சீனாவில் வேலையின்மை பிரச்சனை! 39,600 காலி பணியிடங்களுக்கு.. தேர்வெழுதிய 25 லட்சம் பேர் இளைஞர்கள்
பெய்ஜிங்: சீனாவில் காலியாக உள்ள சில ஆயிரம் சிவில் சர்வீஸ் பணியிடங்களுக்கான தேர்வில் லட்சக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்றிருக்கின்றனர். இது அந்நாட்டில் நிலவும் வேலையின்மை அவலத்தை காட்டுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்த அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் நிறுவனங்களுக்கு மாற்றாக ஆசியாவில் இருந்து கிளம்பிய பூதம்தான் சீனா. சீன நிறுவனங்களின் பொருட்கள் இல்லாத நாடே கிடையாது எனலாம். அந்த அளவுக்கு நாட்டு மக்களின் எண்ணிக்கையை, உற்பத்தி சக்தியாக மாற்றி வெற்றி கண்டது சீனா. ஆனால் அண்டை நாடுகளுடன் பஞ்சாயத்து, உளவு குற்றச்சாட்டுகள், சீன பொருட்கள் மீதான நம்பகத்தன்மை இல்லாது போன்றவை சீனாவுக்கு இப்போதும் பின்னடைவாகத்தான் இருக்கிறது.

இந்த வரிசையில் தற்போது வேலையின்மை விவகாரமும் சேர்ந்திருக்கிறது. அமெரிக்காவுக்கு அடுத்து உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக சீனா இருந்தாலும், கொரோனா தொற்று பாதிப்பின் போது ஏற்பட்ட இழப்பிலிருந்து அந்நாடு இன்னும் முழுமையாக மீளவில்லை. இதற்கு சமீபத்தில் நடந்த சிவில் சர்வீஸ் தேர்வுகளே உதாரணம்.
நாடு முழுவதும் 237 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு சிவில் சர்வீஸ் தேர்வுகள் நடத்தப்பட்டன. மொத்தம் 39,600 காலிப்பணியிடங்களுக்கு 25 லட்சம் பேர் தேர்வு எழுதியுள்ளனர். அதாவது ஒவ்வொரு காலிப்பணியிடத்திற்கும் 77 பேர் போட்டியிடுகிறார்கள். இது அந்நாட்டில் நிலவும் வேலையின்மை பிரச்னையை தெளிவாக காட்டுவதாக சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இது குறித்து உள்ளூர் மக்கள் கூறுகையில்,
"இங்குள்ள தனியார் நிறுவனங்களில் திடீரென ஆட்குறைப்பு நடக்கிறது. மட்டுமல்லாது ஊதிய முரண்பாடுகள் அதிகம் இருக்கின்றன. எனவே எங்களுக்கு அரசு வேலை பெரும் கனவாக இருக்கிறது. இதனால்தான் அதிகமான அளவில் நாங்கள் அரசு தேர்வுகளில் ஆர்வம் காட்டுகிறோம். இது எங்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை உத்தரவாதப்படுத்தும்" என்று சோஷியல் மீடியாக்களில் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த 2008ல் அமெரிக்காவை பொருளாதார நெருக்கடி எப்படி பாதித்ததோ அதே போன்ற நெருக்கடியை தற்போது சீனா எதிர்கொண்டிருக்கிறது. கொரோனா தொற்று மற்ற நாடுகளை போல சீனாவை கடுமையாக பாதித்திருக்கிறது. ஏற்கெனவே அங்கு உழைப்பு நேரம் உயர்த்தப்படுவதாக சர்ச்சைகள் எழுந்தன. அதேபோல தொழிலாளர் சட்டங்கள் அந்நாட்டில் உறுதியாக கடைபிடிக்கப்படுவதால் அந்நிய மூலதனம், அந்நிய நிறுவனங்கள் சீனாவில் தொழில் தொடங்க தயக்கம் காட்டி வருகின்றன.
சமீபத்தில் ஆப்பிள் உள்ளிட்ட பெரும் நிறுவனங்கள் சீனாவுக்கு மாற்றாக இந்தியா, தென் அமெரிக்க நாடுகளை நோக்கி நகர்ந்தது, சீனாவுக்கு கடும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இப்படி இருக்கையில் சில ஆயிரம் அரசு காலிப்பணியிடங்களுக்கு லட்சக்கணக்கில் இளைஞர்கள் தேர்வெழுவது, வேலையின்மை குறித்த அச்சத்தை மேலும் அதிகரிக்கும் என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இந்த விமர்சனங்களுக்கு சீன ஊடகம் தரப்பில் சில விளக்கங்கள் அளிக்கப்பட்டிருக்கிறது. அதாவது ஒவ்வொரு ஆண்டும் சிவில் சர்வீஸ் பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2022ம் ஆண்டு 37 ஆயிரம் பணியிடங்கள் இருந்ததாகவும், அப்போது 26 லட்சம் பேர் போட்டியிட்டார்கள் எனவும், இந்த ஆண்டு பணியிடங்கள் 39 ஆயிரமாக உயர்த்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவை பொறுத்த அளவில் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு இந்த அளவுக்கு போட்டிகள் இருக்காது என்றாலும், சிவில் சர்வீஸ் காலிப்பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்கிற கோரிக்கைகள் தொடர்ச்சியாக எழுந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications