கடலுக்கு அடியில் திடீர் என்று வெடித்த எரிமலை... ஹவாயில் கொட்டிய லாவா வெடிகுண்டுகள்.. ஷாக் வீடியோ

ஹவாய் தீவில் வெடித்த எரிமலை ஒன்றின் புதிய வீடியோ வெளியாகி இருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

ஹவாய்: ஹவாய் தீவில் வெடித்த எரிமலை ஒன்றின் புதிய வீடியோ வெளியாகி இருக்கிறது. இந்த எரிமலை வெடிப்பு காரணமாக அங்கு மக்கள் இருக்கும் பகுதிகளில் லாவா வெடிகுண்டுகள் கடந்த சில நாட்களாக விழுவதாக கூறப்படுகிறது.

இது குறித்த அதிர்ச்சி தரும் வீடியோக்காய் வெளியாகி உள்ளது. மத்திய பசுபிக் கடல் அருகே இருக்கும் அமெரிக்க மாநிலமான ஹவாய் தீவில் கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து எரிமலை வெடிப்பு நிகழ்ந்து வருகிறது.

இந்த ஒரு எரிமலை மட்டும் கடந்த ஒரு மாதத்தில் 13 முறை வெடித்துள்ளது. கடந்த இரண்டு வாரமாக எரிமலை அதிக அளவில் வெடித்துக் கொண்டுள்ளது.

லாவா வெடிகுண்டுகள் என்றால் என்ன

பொதுவாக லாவா வெடிகுண்டுகள் என்பதை ஆங்கிலத்தில் லாவா பாம் என்று அழைப்பார்கள். எரிமலை ஒன்று வெடிக்கும் போது, அதிலிருந்து வெளியேறும் லாவா அப்படியே வெடிகுண்டு போல சமயங்களில் பாதிப்பை ஏற்படுத்தும். உள்ளே இருக்கு நெருப்பு மொத்தமாக வெளியே வந்து சுற்றி இருக்கும் பகுதியை ஒரே நொடியில் மோசமாக பாதிப்படைய செய்யும். இதில் சுற்றி இருக்கும் பகுதியில் எல்லாம் பாறை துகள்கள் விழும்.

கிலாயூ எரிமலை

ஹவாய் தீவில் உள்ள கிலாயூ என்ற எரிமலைதான் இப்படி வெடித்தது. இதனால் பல லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு அங்கு எரிந்து நாசமாகி உள்ளது. இதனால் 70 சதவீத மக்கள் ஏற்கனவே தீவை காலி செய்துவிட்டார்கள்.1975ல் இருந்தே இந்த தீவில் எரிமலை வெடிக்கும் நிலையில் இருந்து வருகிறது. இதில் பலர் மரணம் அடைந்துள்ளனர்.இந்த லாவா குழம்புகள் பரவிய காரணத்தால், ஹவாயில் உள்ள கபோஹோ என்ற இடமே மொத்தமாக அழிந்து போய் உள்ளது.

நேற்று என்ன நடந்தது

நேற்றும் இதேபோல் ஹவாயில் இருக்கும் போகிகி என்ற பகுதியில் பெரிய பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. மக்கள் அங்கு இருக்கும் சிறிய கடல் பகுதியில், கப்பலில் சென்று கொண்டு இருக்கும் போது, கடலுக்கு அடியில் எரிமலை திடீர் என்று வெடித்து இருக்கிறது. தற்போது வெடித்துக் கொண்டு இருக்கும் கிலாயு எரிமலையின் ஒரு பகுதிதான் இப்போது அங்கு வெடித்து இருக்கிறது. இதனால் அங்கு லாவா வெடிகுண்டுகள் வெடித்து கப்பல்கள் மீது விழுந்து இருக்கிறது.

பெரிய பாதிப்பு

இந்த லாவா வெடிகுண்டுகள், வெடித்து, அந்த கப்பல்கள் மீது விழுந்து இருக்கிறது. இதில் அங்கு சென்ற கப்பல் ஒன்றின் மேல்பகுதி சேதம் அடைந்துள்ளது. இதனால் 23 பேர் மோசமாக காயமடைந்து இருக்கிறார்கள். இந்த லாவா வெடிகுண்டு எப்படி வெடித்தது என்று வீடியோ வெளியாகி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+