லிபிய பிரதமருக்கு எதிராக புரட்சி: போராளிகளுடன் சேர்ந்து அரசே கைது செய்தது
திரிபோலி: லிபிய பிரதமர் அலி ஜைடன் கடத்தப்படவில்லை மாறாக அவர் உள்துறை அமைச்சகத்தால் கைது செய்யப்பட்டுள்ளாராம்.
லிபிய பிரதமர் அலி ஜைடன் திரிபோலியில் உள்ள கொரிந்தியன் ஹோட்டலில் இருந்து துப்பாக்கி ஏந்திய போராளிகளால் கடத்தப்பட்டார் என்று செய்திகள் வெளியாகின. இந்நிலையில் அவர் கடத்தப்படவில்லை என்றும் உள்துறை அமைச்சகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அட்டர்னி ஜெனரலின் உத்தரவுப்படி உள்துறை அமைச்சகம் மற்றும் முன்னாள் போராளிகள் சிலரும் கூட்டாக சேர்ந்து செயல்பட்டு அலி ஜைடனை கைது செய்துள்ளார்கள் என்று அல் ஜெசீரா தொலைக்காட்சி சேனல் தெரிவித்துள்ளது. ஊழல் குற்றச்சாட்டு மற்றும் அல் கொய்தா தலைவர் அபு அனஸ் அல் லிபி அமெரிக்க சிறப்பு படையால் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் தொடர்பு ஆகிய காரணங்களுக்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஸ்கை நியூஸ்-அரேபியா டிவி சேனல் தெரிவித்துள்ளது.
ஆனால் அலியை கைது செய்ய தான் வாரண்ட் பிறப்பிக்கவே இல்லை என்று அட்டர்னி ஜெனரல் கூறியதாக அல் அரேபியா சேனல் தெரிவித்துள்ளது.
முன்னதாக ஜைடனை ஆயுதம் ஏந்திய சிலர் கடத்திச் சென்றதாக அவரது செய்தித் தொடர்பாளர் முகமது கப்ர் தெரிவித்தார். மேலும் ஜைடன் போராளிகளால் கட்டத்தப்பட்டதாக நீதித் துறை அமைச்சர் சலா பஷிர் மார்கானி அல் அரேபியா சேனலிடம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications