உயிர் பலிகளை தடுக்க உடனே போரை நிறுத்துங்கள்.. ஈரானிடம் வலியுறுத்திய லெபனான்!
பெய்ரூட்: இஸ்ரேலுக்கும்-பாலஸ்தீனத்திற்கும் இடையேயான போர் இப்போது லெபனான் வரை நீண்டிருக்கிறது. லெபனானில் இருந்து இயங்கும் ஹிஸ்புல்லா அமைப்பு போரை தீவிரப்படுத்துவதாகவும், உடனே போரை நிறுத்த வேண்டும் எனவும் லெபனான் பிரதமர் ஈரானிடம் வலியுறுத்தியுள்ளார்.
பாலஸ்தீனத்திலிருந்து ஒரு பகுதி பிரித்து இஸ்ரேல் எனும் நாடு உருவாக்கப்பட்டத்திலிருந்து, மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. தொடக்கம் முதல் மத்திய கிழக்கில் ஆதிக்கம் செலுத்தி வந்த இஸ்ரேல், தற்போதுவரை பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்து வருகிறது. இதற்கு எதிராக அரசியல் பேசிய இயக்கங்களை அந்நாடு தாக்கியிருக்கிறது. இந்த புள்ளியில்தான், ஆயுதம் ஏந்திய இயக்கள் உருவாகின. இதில் ஹமாஸ் எனும் அமைப்பு முக்கியமானது. இதனை தீவிரவாத அமைப்பு என அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் குறிப்பிடுகின்றன.

இந்த அமைப்பானது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்தியது. இதில் பொதுமக்கள் சிலர் கொல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் ஹமாஸ் மீதும் பாலஸ்தீனம் மீதும் போரை அறிவித்தது. இந்த போரில் இதுவரை 45,000க்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். லட்சக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். காசா எனும் பகுதி திறந்தவெளி சுடுகாடாக மாற்றப்பட்டிருக்கிறது.
இதற்கெல்லாம் பழிவாங்கும் விதமாக லெபனானில் இருந்து இயங்கும் ஹிஸ்புல்லா எனும் ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதம் ஏந்திய குழு, இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்தி வருகிறது. ஹமாஸ் போன்று இது சிறிய குழு கிடையாது, ஆயுத பலத்திலும், எண்ணிக்கையிலும் இது மிகப்பெரிய குழு எனவே, இஸ்ரேல் தற்போது இந்த குழுவை குறி வைத்து போரை நீடித்திருக்கிறது. கடந்த மூன்று மாதங்களாக லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சுமார் 3,300க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த உயிர் பலிகள் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. எனவே உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று லெபனான் வலியுறத்த தொடங்கியுள்ளது. நேற்று ஈரான் தலைவர் அலி கமேனியின் ஆலோசகரான அலி லாரிஜானி பெய்ரூட் வந்திருந்தார். அவரை வரவேற்றிருந்த லெபனான் பொறுப்பு பிரதமர் நஜிப் மிகாட்டி, போர் நிறுத்தம் குறித்த கோரிக்கையை வைத்திருக்கிறார்.
இந்த சந்திப்பின்போது ஐநா தீர்மானம் 1701ஐ மேற்கோள் காட்டி, போர் நிறுத்தம் குறித்த பிரதமர் நஜிப் வலியுறுத்தியுள்ளார். இந்த தீர்மானத்தின்படி, தெற்கு லெபனானில் லெபனான் இராணுவம் மற்றும் ஐ.நா. அமைதி காக்கும் படையினர் மட்டுமே செயல்பட வேண்டும் என்று கூறுகிறது. அதாவது ஹிஸ்புல்லா இந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் இது செயல்படுத்தப்படவில்லை.
எனவே, தெற்கு லெபனான் பகுதியிலிருந்து ஹிஸ்புல்லா வெளியேற வேண்டும் என்றும், அதன் மூலம் போர் நிறுத்தப்பட வேண்டும் என்றும் லெபனான் அரசு கூறியிருக்கிறது.
-
கண்கள் சிவந்த டிரம்ப்.. பாகிஸ்தான் எடுக்கும் முடிவு.. ஆனால் "அந்த" ஒரு சிக்கல் இருக்கே! அடுத்து என்ன -
மீண்டும் வெடிக்கும் போர்..? ஈரானின் பதில் தாக்குதலில் ஷாக்கான அமெரிக்கா.. சிக்கிய F-35 பைட்டர் ஜெட்! -
சமாதான பேச்சுவார்த்தைக்கு நடுவே வேலையை காட்டிய டிரம்ப்.. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா திடீர் தாக்குதல் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications