காதை பிளக்கும் குண்டு சப்தம்.. நொறுங்கும் ஜன்னல் கண்ணாடிகள்! மெட்ரோ ரயில் நிலையங்களில் மக்கள் தஞ்சம்
கிவ்: ரஷ்ய தாக்குதலை தொடர்ந்து உக்ரைன் மக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் பதுங்கியுள்ளார்கள்.
உக்ரைன் மீது ரஷ்யா போரிட தொடங்கியுள்ளது. உக்ரைனில் நுழைந்த ரஷ்ய படைகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். உக்ரைன் விமான தளங்கள், ராணுவ தளங்கள் ஆகியவற்றின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது.
உக்ரைனில் உள்ள விமான தளங்கள், வான் வழி தளவாடங்களை ரஷ்யா அழித்துவிட்டது. எங்கு திரும்பினாலும் உக்ரைனின் கிழக்கு பகுதியில் குண்டு வீச்சு காதை பிளக்கிறது.

உக்ரைன் மீது போர்
பதிலுக்கு உக்ரைனும் ரஷ்யா மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் லுஹான்ஸ்க் பகுதியில் ஐந்து ரஷ்ய விமானங்கள் மற்றும் ஒரு ரஷ்ய ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரஷ்யா தாக்குதல்
இந்த நிலையில் ரஷ்ய தாக்குதலை தொடர்ந்து உக்ரைன் மக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் பதுங்கியுள்ளனர். முக்கிய உடைமைகளை கொண்டு சென்று அருகில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் மக்கள் மறைந்துள்ளார்கள். சிலர் பணம் எடுப்பதற்காக ஏடிஎம் மையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள்.

மெட்ரோ ரயில் நிலையங்களில் தஞ்சம்
உக்ரைனின் கிழக்கு பகுதியில் குண்டு வீசு நடப்பதால் அதன் அதிர்வால் அங்கே இருக்கும் குடியிருப்புகள், அரசு கட்டடங்களின் ஜன்னல்கள் உடைந்துள்ளன. வீட்டில் வளர்த்து வரும் செல்லப் பிராணிகளையும் தங்களோடு மக்கள் அழைத்து வந்துள்ளனர்.
Recommended Video

குடியிருப்பு பகுதிக்குள் தாக்குதல்
குடியிருப்பு பகுதிக்குள் தாக்குதல் நடத்தவில்லை என ரஷ்யா விளக்கமளித்துள்ளது. மேலும் ரஷ்யாவின் தாக்குதலால் 100-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதா உக்ரைன் அரசு தகவல் தெரிவித்துள்ளது. உலக நாடுகள் போரை நிறுத்துமாறு ரஷ்யாவிடம் எச்சரிக்கை விடுத்து வருகின்றன.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications