லிபியா சர்வாதிகார அதிபர் முயம்மர் கடாபியின் மகன் சுட்டுக்கொலை.. 4 பேர் கும்பல் வெறிச்செயல்
திரிபோலி: லிபியாவின் நீண்டகால அதிபராக செயல்பட்டு வந்த சர்வாதிகாரி முயம்மர் கடாபியின் மகன் சைஃப் அல்-இஸ்லாம் கடாபி இன்று கொல்லப்பட்டார். அவரது வீட்டுக்குள் நுழைந்த கும்பல் சைஃப் அல் இஸ்லாமை துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளது.
லிபியாவில் நீண்டகாலமாக இருந்தவர் முயம்மர் கடாபி. இவர் சர்வாதிகாரியாக அறியப்பட்டார். இவரது ஆட்சி கடந்த 2011ல் கவிழ்க்கப்பட்டது. முயம்மர் கடாபி கொல்லப்பட்டார். உள்நாட்டு புரட்சியால் லிபியாவில் கடும் மோதல் ஏற்பட்டது. தற்போது லிபியா இரு பிரிவாக செயல்பட்டு வருகிறது. கிளர்ச்சி படைகள் உள்ளன.

2011ம் ஆண்டுக்கு பிறகு இன்னும் லிபியாவில் தேர்தல் நடத்தப்படவில்லை. முயம்மர் கடாபியின் மகன் பெயர் சைஃப் அல் இஸ்லாம். வயது 53. இவர் தனது தந்தை அதிபராக இருந்தபோது நாட்டு மக்களை மிரட்டினார். அரசுக்கு எதிராக போராடியவர்களை மிரட்டினார். போராட்டம் நடத்தினால் ரத்த ஆறு ஓடும் என்று எச்சரிக்கை செய்தார்.
லிபியாவில் நடந்த உள்நாட்டு கலவரம் தொடர்பான வழக்கை விசாரித்த ஹேக்கில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் சைஃப் அல்-இஸ்லாமிற்கு பிடிவாரண்ட் பிறப்பித்தார். அவர் 2011 நவம்பரில் தெற்கு லிபியாவில் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு 2015ல் அவருக்கு மரண தண்டனை விதிககப்பட்ட நிலையில் அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து சைஃப் அல் இஸ்லாம் ரகசிய இடத்தில் வசித்து வந்தார். அடிக்கடி தனது இருப்பிடத்தை மாற்றி வந்தார்.
இந்நிலையில் தான் வீட்டில் இரந்த சைஃப் அல் இஸ்லாம் கடாபி சுட்டு கொல்லப்பட்டுள்ளார். இதனை சைஃப் அல் இஸ்லாம் கடாபியின் வழக்கறிஞர் மார்செல் செக்காடி உறுதி செய்துள்ளார். இதுபற்றி அவர், ‛‛வீட்டுக்குள் நுழைந்த 4 பேர் கும்பல் சைஃப் அல் இஸ்லாம் கடாபியை சுட்டு கொன்றது.
இதுபற்றி சைஃப் அல்-இஸ்லாமின் ஆலோசகர் அப்துல்லா ஒத்மான் அப்துல்ரஹீம் கூறுகையில், ‛‛அடையாளம் தெரியாத நான்கு பேர் வீட்டுக்குள் திடீரென்று நுழைந்தனர். அந்த கும்பல் கண்காணிப்பு கேமராக்களை செயலிழக்க செய்து சைஃப் அல் இஸ்லாமை சுட்டுகொன்றுள்ளனர்'' என்று கூறியுள்ளார். ஆனால் இந்த கொலைக்கான காரணம் தற்போது வரை தெரியவில்லை. தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
-
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications