டிரம்ப் வென்றதும்.. காசா, லெபனானில் குண்டுமழை பொழியும் இஸ்ரேல்! இரண்டுக்கும் என்ன தொடர்பு?
டெல் அவிவ்: ஒரு பக்கம் அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ள நிலையில், மற்றொரு புறம் இஸ்ரேல் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளை ஒழிக்க வேண்டும் என்பதில் இஸ்ரேல் உறுதியாக இருக்கும் நிலையில், இஸ்ரேல் தனது தாக்குதலை அதிகப்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வென்றுள்ளது அனைவருக்கும் தெரியும். அவர் அடுத்தாண்டு ஜன. மாதம் அதிபராகத் தேர்வாகும் நிலையில், அதற்கான பணிகள் அங்குத் தீவிரமாக நடந்து வருகிறது.

அதிபர் தேர்தலில் டிரம்ப் வென்றுள்ள நிலையில், மத்திய கிழக்கில் பல மாற்றங்கள் நடக்கும் எனத் தெரிகிறது. இதற்கிடையே டிரம்ப் வெற்றிக்குப் பிறகு இஸ்ரேல் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. காசா மட்டுமின்றி லெபனானில் இருக்கும் ஹிஸ்புல்லா மீதும் தாக்குதலைத் தீவிரப்படுத்தி இருக்கிறது.
தீவிரமடையும் தாக்குதல்: குறிப்பாக வடக்கு லெபனானில் இருக்கும் ஐன் யாகூப் நகரின் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்திய நிலையில், அதில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர், மேலும், 15 பேர் காயமடைந்தனர். சிரிய அகதிகள் உட்பட 30 பேர் வசிக்கும் கட்டிடத்தை இஸ்ரேலிய ஏவுகணை தாக்கிய நிலையில், அதில் இருந்தோர் கொல்லப்பட்டுள்ளனர்..
முதலில் இந்தத் தாக்குதலில் 8 பேர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டு இருந்தது. இருப்பினும், படுகாயமடைந்த சிலர் உயிரிழந்த நிலையில், உயிரிழப்புகள் 12க்கும் மேலாக அதிகரித்துள்ளது. அப்பகுதியில் இரண்டு மாடிக் கட்டிடத்தில் இவர்கள் வசித்து வந்த நிலையில், அந்தக் கட்டிடத்தைத் தான் இஸ்ரேல் தாக்கியுள்ளதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
தொடர் தாக்குதல்: முன்னதாக நேற்று திங்கள்கிழமை தெற்கு லெபனானில் உள்ள சிடோன் என்ற பகுதியை அடுத்துள்ள சக்ஸகியே என்ற இடத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி இருந்தது. அதிலும் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டதாகவும் பலர் காயமடைந்ததாகவும் லெபனான் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதேபோல கடந்த ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் நடத்திய தாக்குதலிலும் 54 பேர் கொல்லப்பட்டதாகவும் 56 பேர் காயமடைந்ததாகவும் லெபானான் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கடந்தாண்டு அக். மாதம் முதல் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் லெபனான் நாட்டை சேர்ந்த 3,200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் 14,000+ பேர் காயமடைந்துள்ளதாக அவ் ஜசீரா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
என்ன காரணம்: அமெரிக்காவில் யார் அதிபராக இருந்தாலும் அவர்கள் யூத நாடான இஸ்ரேலை ஆதரிக்கும் நிலைப்பாட்டையே எடுப்பார்கள். இதற்கு யூத லாபி முக்கிய காரணமாகும். ஆனால், ஜனநாயக கட்சி அதிபர்களைக் காட்டிலும் குடியரசு கட்சி அதிகாரிகள் இருக்கும் போது இஸ்ரேலுக்கான ஆதரவு அதிகமாக இருக்கும். இப்போது பைடன் அதிபராக இருக்கும் நிலையில், அவர் அவ்வப்போது இஸ்ரேல் செயல்பாடுகளை வெளிப்படையாகவே கண்டித்து இருக்கிறார்.
ஆனால், அதிபர் தேர்தலில் வென்றுள்ள டிரம்ப் முழுமையாக இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுப்பார் எனத் தெரிகிறது. மேலும், அவர் இஸ்ரேலுக்கு எந்தவொரு கட்டுப்பாடுகளையும் விதிக்க மாட்டார் என்பதாலேயே டிரம்பின் வெற்றிக்குப் பிறகு இஸ்ரேல் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி இருக்கிறது. டிரம்ப் அடுத்தாண்டு ஜன. மாதம் அதிபராகும் நிலையில், அதன் பிறகு மத்திய கிழக்கில் பல மாற்றங்கள் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications