ஒரு வாய் வைத்தாலே உயிர் போய்விடும்.. புற்றுநோய் கேரண்டி.. அதிர வைத்த மீன் உணவு.. உஷார்
பாங்காங்: தாய்லாந்தில் பாரம்பரியமான Koi pla என்ற மீன் உணவை சாப்பிட்டு வந்துள்ளார்கள். அதன் காரணமாக அவர்களில் பலர் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறக்கிறார்கள். அப்படி அவர்கள் சாப்பிட்ட உணவு என்ன, ஏன் உயிரை பறித்தது என்பது பற்றி மருத்துவர்கள் கூறிய தகவல்களை பார்ப்போம்.
தாய்லாந்தில் நரோங் குண்டிகியோ என்ற மாணவி, மெடிக்கல் காலேஜ்க்கு படிக்க சென்ற பின்னர் தான், அவர்கள் சாப்பிட்ட மதிய உணவு தான், தனது பெற்றோர் இருவரின் உயிரையும் பறித்த கல்லீரல் புற்றுநோய்க்கான காரணம் என்பதை அறிந்தார்.

பொதுவாக தாய்லாந்தின் வடகிழக்கு கிராமப்புறங்களில் ஏராளமான மக்கள் கோய் ப்லா என்ற மீன் உணவை மதிய உணவாக சாப்பிட்டு வந்துள்ளார்கள். கோய் ப்லா என்பது மசாலா மற்றும் சுண்ணாம்பு கொண்ட பச்சையான மீன் உணவு ஆகும்.
இந்த உணவு மலிவாக கிடைக்ககூடியது. மிகவும் சுவையாகவும் இருக்கும். சுவை அதிகமாக இருந்தாலே ஆபத்து அதிகமாக இருக்கும் அல்லவா? ஆபத்து என்றால் சாதாரண ஆபத்து இல்லை. இந்த பச்சையான மீன் உணவை ஒரு முறை சாப்பிட்டாலே புற்றுநோய் வந்து இறக்கும் அளவிற்கு ஆபத்தானது. தாய்லாந்து மக்களில் சுமார் 20000 பேர் ஆண்டு தோறும் இந்த பச்சை மீனை சாப்பிட்டு கல்லீரல் புற்று நோய்க்கு ஆளாகிறார்கள்.
தாய்லாந்தில் ஈசான் எனப்படும் வடகிழக்கு பகுதியில் பல தலைமுறைகளாக கோய் ப்லா உணவை சாப்பிட்டு வந்துள்ளார்கள். ஆனால் துரதிஷ்டசமாக இங்கு தான் உலகிலேயே பித்த நாள புற்றுநோய் அதிகமாகப் பதிவாகியுள்ளது.
சோலங்கியோகார்சினோமா (சிசிஏ) என்று அழைக்கப்படும் இந்த பித்த நாள புற்றுநோய்க்கு முக்கிய காரணங்களில் ஒன்று அந்த உணவில் உள்ள ஒட்டுண்ணி தான். ஃப்ளூக் எனப்படும் தட்டைப்புழுதான் இந்த பிரச்சனைக்கு காரணம். இது மீகாங் பகுதியை பூர்வீகமாகக் கொண்டது. இது பல நன்னீர் மீன்களில் காணப்படுகிறது.
உலக சுகாதார அமைப்பு, கோய் ப்லா உணவை ஒருமுறை சாப்பிட்டால், புழுக்கள் பல ஆண்டுகளாக பித்த நாளங்களில் கண்டறியப்படாமல் பெரிய வீக்கத்தை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளது.
இதுபற்றி கல்லீரல் அறுவை சிகிச்சை நிபுணரான நரோங் கூறும் போது, "இது இங்கு ஒரு மிகப் பெரிய சுகாதார பிரச்சனையாக உள்ளது. இந்த உணவு பழக்கம் குடும்பங்கள், தாய்லாந்தின் கல்வி மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சியை மோசமாக பாதிக்கிறது. ஆனால் இதைப் பற்றி யாருக்கும் தெரியாது. அதனால் அவர்கள் இந்த புற்றுநோய்க்கு ஆளாகி, மரத்திலிருந்து விழும் இலைகளைப் போல அமைதியாக இறந்து விடுகிறார்கள்" என்று வேதனை தெரிவித்துள்ளார்.
இதனிடையே டாக்டர் நரோங், அறுவை சிகிச்சைக்காக பல்லாயிரம் மக்கள் வந்ததை பார்த்தவர், கண்டிப்பாக மக்களிடம் எப்படியாவது கோய் ப்லா உணவு பழக்கத்தை கைவிட வைக்க வேண்டும் என்று போராடி வருகிறார். இவரை போல் பல மருத்துவர்கள் விஞ்ஞானிகள், தாய்லாந்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த முயன்று வருகிறார்கள
ஈசான் மாகாணம் முழுவதும் கிராமவாசிகளுக்கு கல்லீரல் ஃப்ளூக் பரிசோதனை செய்து கொய் பிளா மற்றும் பிற ஆபத்தான புளித்த மீன் உணவுகளின் ஆபத்துகள் குறித்து மருத்துவர்கள் எச்சரித்து வருகிறார்கள். மேலும் சைலெண்ட் கில்லரான கோய் ப்லாவை பச்சையாக சாப்பிட வேண்டாம் என்று மருத்துவர்கள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். ஆனால் பல 100 ஆண்டுகளாக தாய்லாந்தின் ஈசான் பகுதி மக்களின் பழக்கத்தை மாற்றுவது எளிதான காரியம் இல்லை என்று கூறுகிறார்கள்.
அதேநேரம் தலைமுறை தலைமுறையாக தாங்கள் சாப்பிடும் ஒரு பிரியமான உணவு ஆபத்தானது என்பதைக் கேட்டு பல கிராமவாசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பலரும் அதில் உள்ள ஒட்டுண்ணிகளை கொல்ல கண்டிப்பாக வேகவைத்து தான் சாப்பிட வேண்டும் என்று கூறிய பின்னர், மசாலாவை தடவி வேகவைத்து சாப்பிட ஆரம்பித்துள்ளார்கள்.












Click it and Unblock the Notifications