ரெண்டே நிமிடம் தான்.. சத்தமில்லாமல் சரிந்த நிலம்.. கிராமத்தை விழுங்கிய கடல்.. ஷாக் தரும் வீடியோ!
நார்வே நாட்டில் நிலச்சரிவால் வீடுகள் சில கடலில் மூழ்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.
ஓஸ்லோ: நார்வே நாட்டில் ஒரு கிராமமே கடலில் மூழ்கும் பேரதிர்ச்சி தரும் வீடியோ வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.
Recommended Video
சமூகவலைதளங்களில் பல வீடியோக்கள் நாள்தோறும் வைரலாகி வருகின்றன. சில வீடியோக்கள் ரசிக்கும்படியாக இருக்கும். சில வீடியோக்கள் நெஞ்சை பதைபதைக்க வைக்கும்படியாக அதிர்ச்சி தரும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது வைரலாகியுள்ளது.
நார்வே நாட்டின் ஆல்டா எனும் பகுதியில் நேற்று நடந்த பேரிடர் சம்பவம் இது. எந்தவிதமான சத்தமும் இல்லாமல் மிக அமைதியாக நடந்துள்ள இந்த சம்பவம் உலகையே உலுக்கி இருக்கிறது.

பேரமைதி
ஆல்டா எனும் அந்த கடற்கரை கிராமத்தில் நேற்று மக்கள் அனைவரும் தங்களுடைய அன்றாட வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தனர். எந்தவிதமான சத்தமோ, பேரலைகளோ, அதிர்வுகளோ எதுவும் இல்லை.

கடலில் மூழ்கிய கிராமம்
திடீரென அந்த கிராமத்தின் ஒரு பகுதி மெல்ல மெல்ல கடலுக்குள் செல்லத் தொடங்கியது. இதை உணர்ந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு வீடுகளை விட்டு வெளியேறினர். ஆனால் ஒரு சில நிமிடங்களில் அந்த கிராமத்தின் ஒரு பகுதியை கடல் விழுங்கிவிட்டது.

மக்கள் அதிர்ச்சி
மிகுந்த அதிர்ச்சிக்குள்ளான மக்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். அதிர்ஷ்டவசமாக இந்த பேரிடரில் உயிரிழப்புகள் ஏதும் நிகழவில்லை. எட்டு வீடுகளையும், அதில் இருந்த பொருட்களையுமே கடல் கொண்டு சென்றுவிட்டது. அந்த பகுதியில் இருந்த மக்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

உலக சுற்றுச்சூழல் தினம்
ஜூன் 5ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் உலக சுற்றுச்சூழல் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த தினத்தில் இப்படி ஒரு சம்பவமா என வீடியோவை பார்த்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications