தற்கொலைக்காக... நிர்வாணமாக சிங்கத்தின் கூண்டுக்குள் குதித்த இளைஞர்... 2 சிங்கங்கள் சுட்டுக் கொலை
சாண்டியாகோ: தென் அமெரிக்காவில் வனவிலங்கு பூங்கா ஒன்றில் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் இளைஞர் ஒருவர் சிங்கத்தின் குகைக்குள் குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த இளைஞரைக் காப்பாற்றுவதற்காக அங்கிருந்த இரண்டு சிங்கங்களை காவலர்கள் சுட்டுக் கொன்று அவரைக் காப்பாற்றியுள்ளனர்.
தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ள சிலி நாட்டில் சாண்டியோகோ நகரில் வன விலங்கு காப்பகம் ஒன்று உள்ளது. இங்கு ஏராளமான ஆப்பிரிக்க சிங்கங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இங்குள்ள விலங்குகளைப் பார்க்க தினமும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் இங்கு வருவது வழக்கம்.

அந்தவகையில் நேற்று இந்த காப்பகத்திற்கு வந்த பார்வையாளர்களில் ஒரு இளைஞர், யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் தனது ஆடைகளைக் களைந்து விட்டு, நிர்வாணமாக சிங்கங்கள் உலவும் பகுதிக்குள் குதித்தார். இதைக் கண்டு அங்கிருந்த மற்ற பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதற்கிடையே இளைஞரை இரையாக்கிக் கொள்ள அங்கிருந்த சிங்கங்கள் அவரை நோக்கி பாய்ந்து வந்தன. பின்னர், அவை இளைஞரை கடித்துக் குதற தொடங்கின.
இதனைக் கண்காணிப்பு கேமரா மூலம் கவனித்த காவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அங்கு விரைந்து சென்று, இளைஞரைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கையில் இறங்கினர். ஆனால், சிங்கங்களின் பிடியில் இருந்து இளைஞரைக் காப்பாற்ற இயலவில்லை. இதனால், சிங்கங்களை நோக்கி அவர்கள் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். இதில் இரண்டு சிங்கங்கள் உயிரிழந்தன. மற்ற சிங்கங்கள் வனப்பகுதிக்குள் தப்பியோடி மறைந்தன.
பின்னர் பலத்த காயங்களுடன் இருந்த அந்த இளைஞரை மீட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். எனினும் அவர் உயிர் பிழைப்பது கடினம் என மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தின் புகைப்பட தொகுப்பு வீடியோவாக உருவாக்கப்பட்டு இணையத்தில் வெளியாகியுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications