For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொத்துக்கிட்டு ஊத்துதே வானம்.. ஸ்தம்பித்தது குவைத் சிட்டி.. பேய் மழை.. செம வெள்ளம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    குவைத் தலைநகர் குவைத் சிட்டியில் பேய் மழை-வீடியோ

    குவைத் சிட்டி: குவைத் தலைநகர் குவைத் சிட்டியில் பேய் மழை பெய்து நகரமே ஸ்தம்பித்துப் போய் விட்டது. பேய் மழையால் மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்த நிலையில் அந்த நாட்டு பொதுப்பணித்துறை அமைச்சர் ஹஸ்ஸம் அல் ரூமி திடீரென ராஜினாமா செய்து விட்டார்.

    சென்னையை மூழ்கடித்த வெள்ளமெல்லாம் ஒரு வெள்ளமா என்று கேட்கும் அளவுக்கு குவைத் சிட்டியை வெள்ளம் புரட்டிப் போட்டு விட்டது. அப்படி ஒரு பேய் மழையை குவைத் தலைநகரம் கண்டுள்ளது.

    Kuwait City flooded, 2 killed

    நகரின் அனைத்துப் பகுதிகளிலும் வெள்ளக்காடாகியுள்ளது. மீட்புப் பணியில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்புப் படையினரும் களம் இறங்கியுள்ளனர்.

    Kuwait City flooded, 2 killed

    பெரும்பாலான பகுதிகளில் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் நீரில் மூழ்கி தத்தளித்ததைக் காண முடிந்தது. சாக்கடைகள் அடைத்துக் கொண்டு சாக்கடை நீரும் மழை நீருடன் கலந்து மக்களை அவஸ்தைக்குள்ளாக்கி விட்டது.

    Kuwait City flooded, 2 killed

    வியாழக்கிழமை மாலையிலிருந்து குவைத் சிட்டியில் மழை பெய்து வருகிறது. இது மேலும் மேலும் வலுத்துக் கொண்டே போனதால்தான் வெள்ளக்காடாகி விட்டது. வெள்ளத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    [சென்னை விமானங்களை தகர்ப்போம்.. 14 வயது பொடியனின் மிரட்டல்.. மதுரையில் பரபரப்பு!]

    பல்வேறு பகுதிகளும் வெள்ளத்தில் மிதப்பதால் சமுதாய நல மையங்கள் உள்ளிட்டவற்றில் மக்கள் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். துரித நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. மக்கள் வீடுகளை விட்டு வர வேண்டாம் என்று குவைத் உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

    Kuwait City flooded, 2 killed

    இதற்கிடையே, வெள்ள நிவாரண நடவடிக்கைகளை சரியாக எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து அந்த நாட்டு பொதுப்பணித்துறை அமைச்சர் ஹஸ்ஸம் பதவி விலகி விட்டார்.

    வீடியோ: மூர்த்தி, நாசர் - திருச்சி

    English summary
    Kuwait City is flooded as heavy rain lashed the city since Thursday.2 persons have been killed in the floods.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X