த்திச் செல்வது நமக்குத் தெளிவாகத் தெரியும். இந்த நகரில் இதுபோல பல மிதக்கும் உணவகங்கள் இருந்தன. இவை அங்கு வரும் சுற்றுலா பணிகள் மத்தியில் ரொம்பவே பிரபலம்.

இருப்பினும், பாதுகாப்பு மற்றும் நதி மாசு காரணமாக இந்த மிதக்கும் உணவகங்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டன. அல்லது அவை இடிக்கப்பட்டன. அப்படி இடிக்க எடுத்துச் செல்லப்பட்ட போது எடுக்கப்பட்ட படம் தான் இது.

அப்பார்ட்மெண்டில் மெட்ரோ: இந்த சோங்கிங் நகரில் அமைந்துள்ள மெட்ரோ சீனாவின் மிகப்பெரிய மெட்ரோ ரயில்களில் ஒன்றாகும். இங்கே அனைத்து மெட்ரோ ரயில்களும் மேம்பாலத்திலேயே இயக்கப்படுகிறது. அதில் ஒரு மெட்ரோ ஸ்டேஷன் அடுக்குமாடி கட்டிடத்திற்குள் அமைந்துள்ளது. ஆம்.. அடுக்குமாடி கட்டிடத்திற்கு அருகில் இல்லை. அதன் உள்ளே தான் அமைந்துள்ளது. இந்த லிசிபா மெட்ரோ ஸ்டேஷனும் அடுக்குமாடி கட்டிடமும் ஒரே நேரத்தில் கட்டப்பட்டது. 19 மாடி குடியிருப்பு கட்டிடத்தின் ஆறாவது முதல் எட்டாவது தளம் வரை இந்த நிலையம் உள்ளது.

 Know the Chinese city Chongqing that has many crazy things

நீங்கள் ரூப் டாப் (roof top) உணவகங்களைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், இந்த நகரில் ரூப் டாப் கார் பார்கிங் இருக்கிறது. சாலை அமைத்து கடைகள் எல்லாம் ரூப் டாப்பில் இருக்கிறது.. அவ்வளவு ஏன் பெட்ரோல் பங்க்குகள் கூட சாலைகளில் இல்லாமல் ரூப் டாப்-இல் இருக்கிறது. இதனால் இங்கே நிலத்தில் இருப்பது போல உங்களுக்குத் தெரிந்தாலும் நீங்கள் உயரமான அடுக்கு மாடிக் கட்டிடத்தில் இருப்பீர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+