யாரும் வீட்டை விட்டு வெளியே வராதீங்க.. குவைத் வாழ் இந்தியர்களே உஷார்! முக்கிய உத்தரவு
குவைத்: போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து, முடிவெடுக்க ஈரானுக்கு நாளை அதிகாலை 5.30 மணி வரை காலக்கெடுவை அமெரிக்கா விதித்திருந்தது. இந்த கெடு முடிய இருக்கும் நிலையில், எப்போது வேண்டுமானாலும் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதலை நடத்தலாம் என சொல்லப்படுகிறது. நிலைமை இப்படி இருக்கையில், குவைத் மக்கள் இரவு வெளியே வர வேண்டாம் என்று அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.
இன்று நள்ளிரவு 12:00 மணி முதல் அதிகாலை 6:00 மணி வரை (GMT நேரப்படி இன்று இரவு 9:00 முதல் புதன் அதிகாலை 3:00 வரை) மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தியிருக்கிறது. இந்த அறிவுறுத்தல் குவைத் வாழ் இந்தியர்களுக்கும் பொருந்தும்.

மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏன் இந்த முன்னெச்சரிக்கை?
அதிபர் ட்ரம்ப் ஈரானுக்கு விதித்த காலக்கெடு (அமெரிக்க நேரப்படி இரவு 8 மணி) முடிவடையும் தருவாயில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவியுள்ள நிலையில், வான்பரப்பில் ஏவுகணைகள் அல்லது அவற்றின் சிதறல்கள் விழுவதைத் தவிர்க்க குவைத் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கலாம்.
குவைத் ஈரானுக்கு மிக அருகில் அமைந்துள்ள நாடு என்பதால், அமெரிக்காவின் தாக்குதல்கள் அல்லது ஈரானின் பதிலடித் தாக்குதல்கள் நடக்கும்போது பாதுகாப்பு கருதி இந்த "தற்காலிக லாக்டவுன்" அறிவிக்கப்பட்டுள்ளது.
-
"ஹார்முஸை நெருங்கினாலே சரமாரி தாக்குதல் நடத்துவோம்.." அச்சுறுத்தும் ஈரான்.. அமைதி ஒப்பந்தம் காலி -
ஈரானை மொத்தமாகக் கைப்பற்றத் திட்டம் போடும் அமெரிக்கா.. டிரம்ப் சொன்ன ஷாக்கான விஷயம்! -
ஈரான்-ஐ துவம்சம் செய்யபோகும் அமெரிக்கா! இன்று இரவே தாக்குதல் டொனால்ட் டிரம்ப் பரபர 'வார்னிங்'! -
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு -
யுரேனியத்தை பதுக்கும் ஈரான்.. அமெரிக்கா தொட கூட முடியாது! டிரம்புக்கு செக்! -
கதையை முடிக்க அமெரிக்கா போடும் பிளான்.. கறார் காட்டும் ஈரான்! டிரம்புக்கு செக்! -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
39 முறை பொய் சொன்ன Trump.. முழுக்க முழுக்க மார்க்கெட் மேனிபுலேஷன்? ஈரான் கொடுத்த பதிலடி! -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
மீண்டும் டிரம்ப் அடித்த பல்டி! "எல்லாம் நல்லா போகுது.. தாக்குதல் கேன்சல்!" உற்று பார்க்கும் ஈரான் -
குட்டையை குழப்பிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் சொதப்பல்! போர் இப்போதைக்கு முடியாது! -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு












Click it and Unblock the Notifications