குவைத் விமான நிலையம் மீது தாக்குதல்.. மொத்த வளைகுடாவும் முடங்கிடுச்சி! கைமீறும் நிலைமை!
துபாய்: குவைத் விமான நிலையம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த தாக்குதலில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்றாலும், பயணிகள் விமான நிலையம் மீது நடத்தப்பட்டிருக்கும் தாக்குதல் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
குவைத் சர்வதேச விமான நிலையம் மீது, ஒன்றுக்கும் மேற்பட்ட தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதை அந்நாட்டு செய்தி ஊடகமான 'KUNA' தெரிவித்திருக்கிறது.

இந்த தாக்குதலில், விமான நிலையத்தின் ரேடார் அமைப்பு பாதிக்கப்பட்டிருக்கிறது. உயிரிழப்பு, காயம் ஏற்படவில்லை என்பதை குவைத் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் உறுதி செய்திருக்கிறது. இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது குறித்த விரிவான விசாரணையை பாதுகாப்பு அமைப்புகள் தொடங்கியுள்ளன.
ரேடார் அமைப்பு சேதமடைந்துள்ளதால், விமானப் போக்குவரத்து மற்றும் சிக்னல் பெறுவதில் தற்காலிகத் தடைகள் அல்லது தாமதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்கனவே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், குவைத் மீதான இந்தத் தாக்குதல் சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது.
ஏற்கெனவே சவுதி, அமீரகம் உள்ளிட்ட நாடுகளின் விமா நிலையங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில், தற்போது நடந்திருக்கும் தாக்குதல், மத்திய கிழக்கில் இன்னும் பதற்றம் கொஞ்சமும் குறையவில்லை என்பதை வெளிப்படுத்தியிருக்கிறது.
-
அடுத்த 60 நாட்கள் ரொம்ப முக்கியம்.. அமெரிக்கா ஈரான் போரில் மாற்றம்! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
14 பாயின்ட்.. மொத்த போரும் முடிவுக்கு வந்தது.. கதவை திறங்க, கப்பல் கிளம்பட்டும்! -
மீண்டும் குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. டிரம்புக்கு தலைவலியாக மாறிய பெஞ்சமின் நெதன்யாகு! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
விடியல் பிறக்கிறது.. ஈரான் போர் முடிவு.. டிரம்ப் உடன் ராசியான முஜ்தபா கமேனி.. இவரே சொல்லிட்டாரா? -
யுரேனியத்தை பதுக்கும் ஈரான்.. அமெரிக்கா தொட கூட முடியாது! டிரம்புக்கு செக்! -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
39 முறை பொய் சொன்ன Trump.. முழுக்க முழுக்க மார்க்கெட் மேனிபுலேஷன்? ஈரான் கொடுத்த பதிலடி! -
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு -
நான் வந்துட்டேன்னு சொல்லு.. தலைநிமிர்ந்த தங்கம்! ஒரே அறிவிப்பால் திடுக்குனு உயர்ந்த விலை! என்னாச்சு? -
பஞ்சாயத்து ஓவர்.. அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம்! டிரம்ப் சொன்ன குட் நியூஸ் -
கதையை முடிக்க அமெரிக்கா போடும் பிளான்.. கறார் காட்டும் ஈரான்! டிரம்புக்கு செக்!












Click it and Unblock the Notifications