எதிர்த்து பேச முடியாத "புருஷன்".. கோபக்கார "மனைவி".. ஒரு பரிதாப கொலை!
இண்டியானாபோலிஸ்: இது ஒரு புருஷன் பொண்டாட்டி கதை.. ஆனால் இவர்கள் மனிதர்கள் அல்ல, சிங்கங்கள். புருஷன், பொண்டாட்டி சண்டைக்கு சிங்கங்கள் மட்டும் விதிவிலக்கா என்ன?
அமெரிக்காவில் ஒரு உயிரியல் பூங்கா இருக்கிறது. இங்கு ஒரு சிங்க ஜோடி இருந்தது. 8 வருஷமாக இந்த ஜோடி இந்த பூங்காவில்தான் இருக்கிறது. ஆண் சிங்கம் பெயர் நியாக், வயது 10. பெண் சிங்கம் பெயர் ஜூரி, வயது 12. இந்த ஜோடிக்கு 3 குட்டிகள் உள்ளன.
[தெலுங்கானா தேர்தல்.. 2 லட்சம் இளைஞர்களை கூட்டி மாஸ் பேரணி நடத்த போகும் பாஜக!]

பேமஸ் ஜோடி
இந்த பூங்காவிலேயே இந்த சிங்க ஜோடிதான் ரொம்ப ஃபேமஸ். ஆனாலும் சில மாதங்களாகவே இதுங்களுக்குள் சண்டை இருந்து வந்தது. எதற்காக சண்டை என்று யாருக்கும் தெரியாது. எவ்வளவு சண்டை போட்டுக்கிட்டாலும் ரெண்டுமே ஒரே கூண்டில்தான் இருக்கும். ஆனால் எப்ப பார்த்தாலும் புர்... புர்... என்று மோதியபடி இருக்குமாம்.
இறுக்கி பிடித்தது
அதேபோலதான், சம்பவத்தன்றும் கூண்டுக்குள்ளிருந்து சத்தம் கேட்டது. ஆனால் இந்த கர்ஜனை சத்தம் கொஞ்சம் வித்தியாசமாகவே இருந்தது. இதனை கேட்ட அங்கிருந்த ஊழியர் ஒருவர் ஓடிச் சென்று பார்த்தார். அப்போது பெண் சிங்கம், ஆண் சிங்கத்தின் கழுத்தை இறுக்கிப் பிடித்திருந்தது. இரு சிங்கங்களையும் பிரித்து விட பல முயற்சிகள் நடந்தது.

அமைதி சிங்கம்
ஆனால் பெண் சிங்கம் ஆண் சிங்கத்தை விடவே இல்லை. கெட்டியாக கழுத்தை பிடித்து கொண்டது. இதில் ஆண் சிங்கம் நியாக்கிற்கு மூச்சு திணறி விட்டது. கடைசியில் ஜூரியிடம் தப்ப முடியாமல் நியாக் இறந்தே விட்டது. பொதுவாக காட்டில் ஆண் சிங்கம்தான் டாமினேட் பண்ணும். பெண் சிங்கங்கள் பெரும்பாலும் அமைதியாகவே இருக்குமாம். ஆனால் இங்கு தலைகீழாக போய் விட்டது.

பரிதாபத்தில் பூங்கா
இதுபற்றி பூங்கா ஊழியர்கள் கூறும்போது, நியாக் ரொம்ப நல்ல டைப் என்கிறார்கள். அற்புதமான சிங்கமாம். எவ்வளவோ தடுத்தும் எங்களால் நியாக்கை காப்பாற்ற முடியாமல், இப்படி இழந்துவிட்டு நிற்கிறோம். இதனால் இந்த பூங்காவே சோகத்தில் உள்ளது என்கிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications