லாஸ் ஏஞ்சல்ஸ் போராட்டம்.. வரலாற்றில் இல்லாத சம்பவம் செய்த டிரம்ப்.. கலக்கத்தில் கலிபோர்னியா கவர்னர்
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், சட்டவிரோதமாக குடியேறியவர்களை கைது செய்ததற்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன. அங்கு நடந்து வரும் சம்பவங்களால் கோபம் அடைந்த அதிபர் டிரம்ப், கலிபோர்னியா ஆளுநர், லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் என யாரையும் கேட்காமல், தன்னிச்சையாக தேசிய படைகளை அனுப்பி உள்ளார். அதேபோல் கோபத்தில் கலிபோர்னியா கவர்னரை கைது செய்ய பரிந்துரைப்பேன் என்றொல்லாம் பேசினார். இன்று தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், சட்டவிரோதமாக குடியேறிய 44 பேர் கைது செய்யப்பட்டதை கண்டித்து அங்கு போராட்டம் வெடித்தன. பலரும் டிரம்புக்கு எதிராக பேரணியிலும் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். அதனால் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வன்முறை வெடித்தது. பதற்றமான நிலை காணப்படுகிறது. இதனால் ஆவேசம் அடைந்த அதிபர் டிரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், முன்பு சிறந்த அமெரிக்க நகரமாக இருந்த லாஸ் ஏஞ்சல்ஸ், சட்டவிரோத குடியேறிகளாலும், குற்றவாளிகளாலும் இப்போது ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது.

கலவரம்
அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோயம், பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் மற்றும் அட்டர்னி ஜெனரல் பாண்டி ஆகியோர், அரசு துறைகளுடன் ஒருங்கிணைந்து, லாஸ் ஏஞ்சல்ஸை புலம்பெயர்ந்தோர் படையெடுப்பிலிருந்து விடுவிக்க முயற்சி செய்ய வேண்டும். கலவரங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு நான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன். லாஸ் ஏஸ்சல்ஸில் சட்டம் ஒழுங்கு மீட்டெடுக்கப்படும். சட்டவிரோத குடியேறிகள் வெளியேற்றப் படுவார்கள். அவர்களின் பிடியில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் நிச்சயம் விடுவிக்கப்படும் என்றார்.
வழக்கு
இந்நிலையில் அதிபர் டிரம்ப் கலிபோர்னியா மாகாண ஆளுநர் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் என யாரையும் கேட்காமல் தன்னிச்சையாக மத்திய காவல்படையை கலவரத்தை ஒடுக்க அனுப்பி வைத்துள்ளார். இதனால் கோபம் அடைந்த கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசம் இந்த நடவடிக்கை தொடர்பாக டிரம்ப் நிர்வாகத்தின் மீது வழக்குத் தொடரப்போவதாகக் கூறினார். லாஸ் ஏஞ்சல் நகர மேயர் கரேன் பாஸ், டிரம்பின் நடவடிக்கை எரிச்சலூட்டுவதாக கூறினார்.
டிரம்ப் கோபம்
இவர்களின் பேச்சுக்களால் கோபம் அடைந்த டிரம்ப்,கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசமைக் கைது செய்ய வேண்டும் என்று லாஸ் ஏஞ்சல் நகர மேயர் கரேன் பாஸ்க்கு பரிந்துரைத்தார். எனினும் கோபத்தில் சொன்ன அந்த பேச்சை மாற்றிக்கொண்டார். கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசம் விளம்பரத்தை விரும்புவதாக விமர்சித்த டிரம்ப், தனக்கு கவின் நியூசம் பிடிக்கும் என்றும் அவர் ஒரு நல்ல மனிதர், ஆனால் அவர் மிகவும் திறமையற்றவர் என்றும் இந்த விஷயம் அனைவருக்கும் தெரியும் என்றும் கடுமையாக விமர்சித்தார்.
தன்னிச்சையாக முடிவு
அமெரிக்காவில் பல ஆண்டுகளில் முதல்முறையாக மாகாண கவர்னரின் வேண்டுகோள் அல்லது விருப்பம் இல்லாமல், மத்தியில் ஆளும் நிர்வாகம் தேசிய காவல்படைடைய அனுப்புவது இதுவே முதல்முறையாகும். மேலும் 500 பேரை அனுப்ப தயாராக உள்ளதாகவும் கூறினார். தற்போது 300 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்- நாடு கடத்தல் நடவடிக்கைகளை நிறுத்த தாக்குதல் நடத்தி வரும் கும்பல்களை எதிர்த்து காவல் படைகள் களம் இறக்கப்பட்டுள்ளன.
கண்ணீர் புகை குண்டு
லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு காவல்துறை உயர் அதிகாரி நிலைமையை பற்றி கூறும் போது, நகரத்தில் இருந்த பதற்றமான நிலை இப்போது மாறிவிட்டது என்றார். முன்னதாக கலவரத்தில் ஈடுபட்ட கூட்டத்தை கலைக்க போலீசார் ஃப்ளாஷ்-பேங் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளைப் பயன்படுத்தினார்கள். சிலர் போராட்டக்காரர்களையும் கடுமையாக தாக்கினர் , அதே போல் போராட்டக்காரர்கள் கார்களுக்கு தீ வைத்து வன்முறையிலும் ஈடுபட்டனர்.இந்த விவகாரத்தில் ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். லாஸ் ஏஞ்சல்ஸ் முழுவதையும் மக்கள் சட்டவிரோதமாக கூடுவதற்கு தடை விதிக்கப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளனர். இதனிடையே அங்கு பதற்றமான நிலை காணப்படுகிறது
கலிபோர்னியா ஆளுநர் பதிலடி
கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசம் டிரம்பின் பேச்சு மற்றும் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், "இந்த நாளை நான் அமெரிக்காவில் ஒருபோதும் பார்க்க மாட்டேன் என்று உறுதியாக நம்பினேன். நீங்கள் ஒரு ஜனநாயகக் கட்சியினராக இருந்தாலும் சரி, குடியரசுக் கட்சியினராக இருந்தாலும் சரி, எனக்கு கவலையே கிடையாது. ஆனால் இந்த தேசம் தற்போது சர்வாதிகாரத்தை நோக்கி பயணிக்கிறது" என்றார்.
-
எங்க நிபந்தனையை ஏற்றால்தான் போர் நிறுத்தம்.. அமெரிக்கா திட்டத்தை நிராகரித்த ஈரான்! தீவிரமாகும் போர் -
Iran us war: போரில் ஜெயிச்சுட்டோம்.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம்.. டிரம்ப் பேச்சு! -
ஈரானை காலி பண்ணாம விடாதீங்க.. டிரம்புக்கு நெருக்கடி கொடுக்கும் சவுதி பட்டத்து இளவரசர்? ஏன் தெரியுமா? -
ஈரானுக்கு மேலும் 10 நாட்கள் அவகாசம்.. வழிக்கு வந்த டிரம்ப்! போருக்கு குட்டி பிரேக்! -
வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம்.. டிரம்ப்பால் போரை வைத்து பணம் பார்க்கும் மர்ம டிரேடர்! -
Donald Trump: டிரம்ப் மிகப்பெரிய தாக்குதலை நடத்த தயாராகி வருகிறார்.. ஈரானை மீண்டும் மிரட்டும் அமெரிக்கா -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை












Click it and Unblock the Notifications