கடைசி நேரத்தில் திட்டத்தை மாற்றும் ரஷ்யா.. நோ பேச்சுவார்த்தை ஒன்லி ஆக்ஷன்? பரபர சாட்டிலைட் படங்கள்
மாஸ்கோ: உக்ரைன் எல்லையில் தொடர்ந்து பதற்றமான ஒரு சூழல் நிலவி வரும் நிலையில், புதிதாக வெளியாகியுள்ள சாட்டிலைட் படங்கள் எல்லைக்கு மிக அருகே தாக்குதல் நடத்தத் தயார் நிலையில் ரஷ்யா உள்ளது தெளிவாகத் தெரிகிறது.
Recommended Video
உக்ரைன் மீது ரஷ்யா எப்போது வேண்டுமானாலும் போர் தொடுக்கலாம் என உலக நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இதனால் சர்வதேச அளவில் பதற்றமான ஒரு சூழலே நிலவுகிறது.
கடந்த சில வாரங்களாகவே உக்ரைன் எல்லையில் ரஷ்யா தொடர்ந்து தனது ராணுவத்தைக் குவித்து வருகிறது. மேலும், அதிநவீன ஆயுதங்களையும் ரஷ்யா அனுப்பி வருகிறது.

உக்ரைன் விவகாரம்
உக்ரைன் எல்லையில் சுமார் 1.50 லட்சம் ராணுவ வீரர்களை ரஷ்யா குவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு, 80 ஆயிரம் வீரர்கள் அங்கிருந்த நிலையில், இப்போது வீரர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. மேலும், எல்லைக்கு மிக அருகிலேயே ரஷ்யா தொடர்ந்து போர் பயிற்சியையும் மேற்கொண்டு வருகிறது. எப்போது வேண்டுமானாலும் ரஷ்யா போரை ஆரம்பிக்கலாம் என்ற நிலை உள்ளதால் உக்ரைன் எல்லையில் உச்சக்கட்ட பதற்றம் நிலவுகிறது.

பிரான்ஸ் அதிபர்
இதனிடையே பதற்றத்தைத் தணிக்கும் நடவடிக்கைகளில் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாகப் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் இது தீவிரமாக ஈடுபட்டுள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு, இம்மானுவேல் மாக்ரோன் ரஷ்யா சென்று புதினை நேரில் சந்தித்துப் பேசினார். இருப்பினும், பதற்றம் தணியாத நிலையில், நேற்று மீண்டும் தொலைப்பேசி வழியாக இரு நாட்டுத் தலைவர்கள் உடனும் பேசினார். எந்த விவகாரத்தையும் பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க விரும்புவதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் ராணுவம்
அதேபோல ரஷ்யாவும் கூட பேச்சுவார்த்தை மூலம் சிக்கலைச் சரி செய்யத் தயாராக உள்ளதாக மீண்டும் அறிவித்தது. இருப்பினும், வழக்கம் போல ரஷ்யா சொல்வது ஒன்றாகவும் செய்வது ஒன்றாகவுமே உள்ளது. உக்ரைன் எல்லையில் சமீபத்தில் எடுக்கப்பட்ட சாட்டிலைட் படங்களை மாக்சர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த சாட்டிலைட் படங்களில் உக்ரைன் எல்லையில் உள்ள பெல்கோரோட், சோலோட்டி மற்றும் வாலுய்கி ஆகிய இடங்களில் அதிநவீன ராணுவ வாகனங்கள் இருப்பது தெளிவாகத் தெரிகிறது.

பல மடங்கு அதிகம்
முழு வீச்சில் போர் தொடுக்கத் தயார் நிலையில் ரஷ்யா ராணுவம் உள்ளதைச் சுட்டிக்காட்டும் வகையில் எல்லையில் ராணுவத்தின் செயல்பாடுகளும் பல மடங்கு அதிகரித்துள்ளதாகத் தகவல் மாக்சர் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று கூறினாலும் எதாவது ஒரு காரணத்தைச் சொல்லிவிட்டு, ரஷ்யா இன்னும் சில நாட்களில் போரைத் தொடங்கும் என அமெரிக்க அதிபர் பைடன் உள்ளிட்ட உலக தலைவர்கள் எச்சரிக்கை விடுத்து வரும் நிலையில், இந்த சாட்டிலைட் படங்கள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

திட்டத்தை மாற்றிய ரஷ்யா
மேலும், உக்ரைன் எல்லையில் இதுவரை ரஷ்யா வீரர்களை மட்டுமே குவித்து வந்தது. இப்போது தனது திட்டத்தை மாற்றியுள்ள ரஷ்யா, டாங்கிகள், பீரங்கிகள் உள்ளிட்ட அதிநவீன ஆயுதங்களை எல்லைக்கு அருகே முன் களத்திற்கு அனுப்பியுள்ளது. ரஷ்ய ராணுவ வாகனங்களின் செயல்பாடுகளும் எல்லையில் பல மடங்கு அதிகரித்துள்ளது. உக்ரைன் எல்லைக்கு வடக்கே சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரஷ்ய நகரமான வாலுய்கிலும் ரஷ்யா அதிகப்படியான ராணுவத்தைக் குவித்துள்ளது சாட்டிலைட் படங்களில் தெளிவாகத் தெரிகிறது.

புதிய இடங்கள்
இது தவிர உக்ரைன் எல்லையில் உள்ள பெல்கோரோட் நகரில் இதுவரை ராணுவம் குவிக்கப்படாத இடங்களிலும் கூட ரஷ்யா ஏகப்பட்ட ராணுவ வீரர்களையும் ஆயுதங்களையும் குவித்து வருகிறது. அங்கு பெரும்பாலான ஆயுதங்கள் மற்றும் ராணுவ வீரர்கள் அருகிலுள்ள காட்டுப் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. அவர்களில் சிலர் அங்கே உள்ள விவசா நிலங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர். இது ரஷ்யா போரை ஆரம்பிக்கும் திட்டத்தில் உள்ளதையே காட்டுவதாக வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

அமெரிக்க அதிபருடன் சந்திப்பு?
நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேரக்கூடாது, மேற்கு ஐரோப்பாவில் இருக்கும் ரஷ்யா படைகளைத் திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை புதின் வைத்துள்ள போதிலும், அதை மேற்குலக நாடுகள் ஒப்புக்கொள்ளவில்லை. இதனிடையே உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கவில்லை என்றால் ரஷ்ய அதிபர் புதினை அடுத்த வாரம் அமெரிக்க அதிபர் பைடன் சந்திக்கத் தயாராக உள்ளதாகவும் வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications