சென்னை விமானங்களை தகர்ப்போம்.. 14 வயது பொடியனின் மிரட்டல்.. மதுரையில் பரபரப்பு!
Recommended Video

மதுரை: சென்னை செல்லும் விமானங்களை குண்டு வைத்துத் தகர்ப்போம் என்று மதுரை விமான நிலையத்துக்கு வந்த தொலைபேசி மிரட்டலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று இரவு மதுரை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு டெலிபோன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், மதுரையிலிருந்து சென்னை செல்லும் விமானங்களை தகர்க்கப் போகிறோம். காலை 9.30 மணியிலிருந்து வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி னார்.

இதையடுத்து போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர். விமான நிலையத்திற்கு வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸார் விரைந்து வந்தனர். மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினருடன் இணைந்து விமான நிலையம், விமானங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. அதில் எந்த வெடிகுண்டும் கண்டுபிடிக்கப்படவில்லை.
[6 நாளில் 15 பச்சிளம் குழந்தைகள் மரணம்... காரணத்தை கண்டறிய அசாம் அரசு விசாரணைக்கு உத்தரவு!]
அதேசமயம், சென்னை செல்ல வரும் பயணிகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களின் உடமைகளும் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன.

மறுபக்கம் யார் இந்த மிரட்டலை விடுத்தது என்ற விசாரணை முடுக்கி விடப்பட்டது. அந்த விசாரணையில் மேல அனுப்பானடியைச் சேர்ந்த 14 வயதேயானா பிரகதீஷ் என்ற சிறுவன்தான் மிரட்டல் விடுத்தது என்று தெரிய வந்தது. இதையடுத்து அதிர்ச்சி அடைந்த போலீஸார் அவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவன் விளையாட்டுக்காக மிரட்டல் விடுத்திருக்கலாம் என்று தெரிகிறது.

இந்தக் குழப்பம் காரணமாக, மதுரை விமான நிலையத்தில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்பு சொல்லவேண்டிய ஸ்பைஸ் ஜெட் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று மதியம் 12 மணிக்கு புறப்பட வேண்டியது தொழில்நுட்ப கோளாறு காரணமாக 18 மணி நேரம் தாமதத்துக்குப் பின் இன்று காலை 9.30 மணியளவில் மணியளவில் 60 பயணிகளுடன் இலங்கை புறப்பட்டு சென்றது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications